செப்டம்பர் 2025

Landmark National Study Links India’s Adverse Dietary Profile to Surging Diabetes and Obesity



Chennai

According to the latest evidence generated from the Indian Council of Medical Research-India Diabetes (ICMR-INDIAB) study published in Nature Medicine, India’s rapidly changing eating habits are fueling dramatic rises in diabetes and obesity. The cross-sectional survey was conducted in collaboration with Madras Diabetes Research Foundation (MDRF), and included a nationally representative sample of 1,21,077 Indian adults from urban and rural areas of 36 states, union territories and the National Capital Territory (NCT)-Delhi. Detailed dietary data from every fifth participant, was used to characterize India’s dietary profile across regions and examine inter- and intra-regional differences in macronutrient intakes and associated metabolic risk.

 

What did the study find?

The major findings of the Indian dietary profiles in terms of macronutrients’ (carbohydrate, fat and protein) intake were as follows:

 

Carbohydrate intake:

  • While there was a huge diversity in intakes of nutrients across the states, most Indians get a staggering 62% of their calories from carbohydrates, one of the highest in the world.
  • Much of this comes from low-quality sources like white rice, milled whole grains, and added sugar.
  • White rice dominates diets in the South, East, and Northeast, while wheat is more common in the North and Central regions.
  • Millets as a main staple are consumed in only three states: Karnataka, Gujarat, and Maharashtra with major types including finger millet (ragi), sorghum (jowar) and pearl millet (bajra).
  • High sugar intake is concerning: 21 states and union territories exceeded the national recommendations of <5%E for added sugar intake

 

Dietary fat intake:

  • While average total fat intake stayed within national guidelines (≤30% of energy), saturated fat intake exceeded the recommended threshold for metabolic health (<7% of energy) in all but four states (Jharkhand, Chhattisgarh, Arunachal Pradesh, and Manipur).
  • Consumption of monounsaturated and omega-3 polyunsaturated fats remain low across regions

 

Protein intake:

  • Overall protein intake in India is suboptimal, averaging 12% of daily calories with the highest intake (14%E) in the Northeast region.
  • Most protein in Indian diets comes from plant-based foods like cereals, pulses and legumes (9%E).
  • Intakes of dairy and animal protein varied widely but intakes remained low nationwide (2%E and 1%E respectively).

 

Carbohydrates intake & metabolic risk:

High carbohydrate calories and its major food sources (white rice, milled whole grains and added sugar) were associated with increased metabolic risk (diabetes, prediabetes and obesity).

 

A simple diet tweak may help cut the metabolic risk:

  • Modelled substitution analysis found that replacing just 5% of daily calories from carbohydrates with plant or dairy proteins significantly lowers risk of developing diabetes and prediabetes.
  • Importantly, replacing carbs with red meat protein or fats, did not have the same protective effect.

 

Dr R.M. Anjana, lead author and President, Madras Diabetes Research Foundation, emphasized “Our findings clearly show that typical Indian diets, heavy in carbohydrates from white rice or whole wheat flour, and low in quality protein are putting millions at risk. Simply switching from white rice to whole wheat or millets is not enough unless total carbohydrate intake decreases and more calories come from plant or dairy proteins.”

Mrs. Sudha, joint first author, and Sr. Scientist & Head, Department of Foods Nutrition & Dietetics Research, MDRF noted that similar metabolic risks were observed across all regions, regardless of the main carbohydrate sources.

Dr V. Mohan, senior author of the paper and Chairman, Madras Diabetes Research Foundation says “These nationwide findings should inspire policy reforms, especially regarding food subsidies and public health messaging to help Indians shift towards diets richer in plant-based and dairy proteins, and lower in carbohydrates and saturated fats.”

Dr Shilpa Bhupathiraju, co-senior author stated, “Reducing saturated fat remains a challenge. Encouraging healthier oils and more pulses and legumes could make a major difference to the health of the Nation.”

Dr V. Mohan, stressed that such dietary changes can help reverse current nutrition trends, address widespread protein gaps, and improve overall diet quality. Healthcare is a state government matter and these findings will be of interest to states to consider the right healthier food subsidies. This certainly requires a multisectoral approach - across health, agriculture, food processing and welfare sectors - to realign food subsidies and public messaging.

The Indian Council of Medical Research-India Diabetes (ICMR-INDIAB) study, was funded by the ICMR and Health Ministry and was done over 15 years. MDRF was the national coordinating centre for this study.

ஆரம்பகால எழுத்தறிவு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற வகையில் கங்காரு கிட்ஸ், சென்னையில் 6 மையங்களில் விஜயதசமியைக் கொண்டாட உள்ளது


சென்னை: 

இந்தியாவின் தலைசிறந்த சர்வதேச பாலர் பள்ளி நிறுவனமான கங்காரூ கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரி ஸ்கூல், ஒரு குழந்தையின் கல்விப் பயணத்தின் துவக்கத்தைக் குறிக்கிற ஒரு புனிதமான இந்திய மரபான விஜயதசமியைக் கொண்டாட உள்ளது. சென்னையில் குறிப்பாக தென்னிந்தியாவில் வித்யாரம்பம் என்று அறியப்படுகிற இந்தப் பழமையான சடங்கு,  எழுத்துக்கள் மற்றும் கற்றல் உலகில் குழந்தைகள் நுழைவதைக் குறிக்கிறது. குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்கவும், நம்பிக்கையுடன் வெளிப்படுத்தவும், மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க  வடிவமைக்கப்பட்ட அதன் சிறப்பு ICAN பாடத்திட்டத்தின் மூலம் அதன் உலகத் தரம் வாய்ந்த ஆரம்பகால குழந்தை பருவ கல்வி தத்துவத்துடன் கலாச்சார பாரம்பரியத்தை கலப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையில், 150க்கும் மேற்பட்ட மாணவர்களை ஈடுபடுத்துகின்ற இந்த கொண்டாட்டம், அடையாறு, அண்ணாநகர், ஐயப்பன்தாங்கல், மடிப்பாக்கம், பெரம்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கங்காரூ கிட்ஸ் மையங்களில் நடைபெறும்.   

