'சக்தித் திருமகன்' விமர்சனம்
தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர். தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய சம்பவமாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்கும் சாணக்கியத்தனம் கொண்ட விஜய் ஆண்டனி பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ளும், அதே வேலையை இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவில் செய்துக் கொண்டிருக்கும் வில்லன் சுனில் கிர்பலானி, விஜய் ஆண்டனியிடம் இருக்கும் அனைத்தையும் அபகறித்து அவரை அழிக்க நினைக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை...
விஜய் ஆண்டனியிடம் ஒரு வேலை வந்தால், அதை நிறைவேற்ற அவர் எப்படி ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்துகிறார் என்பதாக முதல் பாதியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் விறுவிறுப்பாக செல்கிறது. சமூகம் சார்ந்து, அதிகார மையங்கள் பற்றி இயக்குநர் அருண் பிரபு முன் வைக்கும் கருத்துக்களும், கேள்விகளும் கவனிக்க வைக்கின்றன.
மேலிடத்திடம் பணிந்து பேசுவது, தன் கை ஓங்கி இருக்கும் இடங்களில் எகிறி அடிப்பது, ஆவேசமாக வசனங்கள் பேசுவது என இந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார் விஜய் ஆண்டனி. கெஸ்ட் ரோலில் வாகை சந்திரசேகர் கவனிக்க வைக்கிறார். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பல இடங்களில் மாஸ் ஏற்றுகிறது. தேவையான இடங்களில் படபடப்பையும் கூட்டுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் மறைமுக அரசியல் வியாபாரத்தை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார். வசனங்கள், தமிழகம் மற்றும் இந்திய அரசியலை காட்சிப்படுத்திய விதம், மத்திய அமைச்சர்கள் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என அனைத்திலும் பல்வேறு குறியீடுகளை வைத்து உண்மைகளை உரக்கச் சொல்லியிருக்கிறார்.
முதல் பாதியில் இருக்கும் வேகம், விறுவிறுப்பு மற்றும் திருப்பங்கள் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துவிடுவது படத்திற்கு குறையாக இருந்தாலும், விஜய் ஆண்டனியின் திட்டம் மற்றும் அதை செயல்படுத்தும் விதம் ஆகியவை அந்த குறையை மறைத்து மீண்டும் படத்தோடு பார்வையாளர்களை பயணிக்க வைத்து, சீட் நுணிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.
விஜய் ஆண்டனி பிளாஸ்பேக் காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை... இரண்டாம் பாதி காட்சிகளில் விறுவிறுப்பு குறைவு....
மொத்தத்தில் இந்த 'சக்தி திருமகன்' விறுவிறுப்பு......
RATING: 3.4/5
கருத்துரையிடுக