'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' விமர்சனம்
ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார். இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையே வேஸ்ட் என்று வனிதாவை தோழிகள் சிலர் தூண்டிவிடுகிறார்கள். இதனால், 40 வயதில் இருக்கும் வனிதா தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.
ஆனால், கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று கூறி வனிதாவை புறக்கணிக்கிறார். இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே கதை...
இப்படத்தை பெரும்பாலும் பாங்காக்கில் தான் எடுத்துள்ளார்கள். அதனால் அங்குள்ள கலாச்சாரம், அவர்கள் அணியும் உடை என ஒரு புதுவிதமான கதையுலகத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் வனிதா.
ஒரு பெண்களின் உளவியலை மிகவும் எதார்த்தமான புரிதலோடு கையாண்டு இருக்கிறார். சில துணிச்சலான விஷயங்களையும் அடல்ட் காமெடி ஜானரில் சற்று நகைச்சுவையாக முயற்சி செய்திருக்கிறார்கள். சிவராத்திரி பாடல் கிளுகிளுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ராபர்ட் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். நண்பர்களாக வரும் கணேஷ், ஆர்த்தி, நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளனர். அம்மாவாக நடித்து இருக்கும் ஷகிலா மற்றும் அவருடைய நண்பர்களாக வரும் பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி என பலரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கதை சரியாக இல்லை... கிளாமர் காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது...... இசையில் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' கிளுகிளுப்பு.....
RATING: 2.4/5
கருத்துரையிடுக