கங்காரூ கிட்ஸ் இல் நடைபெறும் இந்த விஜயதசமி கொண்டாட்டம், வழக்கமான வகுப்பறை நடைமுறைகளைத் தாண்டிய, வளமான கற்றல் அனுபவங்களை உருவாக்கும் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும்.  பாரம்பரிய பழக்கவழக்கங்களை அதன் தனியுரிம சர்வதேச கல்வியியலுடன் சிந்தனையுடன் இணைப்பதன் மூலம், அவர்கள் எழுத்தறிவுக்கு மட்டும் அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் முழுமையான வளர்ச்சியின் ஒரு பயணத்தையும் துவங்க ஊக்குவிக்கப்படுகின்ற ஒரு சூழலை கங்காரூ கிட்ஸ் குழந்தைகளுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு குழந்தையும் சமூக, உணர்வு ரீதியான மற்றும் அறிவாற்றல் சார்ந்த வளர்ச்சியுடன் கல்வியில் சிறந்து விளங்குவதை வளர்க்கும் ஒரு வலுவான அடித்தளத்துடன் தங்கள் கல்விப் பாதையைத் தொடங்குவதை இந்த தனித்துவமான அணுகுமுறை உறுதி செய்கிறது.

விஜயதசமி கொண்டாட்டத்தை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்ற, கங்காரூ கிட்ஸ், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கின்ற வகையில் ஒரு தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகளை ஏற்பாடு செய்யும். 

கல்வி உலகில் அவர்களின் அடையாள நுழைவைக் குறிக்கின்ற வகையில், குழந்தைகள் தங்கள் முதல் எழுத்துக்களை தானியங்களில் அழகாக பொறித்திருப்பார்கள். முறையான கல்வியில் அவர்களின் முதல் படியை மேலும் வளப்படுத்துகின்ற சடங்குகளைத் தொடர்ந்து, கல்வியாளர்கள், குழந்தைகளை ஊடாடும், விளையாட்டு சார்ந்த கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவர்.  இளம் மாணவர்களிடையே மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் கற்றலின் மீதான அன்பை வளர்க்கின்ற அதே வேளையில், கல்வியின் முக்கியத்துவத்தையும் புகுத்துவதில் கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த அனுபவம் உதவும்.

லைட் ஹவுஸ் லேர்னிங் (கங்காரூ கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரி ஸ்கூல்) Pre-K Division, தலைமை நிர்வாக அதிகாரி, KVS ஷேஷசாய் கூறுகையில், கங்காரூ கிட்ஸ் இல், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் பயணத்திலும் உள்ள ஒவ்வொரு கட்டத்தையும் வளர்ப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.  

கலாச்சார மரபுடன், எதிர்கால கற்றலின் வாக்குறுதியை இணைக்கும் ஒரு அற்புதமான பாரம்பரியமாக விஜயதசமி இருக்கிறது. வரவிருக்கும் உலகத்திற்குத் தயாராக இருக்கும், ஆர்வமுள்ள, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் நன்கு வளர்ந்த கற்பவர்களை ஆயத்தப்படுத்துகின்ற எங்கள் அர்ப்பணிப்பு    கல்வியைத் தாண்டி விரிவடைகிறது."என்று கூறினார்.

சிறப்பு ஆரம்பகால குழந்தை பருவ கல்வியில் ஒரு முன்னோடியாக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற இந்த முயற்சியின் மூலம், கங்காரூ கிட்ஸ், பாரம்பரியத்தின் மீதான ஒரு மரியாதை, கண்டுபிடிப்புக்கான ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் மீதான ஒரு அன்பு ஆகியவற்றை குழந்தைகளுக்குள் உட்புகுத்துவதன் மூலம் ஆரம்பகால கற்றலின் அடித்தளத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


'வீர தமிழச்சி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!



மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் - இளயா -  சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'வீர தமிழச்சி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.


அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்' வீர தமிழச்சி' திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார்- பேரரசு -ராஜகுமாரன்- விஜய் ஸ்ரீ - தயாரிப்பாளர் அன்புச்செல்வன் - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், ''தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் 'வீர தமிழச்சி' உருவாக்கப்பட்டிருக்கிறது.  இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளோம். இந்த 'வீர தமிழச்சி'யை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து, வெற்றி தமிழச்சியாக மாற்றி தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ''தயாரிப்பாளர்கள் நல்லதொரு இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கட்டிட தொழிலாளியான இயக்குநரின் கனவை நனவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.


இயக்குநர் கட்டிட தொழிலாளி என்பதால் எந்த கல்லை எங்கு வைக்க வேண்டும், எந்தக் கலவையை எங்கு பூச வேண்டும், ஜன்னலை எங்கு வைக்க வேண்டும், வாசக்காலை எங்கு வைக்க வேண்டும், பெட்ரூம் எப்படி இருக்க வேண்டும், கிச்சன் எப்படி இருக்க வேண்டும், எந்த அகலம்- எந்த நீளம் இருக்க வேண்டும்,  என்பதை பார்த்து பார்த்து தெரிந்து கொண்டு படைப்பை உருவாக்கி இருக்கிறார் என முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு இயக்குநரையும் கட்டிட கலைஞருடன் தான் ஒப்பிடுவார்கள். இவர்கள்தான் கதையை எங்கு, எப்படி ஆரம்பிப்பது, எப்படி எடுத்து செல்வது, அந்த கதையில் கதாநாயகனின் பிம்பம் என்ன, கதாநாயகியின் வேலை என்ன,  நாம் சொல்லக்கூடிய சாராம்சம் என்ன, இந்த கதையின் முடிச்சு என்ன என ஏராளமான இன்ஜினியரிங் வேலைகளை பார்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் பொறுப்பு. நானும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த கட்டிட கலைஞராக இருந்தவன் தான். அதனால் இந்தப் படம் நன்றாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்.


தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தழுவி இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.


இந்தப் படத்தில் பாடல்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற 'தீம் சாங்'கும் நன்றாக இருக்கிறது.


ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்டான இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் - இளயா போன்றவர்கள் நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.


இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படத்தை 40 அல்லது 50 திரையரங்குகளில் தினசரி மூன்று கட்சியாகவோ நான்கு காட்சியாகவோ திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகளாக ஒரு படம் வெளியானால் தான் 'மௌத் டாக்' மூலம் படத்திற்கான விளம்பரம் சில நாட்களில் கிடைக்கும்.‌ அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் மக்களை சென்றடையும்.


இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தக் குழுவினருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன்,'' என்றார்.


சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புசெல்வன் பேசுகையில், ''வீர தமிழச்சி என்றால் தமிழக பெண்கள்தான் என உலகத்திற்கே தெரியும். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியாக  இருந்தது. தயாரிப்பாளர் கடினமாக உழைத்து இப்படத்தினை வெளியிட முயற்சி செய்து வருகிறார்.  இந்த தயாரிப்பாளரின் கடின உழைப்பிற்காகவும், நல்ல மனதிற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.


படம் வெளியாகும் நாளான வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிடாதீர்கள் என ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.‌ சிறுபட தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்,'' என்றார்.


இயக்குநர் ஷரவண சுப்பையா பேசுகையில், ''வீரம் என படம் வந்திருக்கிறது. 'தமிழ்' என படம் வந்திருக்கிறது. 'தமிழன்' என படம் வந்திருக்கிறது. 'தமிழச்சி' என்றொரு படம் வந்திருக்கிறது. இது 'வீர தமிழச்சி' பெயரை கேட்டாலே நல்ல அதிர்வு இருக்கிறது.


தமிழ் மொழி என்பது உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு யுனிக்கான வார்த்தை. அதற்கான இலக்கணம் இருக்கிறதே.. 'த' உயிரெழுத்து 'மி ' என்பது மெய்யெழுத்து என தமிழுக்குள் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. இப்படி தமிழிலிருந்து வரும் மரபணு இருக்கிறதே, அதன் ரத்தத்தில் வீரம் இயல்பாகவே இருக்கும், உணர்வும் இருக்கும். இதனை நாம் இதிகாசங்களில் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். இந்தப் படத்தில் அதனை நாம் காணவிருக்கிறோம். ஒரு பெண் தன்னுடைய பழி தீர்க்கும் உணர்வை வன்முறையால் தீர்த்துக் கொள்கிறாள் என்பது போன்ற ஒரு கன்டென்ட்டில் இந்த படம் இருக்கும் என நம்புகிறேன்.  அத்துடன் இந்த திரைப்படத்தின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சில சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பேசி இருக்கிறார்கள். எனவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.


பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புதுமைப்பெண்' திரைப்படம், இந்த சமூகத்தில் பெண்களுக்கான புரட்சியை உண்டாக்கிய படம் என குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் அந்த படம் பேசப்பட்டது. இந்த காலத்தில் 'வீர தமிழச்சி' படம் உருவாகி இருக்கிறது. கமர்ஷியலாக இல்லாமல் இது போன்ற கன்டென்ட் உள்ள படத்தினை தயாரித்ததற்காக தயாரிப்பாளரை பாராட்டுகிறேன்.


'சட்டம் ஒரு திறந்த புத்தகம். அதனால் அந்த சட்டத்தை பற்றி தெரியாதது குற்றம். அத்தகைய சட்டத்தை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதும் குற்றம்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரம் சட்ட மேதை அம்பேத்கரிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் படம் தெரிவிக்கும் கருத்து மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசை, பாடல்கள் நன்றாக உள்ளன. இந்தப் படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் அதாவது கதாநாயகிக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதமும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது,'' என்றார்.


இயக்குநர் ராஜகுமாரன் பேசுகையில், ''பெண்களுக்கு அடிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அடித்தால் நம்மால் தாங்க முடியாது என்பதுதான் உண்மை. அவர்கள் நம்மை அடிக்காமல் இருக்கிறார்களே என்பது வரை தான் நமக்கு அது பெருமை. அவர்கள் மிக பயங்கரமான மன உறுதியும், உடல் வலிமையும் மிக்கவர்கள். நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு வலிமை குறைவு தான்.


தங்களை மலை போல் காண்பிப்பதில் ஆண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. தங்களை மலர் போல் காண்பிப்பதில் பெண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. ஆனால் நாம் காண்பது மவரல்ல, அவர்களிடம் இருப்பது தான் மலை. நான் இதனை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நிறைய பெண்களிடம் அடி வாங்கி இருக்கிறேன் என்னுடைய அம்மாவை போன்ற கம்பீரமான - மலை போன்ற உறுதியான பெண்மணியை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அவர்களை நான் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்திருக்கிறேன்.


அதேபோல் தேவயானியை, பார்ப்பதற்கு நீங்கள் எல்லாம் புஷ்பம் போல் இருக்கும் அந்த  பெண் அவ்வளவு உறுதியான, வலிமையான, ஒரே அடியில் ஒரு டன் அல்ல இரண்டு மூன்று டன் வெயிட் உடன் அடிக்கக்கூடிய ஒரு பயங்கரமான பெண்மணி. இதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள். ஆண்களுக்காக, குழந்தைகளுக்காக மென்மையாக நம்மிடம் நடந்து கொள்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது நடிகை சுஷ்மிதா சுரேஷிற்கு பயிற்சி அளிக்கவில்லை என்றாலும்... அவர் ஆக்ஷன் காட்சிகளில் பயங்கரமாக தான் நடித்திருப்பார். அவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த ஆக்ஷன் ஜானரில் நடிக்கக்கூடிய நடிகைகளே இல்லை‌, நீங்கள் அந்த இடத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சிறுசிறு குறும்படங்களை இயக்கி தன்னை செதுக்கி கொண்ட பின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் பாரதி. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்,'' என்றார்.

நடிகை சுஷ்மிதா சுரேஷ் பேசுகையில், ''வீர தமிழச்சியாக என்னை தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என்னுடைய பாதுகாப்பையும், என்னுடைய சௌகரியத்தையும் மனதில் வைத்து பணியாற்றினார். குறிப்பாக நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் நடிக்கும் போது நான் பயந்தேனோ, இல்லையோ அவர் பயந்து கொண்டே இருந்தார். என் மீது அக்கறை செலுத்தி பாதுகாத்த ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் நடிக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது உடலில் வலி உண்டானது, இருந்தாலும் பொறுத்துக் கொண்டு படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக பழகினார்கள். அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெண்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- அதனை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்பதை கற்றுத் தரும் படமாக இது இருக்கும்.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான எனக்கு ஏன் நடிப்பு என பலர் கேள்வி கேட்டனர். ஆனால் என்னுடைய விருப்பம் நடிப்பாக இருந்ததால் ஆடிஷனுக்கு பொறுமையுடன் என்னுடைய பெற்றோர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கினார்கள்.  நிறைய பெண்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், '''திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை கலைமாமணி விவேகா எழுத, மற்றொரு பாடலை அறிமுக பாடலாசிரியர் செந்தில் ராஜா எழுதியிருக்கிறார். இந்த பாடலை எழுதிய பின் தான் மெட்டமைத்தோம். மூன்றாவதாக வீர தமிழச்சி என்ற பெயரில் ஒரு டைட்டில் சாங் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி போராடுகிறார் என்பதுதான் இதன் கதை.‌ இந்தப் படத்தில் நாயகி சுஷ்மிதா சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கால விஜயசாந்தியை திரையில் பார்ப்பது போல் இருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது, வாழ்த்துகள்.

இந்த படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதனை முழுமையாக தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். திரையுலகில் இவ்வளவு அன்பான பண்பான தயாரிப்பாளரை பார்க்க முடியாது. இவரிடம் நாம் சம்பளம் கொடுக்கிறோம் என்ற அதிகாரம் எப்போதும் இருக்காது, இவர்கள் தொடர்ந்து படத்தை தயாரிக்க வேண்டும்,'' என்றார்.

இயக்குநர் சுரேஷ் பாரதி பேசுகையில், ''அடிமட்ட கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நான் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன் என்றால், இதற்கு முதல் காரணம் என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் தான். இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இந்த ஐந்து வருடங்களிலும் என்னையும், என் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்வது என் மனைவி தான்.

2016 ஆம் ஆண்டில் என்னுடைய  'கொஞ்சம் கொஞ்சமாக..' எனும் முதல் குறும்படத்திற்கு, சிதம்பரம் காட்மாடி பகுதியை சேர்ந்த என் குருநாதர் பழனிச்சாமி தான் ஒரு லட்ச ரூபாயை வழங்கினார். இந்த குறும்படம் சிறந்த விழிப்புணர்வுக்கான குறும்படம் என தேர்வு செய்யப்பட்டு,  தமிழக முதல்வரிடம் விருதினை பெற்றேன். என்னுடைய இரண்டாவது குறும்படமான 'தாய்'. இணையத்தில் வெளியாகி இதுவரை 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. இதுவரை நான் 18 குறும்படங்களை இயக்கியிருக்கிறேன், 36 விருதுகளை வென்றிருக்கிறேன். நான் இயக்கினால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் படைப்பை தான் இயக்குவேன் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதற்குப் பிறகு ஒரு கதையை சினிமாவுக்காக தயார் செய்துவிட்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகி கதையை சொன்னேன். மகிழினி கலைக்கூடத்தில் கதையை சொன்னேன்.‌ அவர்களால் படத்தை தயாரிக்கும் அளவிற்கு பொருளாதாரமில்லை, அதனால் இந்த திரைப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கத் தொடங்கினோம். ஒரு வார காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை அறிந்து தயாரிப்பாளர் நித்தியானந்தம் எங்களுடன் இணைந்தார்.‌ அதன் பிறகு முழு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று அவர் சொன்னார். என்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து என்னுடைய இயக்குநர் கனவை நனவாக்கியவர் தயாரிப்பாளர் நித்தியானந்தம். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்தை தொடங்கும் போது 60 லட்சம் ரூபாய் தான் பட்ஜெட் என்றேன். ஆனால் தற்போது மூன்றரை கோடி ரூபாயில் படம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த திரைப்படம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம். பெண்கள் எங்கு எப்போது பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும், இதற்கு என்ன தீர்வு என அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

இந்தப் படத்தின் மூலம் நான் என்ன சொல்ல விரும்பினோனோ அது ஆறு மாதத்திற்கு முன்னதாக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் சட்ட திருத்தமாக கொண்டு வந்திருக்கிறார். நான் இது தொடர்பாக படம் எடுத்தது மூன்று ஆண்டுகளுக்கு முன். நான் மக்களுக்கு எதனை தீர்வாக சொல்ல நினைத்தேனோ அதை சட்ட திருத்தமாக கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை. இந்த படம் ஆறு மாதம் மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தால் எங்கள் கதை தான் ஹீரோ. இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரமும் இருக்கிறது.

நான் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகன். கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தியை கேட்டு மூன்று நாட்கள் உறக்கமில்லாமல் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தேன். கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்து தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். விஜயகாந்தை வைத்து நான் என்ன திரைப்படத்தை இயக்க வேண்டும்cஎன நினைத்தேனோ, அவர் இல்லாததால் ஒரு புது ஹீரோயினை வைத்து இயக்கியிருக்கிறேன். அந்த வகையில் ஒரு பெண் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

ஆர்.வி. உதயகுமார், பேரரசு போன்றவர்களை பார்த்து ஆக்ஷன் திரைப்படங்களை இயக்க வேண்டும் என ஆசை.

தமிழ் மொழியில் இல்லாமல் வேறு மொழியில் 50க்கும் மேற்பட்ட ஆக்ஷன் திரைப்படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோயின் ஆக்ஷன் செய்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏராளமான ரெஃபரன்ஸ்களை பார்த்த பிறகு தான் படத்தின் நாயகியான சுஷ்மிதா சுரேஷுக்கு ஆக்ஷன் காட்சிகளை நானும் ஸ்டாண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவும் விவாதித்து வைத்தோம்.

ஒரு தமிழ் பெண்ணை தலைகீழாக கட்டி வைத்து தொங்கவிட்டு அவருடைய நெஞ்சில் கால் வைத்து எட்டி உதைக்கும் காட்சியை வைத்திருக்க மாட்டார்கள், இத்தகைய காட்சி தமிழ் சினிமாவில் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் எந்த தமிழ் படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை.  இந்தக் காட்சியில் நடிப்பதற்கு நடிகை சுஷ்மிதா முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

நான் இதுவரை எந்த படப்பிடிப்பையும் வேடிக்கை கூட பார்த்ததில்லை. ஆனால் ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு என்னுள் ஐக்கியமாகி இருக்கும் விஜயகாந்த் தான் காரணம்.  இன்று கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். அதனால் அவருடைய ஆசி இந்த படத்திற்கு பரிபூரணமாக இருக்கும்.

மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் திறமை இருக்கிறது. அதனை வெளிக்கொணர வேண்டும். எவரையும் பார்த்து அஞ்ச கூடாது. எவரையும் பார்த்து பிரமிக்க கூடாது. உனக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். இதற்கு முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் இயக்குநராகி இருக்கிறேன். ‌

எங்கள் ஊரில் சாதாரண கட்டிட தொழிலாளியான எனக்கு இன்று கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 25 கட் அவுட்கள் வைத்திருக்கிறார்கள்,'' என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், ''குடும்பத்தில் நடைபெறும் உண்மைகளை யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் வீரத்தமிழர். அந்த வகையில் எங்கள் இயக்குநர் ராஜகுமாரன் தான் சிறந்த வீரத்தமிழர். அவருடைய பேச்சில் உண்மை படார் படார் என வெளிப்பட்டது.  நாம் இதுவரை தேவயானி மேடத்தை சாப்ட் ஆக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டில் அவர் ஆக்ஷன் ஹீரோயின் என்பது இப்போதுதான் தெரியும்.

கட்டிட தொழிலாளியாக இருந்து இயக்குநராக உயர்ந்தவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.

முயற்சிக்கும், விடாமுயற்சிக்கும் என்ன வித்தியாசம், என்றால், முயற்சியை நாம் செய்து கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் முயற்சி நம்மை விடாது. அதுதான் விடா முயற்சி.

வீட்டை நன்றாக கட்ட வேண்டும் என்றால் நல்லதொரு கொத்தனார் வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு நார் வேண்டும் ஒன்று நாத்தனார். மற்றொன்று கொழுந்தனார். இயக்குநர் நல்லதொரு கொத்தனார். படத்தில் பாட்டு எங்கு வைக்க வேண்டும்? பைட்டு எங்கு வைக்க வேண்டும்? என தெரிந்து வைத்திருக்கிறார்.

வீர தமிழச்சி யார் என்றால்.. புருஷன் கஷ்டப்படும் போது பக்க பலமாக இருந்து, அவருடைய திறமையை வெளிப்படுத்துபவர் தான் வீர தமிழச்சி. அப்படிப் பார்த்தால் இயக்குநருடைய மனைவி தான் வீர தமிழச்சி.

சில தலைப்புகளை கேள்விப்படும் போது தான் எப்படி இந்த தலைப்பை இதுவரை தவற விட்டார்கள் என்று தோன்றும். அந்த வகையில் இந்த வீர தமிழச்சி டைட்டில் நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் தான் வேலு நாச்சியார் போன்ற ஏராளமான வீர தமிழச்சிகள் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்தான் வீர தமிழச்சி.

வீர தமிழச்சி என்பது அடிப்பதோ உதைப்பதோ.அல்ல. செருப்பால் அடிப்பதோ கைகளால் அடிப்பதோ அல்ல. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மிருகம் தன்னை சிதைத்ததை இந்த சமூகத்தில் துணிச்சலுடன் புகாராக அளித்த பெண் தான் வீர தமிழச்சி. கராத்தே கற்பது, துப்பாக்கி சுடுவது, சிலம்பம் சுற்றுவது, இதெல்லாம் வீரமல்ல. வீரம் என்பது உடலில் அல்ல, மனதில் இருக்க வேண்டும். இந்த படத்தில் இதைத்தான் நான் பார்த்தேன். ஒரு பெண் அநியாயத்திற்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும், அதை சொல்வது தான் இந்த வீர தமிழச்சி,'' என்றார்.

‘இரவின் விழிகள்’ டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா!



சென்னை:

கேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’.  இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். 

 
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்…. 
 
மேலும் முக்கிய வேடங்களில்  நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ்  படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். 
 
சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. 
 
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இந்த நிகழ்வில்
 
*இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பேசும்போது,*
 
“படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை  நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது.. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார். 
 
படத்தொகுப்பாளர் ராமர் படத்தொகுப்பை முடிந்தபின், படம் நன்றாக இருக்கிறது.. இன்னும் இரண்டு பாடல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். 
 
மக்களை திருப்திப்படுத்துவதையும் தாண்டி இங்கே வியாபாரம் என்று ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளரும் நஷ்டப்படக்கூடாது என்பதால் அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தார்.
 
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. 
 
ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம். 
 
இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.
 
இசையமைப்பாளர் நான் என் மனதில் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை அழகான பாடல்களாகக் கொடுத்தார். 
 
ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்கு என்னை கம்பியில் கட்டி தூக்கியவர்கள், இரண்டு மூன்று நிமிடம் கீழே இறக்காமல் அந்தரத்திலேயே தொங்க விட்டு விட்டனர். அந்த சில நிமிடங்கள் கீழே பார்க்கும் போது மிகவும் திகிலாக இருந்தது” என்று பேசினார்.
 
*சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் விஷ்ணு சரண் பேசும்போது,* 
 
“இந்த படத்தில் நான் பாடியிருக்கும் பாடல் படத்தின் ஜானரை வெளியே இருப்பது போல கொஞ்சம் ஸ்டைலாக  இருக்கும். இசையமைப்பாளரைப் பொருத்தவரை ஒரு பாடலைப் பாடி ரெக்கார்டிங் செய்யும் வரை அவர் உட்காரவே மாட்டார்” என்று பேசினார்
 
*பாடலாசிரியர் அரவிந்த் அக்ரம் பேசும்போது,*
 
“இந்த படத்தில் ஐந்து பாடல்களை உருவாக்கியதில் எனக்கும் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் என ஐந்து விதமான பின்னணி கதைகள் இருக்கின்றன. என் பெயர் அக்ரம்… இசையமைப்பாளர் பெயர் அசார். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முதல் பாடல் வாடா கருப்பா.. எப்படி எங்களை நம்பி இயக்குநர் இந்த பாடலைப் படைத்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது” என்று பேசினார்.
 
*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*
 
“சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.. நாங்களும் தமிழிலிருந்து ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பும் படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருந்தோம். ஆனாலும் இந்த வருடம் அங்கே போட்டியிட தமிழ் படம் எதுவும் தேர்வாகவில்லை என்பது வருத்தம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்கள் இடம்பெறுகின்றன. இங்கே தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ? சிறிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் படங்கள் எந்த திரையரங்குகளில் எந்த காட்சி ஓடுகிறது என்கிற தகவல் கூட தெரிவதில்லை. 
 
என்னுடைய பொன்னுமணி படம் வெளியான காலத்தில் கூடவே 16 படங்கள் வெளியாகின. அதில் 12 படங்கள் வெற்றி பெற்றன. அது போன்று ஒரு காலம் வேண்டும், திருப்பிக் கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைக்கிறோம்.
 
ரசிகர்கள் மொத்தமாக பல படங்களை பார்ப்பதற்கு வசதியாக வெளிநாடுகளில் இருப்பது போல சலுகைகளை திரையரங்கு உரிமையாளர்கள் அறிவியுங்கள்.
 
இப்போதும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தான் இந்த படம் பேசுகிறது. படத் தயாரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படத்தின் பப்ளிசிட்டிக்கு இப்போது யாரும் கொடுப்பதில்லை. அதுவே மைனஸ் ஆக அமைந்து விடுகிறது. 
 
பல படங்கள் இசை வெளியீட்டு விழாவின்போது தான் இப்படி ஒரு படம் இருக்கிறதா? என்பதே தெரிய வருகிறது. படத்தை மோசமாக விமர்சிக்கிறார்கள் என வலைதளக்காரர்களை திட்டுகிறோம். தப்பாக கூட நம் படத்தைத்  திட்டுகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான்” என்று பேசினார்.
 
*இசையமைப்பாளர் ஏ.எம் அசார் பேசும்போது,*
 
“இரவின் விழிகள் ஒரு அருமையான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பாடல்கள் ஐந்து விதமான ஜானரில் இருக்கும். அரவிந்த் அக்ரம் ஒரு முறை பாடல் எழுதிக் கொடுத்தார் என்றால் அதில் பெரும்பாலும் திருத்தமே இருக்காது. படத்தின் பாடல்களுக்கேற்ற விஷுவல்சும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
 
*நாயகி நீமா ரே பேசும்போது,*
 
“மிஸ்டர் பர்ஃபெக்க்ஷனிஸ்ட் என்று இயக்குநர் ராஜேஷை சொல்லலாம். படப்பிடிப்பில் அவருக்கு எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லை என்றால் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரம் கழித்துக் கூட என்னை அழைத்து சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்.. அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அவரைத் தொடர்பு கொண்ட போது ஹீரோவான அவரது காட்சிகளே கொஞ்சம் திருப்தி இல்லை என்று அதை மீண்டும் எடுப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொன்றிலும் பர்ஃபெக்ஷன் பார்த்து பார்த்து இரவின் விழிகள்  படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநரை பார்க்கும்போது எல்லாம் அந்நியன் படம் தான் ஞாபகத்திற்கு வரும். 
 
படப்பிடிப்புக்கு முன்பு அம்பி போலவும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன் போலவும் மாறிவிடுவார்” என்று பேசினார்
 
*நடன இயக்குனர் எல்.கே அந்தோணி பேசும்போது,*
 
“முதலில் ஒரு பாடலுக்கு தான் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த ஒரு பாடல் சிறப்பாக வந்திருப்பதை பார்த்துவிட்டு, நான்கு பாடல்களையும் என்னையே நடனம் அமைக்கச் சொல்லிவிட்டார்கள். நான் கேட்பதற்கு முன்பே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தயாரிப்பாளரே கதாநாயகனாகவும் நடித்திருப்பதால் அவரை ஆடவைப்பதற்கு எக்ஸ்ட்ராவாக சம்பளம் கொடுத்தார்கள்” என்று பேசினார்.
 
*தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன் பேசும்போது,*
 
“வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் எனக் கூறிவிட்டேன். 
 
நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டது தான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வராவிட்டால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார். 
 
ஒரு நாள் காலை சாப்பாடு கூட சாப்பிட விடாமல் என்னை வைத்து காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். மக்களுக்கு  விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது இந்த படம் ஒரு விதையாக விதைக்கப்பட்டு இருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி அதில் உள்ள கருத்து என்கிற பழத்தை சாப்பிடுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
 
*நடிகர் சிசர் மனோகர் பேசும்போது,*
 
“வெள்ளிமலை பகுதிக்கு படப்பிடிப்பிற்கு சென்றோம். 25 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களில் எடுத்து முடித்தார். அந்த அளவிற்கு இயக்குநர் யாரையும் உட்கார விடாமல் பம்பரமாக சுழல்வார். இந்த காலத்தில் பெண்களுக்கு தேவையான கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது” என்று பேசினார்.
 
*நடிகை கோமல் சர்மா பேசும்போது,*
 
“உண்மையான சுதந்திரம் என்பது இளைஞர்கள் எல்லாமே சுதந்திரமாக பேசுவது என்று தான் நான் நம்புகிறேன். உங்கள் கண்களில் நாட்டின் எதிர்காலத்தை பார்க்கிறேன். உங்கள் இதயத்தில் இருக்கும் தீ, நம் ஊருக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்காமல் இந்த உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக மாறணும். உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு புரட்சிகளிலும் இளைஞர்கள் தான் தோளோடு தோள் நின்று இருக்கிறார்கள். 
 
இன்றைய இளைஞர்களின் போர்க்களமே வேறு. அது துப்பாக்கியோ. வாளோ அல்ல.. ஒரு போஸ்ட்.. ஒரு ட்வீட்.. ரீல்ஸ் இவைதான். உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு ஒளிகாட்டி.. வழிகாட்டி.. ஒரு சில ஃபாலோயர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்கள் குரலை ஒரு நாட்டுக்காக காட்டுக்காக பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நதிகளுக்கு பயனுள்ளவர்களாக இருங்கள்.. சோசியல் மீடியாவில் வெறுப்பைக் காட்டினால் அது ஆயிரம் மடங்கு அதிகரிக்கும். நம்பிக்கை விதைத்தால் அது ஆயிரம் மடங்கு நம்பிக்கையை கொடுக்கும். 
 
புதிய இளைஞர்கள், வரும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.
 
*நடிகை நமீதாவின் கணவர் வீரா பேசும்போது,*
 
“நான் ஆந்திராவைச்  சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் மீது உள்ள காதலால் இங்கே வந்து குடியேறி விட்டேன். முன்பெல்லாம் அண்ணா, அக்கா என்று பாசத்தோடு இங்கே அழைத்தார்கள். 
 
இப்போது எல்லாமே ப்ரோ என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டில் கலாச்சாரமும் சினிமாவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன. உலகமே வியந்து பார்க்கும் விதமாக இருந்தது. இப்போது அதில் சின்ன தேக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம் நாம் தான்.. நான் முதலில் ஒரு சினிமாவுக்கு தயாரிப்பாளராக இருக்கலாம்.. ஆனால் இரண்டாவது சினிமாவிற்கு நான் ஒரு பார்வையாளன் தான்.. 
 
புஷ்பா, பாகுபலி மாதிரி படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்களா என்றால்,  இல்லை. கடந்த வாரம் கூட தெலுங்கில் வெளியான சின்ன படங்கள் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இங்கே தமிழில் நாங்கள் படங்களை தவறாக எடுக்கிறோமா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகெட்ட தவறுகிறோமா என்பது தெரியவில்லை. இந்த படம் மிகுந்த சிரமத்துடன் மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவை தாருங்கள்” என்று பேசினார்.
 
*நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,*
 
“இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். அண்ணன் இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள். 
 
ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ? 
 
என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.
 
சின்ன தயாரிப்பாளர்கள் தயவு செய்து படம் எடுக்க வரவேண்டாம் என விஷால் சொன்னபோது நான் தான் முதல் கண்டனக்  குரல் கொடுத்தேன். ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். 
 
அதை அவர் சொல்லத் தெரியாமல் சொல்லிவிட்டார். அதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடியே விட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும். 
 
ஜாதி படமாக இருந்தால் கூட அதை பார்ப்பதற்கான ஒரு கூட்டம் வருகிறார்கள். விருதுகளுக்கான படங்கள் எடுப்பது வேறு, ஸ்டார் படங்கள் என்பது வேறு. ஆனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்களையோ விநியோகஸ்தர்களையோ ரசிகர்களையோ குறை சொல்லவே முடியாது.
 
ஏற்கனவே ரிலீஸ் தேதியை திட்டமிட்டு விட்டு பெரிய படங்கள் வருகிறது என்பதால், நீங்கள் ஏன் பின்வாங்குகிறீர்கள்? பெரிய படம் தோற்றது இல்லையா ? பல நேரங்களில் பெரிய படம் தான் தோற்கிறது. ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள் ? போராட வேண்டும்.. 
 
நீங்கள் விலகும் போது அவர்களுக்கு விளையாடுவதற்கு களம் கிடைக்கிறது .அதிக காட்சிகள் கிடைக்கிறது. உங்கள் வீடு, சொத்தை யார் பெயரிலாவது எழுதி வைப்பீர்களா ? அப்புறம் பல கோடி பணம் போட்டு எடுத்த படத்தை மட்டும் யாரோ ஒருவரிடம் எப்படி கொடுக்கிறீர்கள் ? சொந்தமாக ஏன் ரிலீஸ் செய்யத் தயங்குகிறீர்கள் ? அப்படி என்றால் வியாபாரம் கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்திருக்கிறீர்கள். வியாபாரத்தை தெரிந்து கொண்டு வாருங்கள். 
 
அப்படி இல்லாமல் தோற்றுப் போய் விட்டேன் என்று அழுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.. 
 
எனக்கு இப்போது டிஸ்ட்ரிபியூஷன் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. விரைவில் அதில் இறங்கப் போகிறேன். அங்கே தான் எல்லா படங்களும் கடைசியாக பிரச்சனையில் வந்து நிற்கிறது. யாரிடமாவது படத்தை ரிலீஸ் செய்யக் கொடுத்துவிட்டு ஏன் கெஞ்ச வேண்டும்? இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்.. யார் பின்னாடியும் போக வேண்டாம்” என்று கூறினார்..
 
*இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது,*
 
“நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது படம் ரிலீஸ் என்று வந்து விட்டால் எல்லோருமே திமுக பக்கம் தான் திரும்புகிறார்கள் என்று சொன்னார். ஒரு நிறுவனம் தாங்கள் வெளியிடும் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என தொடர்ந்து பார்த்துக் கொண்டால் நாங்கள் வேறு யார் பக்கம் திரும்ப வேண்டும்?
 
சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஒரு படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் வந்தது. ஆனால் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்றே தெரியவில்லை. படத்துறையை ஒழுங்கு படுத்துவதற்காக இருக்கக்கூடிய திரைப்பட சங்கங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இவர்கள் எல்லோரும் இதைப் பற்றி எப்போதுமே கவலைப்படுவது இல்லை. 
 
அதற்கு காரணம் அரசியல். அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ, வருத்தப்படுவார்களோ என்கிற பயம்.
 
இன்னொரு பக்கம் பெரிய படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அந்த படத்தையே வெளியிட்டால் சின்ன படங்களுக்கு எப்படி இடம் கிடைக்கும் ? உண்மையிலேயே பொறுப்புணர்வோடும் மக்கள் குறித்த சிந்தனையோடும் சிறிய படங்கள் தான் எடுக்கப்படுகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் அப்படி எந்த சமூக நோக்கத்திலும் எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சமூக சீரழிவுக்கு வித்திடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இணையதளம் மூலமாக அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை பற்றித்தான் இந்த இரவின் விழிகள் படம் பேசுகிறது. 
 
அந்த இணையதளங்களின் பாதிப்பு தான் சினிமாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என்பதே பண விரயம் என்பது போன்ற சூழ்நிலையைத் தான் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கிறது.. ஆந்திராவில் எல்லாம் சினிமாவில் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. ஒரு பெரிய படம் வந்தால், கூடவே 10 சின்ன படங்களையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என எங்கள் இயக்குநர் சங்கம் மட்டும் தான் கவலைப்படுகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள்” என்று பேசினார்.
 
*இயக்குநர் பேரரசு பேசும்போது,*
 
“இங்கே அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பேச வந்திருக்கிறோம். நாயகி நீமாரே இயக்குநரைப் போல மிமிக்கிரி செய்து பேசுவதைப்  பார்க்கும்போதே அவர் சிறந்த நடிகையாக இருக்கிறார் என்பது தெரிகிறது. 
 
சீமான் அண்ணன் பேச வேண்டியதை மு.களஞ்சியம் பேசிவிட்டார். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் என்னைப்போல ஊர் பாசம் கொண்டவர். அதனால் தான் தன்னுடைய ஊர் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார்.
 
பெண்கள் ஆண்களுக்கு நிகராக வந்து விட்டார்கள், புரட்சிப் பெண் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் இன்று அவர்களை விட மிக மோசமான நிலையில் வேறு யாருமில்லை.. அது குறித்த விழிப்புணர்வை இந்த படம் சொல்ல வருகிறது. இன்று படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டமாக இருக்கிறது. 
 
இன்றைக்கு சினிமாவில் உள்ள மிகப்பெரிய இடர்ப்பாடு இதுதான். திரைப்படத்தை ரிலீஸ் செய்வது தான் முதல் வெற்றியாக இருக்கிறது. அன்று இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டுமென அனைவருமே நினைத்தார்கள். ஆனால் இன்று என் படம் மட்டுமே ஓட வேண்டும், நான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். 
 
இன்னொரு தயாரிப்பாளரின் படத்திற்கு திரையரங்குகள் கொடுக்க வேண்டுமே என அவர்கள் நினைப்பது இல்லை. 
 
அந்த வகையில் இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான்/ அப்படி நினைத்தால் ஒரு காலகட்டத்தில் சினிமாவும் அழிந்து இந்த சுயநலத்தில் இருப்பவர்களும் அழிந்து போவார்கள். முன்பெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், சில முக்கியமான பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்காக காத்திருந்து அதை படித்துவிட்டு படம் பார்க்க சென்றார்கள். 
 
விமர்சனம் வரவில்லை என்றால் போன் போட்டுக் கேட்டார்கள். ஆனால் இன்று ஒரு சிலர் செய்யும் விமர்சனங்களை பார்க்கும்போது ஏன் தான் இவர்கள் இப்படி விமர்சனம் பண்ணுகிறார்கள் என தோன்றுகிறது. வன்மத்தைக் கக்குகிறார்கள். 
 
அப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தை தான் இன்றைய ரசிகர்களின் மன நிலையும் நம்புகிறது. யாரையாவது திட்டினால் தான் அவர்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. பாசிட்டிவாக சொன்னால் அதை ஒதுக்கி விடுகிறார்கள்.
 
சின்ன படம் ஓட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு நல்ல படம் வெளியானால் அந்த படக்குழுவினரை தன் வீட்டிற்கே வரவழைத்து வாழ்த்துகிறார். 
 
இன்றைக்கு அப்படிப்பட்ட மனம் வேறு யாரிடம் இருக்கிறது? ரஜினி சாரே நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டார் என்பதற்காக பல பேர் அந்த படத்தை பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார். ஏனென்றால் அவர் சினிமா நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர்.
 
அவருடைய ஒரு பட வெற்றி விழாவில் இயக்குநர் சேரன் படத்தைப் பாராட்டி அவருக்கு தங்கச்சங்கிலி போட்டு பரிசளிக்கிறார்.. எந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு மனசு வரும்..? அதே போல இப்போது இருக்கும் பெரிய ஹீரோக்கள், உங்களுக்குப் பிடித்த சின்ன படங்கள் இருந்தால், அது நன்றாக இருந்தால் தாராளமாக மனது விட்டு பாராட்டுங்கள்..” என்று பேசினார்.

Transforming Indigenous Surgical Care in Tamil Nadu: Dr. Parimuthukumar Completes 100 Robotic Abdominal Surgeries



Chennai: 

Prashanth Hospitals proudly announced a groundbreaking healthcare milestone led by Dr. Parimuthukumar, Clinical Lead, Institute of Robotic Surgeries - Prashanth Hospitals. With 100 successful indigenous robotic abdominal surgeries completed, the first surgeon in Chennai to reach this milestone, Dr. Parimuthukumar is setting new standards in surgical precision and patient care across Tamil Nadu. Amongst his achievements, he is also the first doctor to perform the country's first inter-hospital robotic telesurgery covering a distance of 340 KMs. The milestone celebration featured a special felicitation by Dr. Vishwa Srivastava, CEO - APAC, SSi Mantra, India’s leading surgical robotics company. 

Dr. Vishwa honored Dr. Parimuthukumar for his clinical excellence and leadership in achieving the 100 indigenous robotic abdominal surgeries landmark and also acknowledged Dr. Parimuthukumar’s pioneering role in performing India’s first inter-hospital robotic telesurgery. The 100 successful indigenous robotic abdominal surgeries include Gall bladder removal, Uterus Removal, Simple and complex Hernia surgeries, Colonic Cancer surgery and Spleen removal. By shifting these operations from traditional open methods to robotic-assisted minimally invasive approaches, patients experience smaller incisions, reduced postoperative pain, faster recovery times, and superior surgical precision. 

Commenting on the occasion, Dr. Prashanth Krishna, Managing Director, Prashanth Hospitals said:

“At Prashanth Hospitals, our unwavering commitment is to bring the most advanced medical technologies, made right here in India, to provide transformative and precision driven care for our patients. Our mission has always been to make healthcare affordable for everyone through advanced technologies combined with the right expertise. Today, I am happy to share two important milestones, not just for us, but for Tamil Nadu’s healthcare ecosystem - one, the successful completion of 100 indigenous robotic surgeries and two, India’s first inter-hospital robotic telesurgery that was performed recently.  I congratulate Dr. Pari and his team for achieving such a  meaningful milestone. We will continue to stay committed to make quality healthcare more and more affordable and accessible to all our patients.” 

Adding to this, Dr. Parimuthukumar, Clinical Lead, Institute of Robotic Surgeries - Prashanth Hospitals added, “This milestone is more than numbers. It is about lives changed through safer, less invasive surgeries. Our aim is to take precision care through advanced indigenous robotic technology to every patient, regardless of where they live.” 

Further adding to this, Dr. Vishwa Srivastava, Managing Director – APAC, SSi Mantra said, “Prashanth Hospitals and Dr. Parimuthukumar embodies the future of surgery with indigenous robotic technology in the state where meticulous precision meets heartfelt passion. Their pioneering work in robotics and telesurgery is setting new benchmarks, transforming healthcare delivery across the state. As a proud Made in India company, I’m very happy to see how our indigenous robotic technology is transforming and saving lives, thanks to hospitals like Prashanth Hospitals for leading this change.” 

In addition to this, Dr. V. Selvaraja, Founder & Managing Director Of Dharan Hospital said “Dr. Parimuthukumar’s achievement is not just a personal milestone but a transformative moment for surgical care in Tamil Nadu. Completing 100 robotic abdominal surgeries and pioneering inter-hospital telesurgery highlights the power of technology to bridge healthcare gaps between urban and rural regions. At Dharan Hospital, we are proud to be associated with such path-breaking advancements that redefine precision, safety, and accessibility in patient care.”

 VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.