அக்டோபர் 2025

‘வள்ளுவன்’ இசை வெளியீட்டு விழா!






ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

 
மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார்.
 
விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இந்த நிகழ்வில்
 
*இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது*,
 
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?  இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்.  
 
“இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை. 
 
இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.
 
*இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர் பேசும்போது,*
 
இந்த படத்தை ஆரம்பிக்கும்போது இது முடியுமா? என்று யோசித்தோம். ஆனால் இப்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்  பார்க்கும்போது பாதி ஜெயித்து விட்டோம் என நினைக்கிறேன். இந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களை எடுப்போம். தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். முதலில் கன்னடத்தில் தான் படம் எடுக்க நினைத்தோம். ஆனால் இங்கே தமிழில் செல்வமணி சார் போன்ற ஜாம்பவான்கள் முன்னால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே படம் எடுத்தோம்” என்று பேசினார்.
 
*இசையமைப்பாளர் அஸ்வத் பேசும்போது,*
 
“படத்தின் நாயகன் சேத்தன் சீனு மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் திறமையான நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் இந்த படத்தில் நிறைய பாடகர்கள், கவிஞர்கள் என புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்த முடிந்தது” என்று பேசினார்.
 
*நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,*
 
“இயக்குநர் சங்கர் சாரதி இந்த படத்தை பல சிரமங்களுக்கு இடையே பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று இந்த டிரைலரை பார்க்கும்போது அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு கிடைத்தது போல இருக்கிறது. கதாநாயகி எங்கள் தமிழ்நாட்டு ஐஸ்வர்யா ராய் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை, படம் எப்படி வேண்டுமானாலும் எடுங்கள்.. வந்தவர்கள் யாருக்கும் சாப்பாட்டில் குறை வைத்து விடாதீர்கள் என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பளம் சரியான நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் ஆனது. இவர்களின் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.
 
*தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,*
 
“இந்த படத்திற்கு வள்ளுவன் என தலைப்பு வைத்து அவரது குறளை மையமாக வைத்து படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.. அதேசமயம் கெட்டது செய்தவனுக்கு நல்லது செய் என்று எழுதிய வள்ளுவன் பெயரை வைத்து கொலைகாரன் படம் எடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத படங்களில் ஆங்கில டைட்டில் தான் இருக்கிறது. இது தமிழ்நாடா என்கிற கேள்வியே வந்து விட்டது. இந்த சமயத்தில் இப்படி வள்ளுவன் என தலைப்பு வைத்திருப்பதால் இயக்குநர் சங்கர் சாரதியை பாராட்டுகிறேன். பணம் இருந்தால் நீதியையே இப்போது விலைக்கு வாங்கி விடலாம். நீதிபதிகள் பலர் இப்போது பாதிபதிகளாகி விட்டார்கள்” இன்று பேசினார்.
 
*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*
 
தவறு செய்தவர்களை கண்டித்து திருத்த வேண்டும் என்கிற கருத்தைச் சொல்ல வள்ளுவரை உதாரணமாக இயக்குநர் சங்கர் சாரதி எடுத்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இவர் சென்சாரில் தப்பித்து விட்டார். அந்த வகையில் எங்கள் இயக்குநர் சங்கத்திலிருந்து வள்ளுவன் என்கிற டைட்டிலுடன் அவர் கையில் எழுத்தாணிக்கு பதிலாக கத்தியை கொடுத்து ஒருவர் துணிச்சலாக படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் இயக்கிய டெக்னிக் நன்றாக இருந்தது. கதாநாயகன் சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார். அவர் நன்றாக வரவேண்டும்” என்று பேசினார்
 
*நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,*
 
“இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் சாரதி என்னை அழைத்தபோது முதலில் வர மறுத்துவிட்டேன். அவர் சரியாக 2023 அக்டோபர் 25ஆம் தேதி என்னை அழைத்தார். அன்று கேப்டனின் பிறந்த நாள். மீண்டும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் கேப்டனிடம் சென்று அனுமதி பெற்று, ஆசி பெற்று மதியத்திற்கு மேல் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டேன். அந்த வகையில் என் வாழ்க்கையில் இந்த படம் மறக்கவே முடியாது. சினிமாவில் நான் இருப்பதே கடவுள் கொடுத்த கொடுப்பினை. இப்போதுள்ள இயக்குநர்கள் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு வந்து சினிமா வாய்ப்பை பெற்றுக்கொண்டு சினிமா கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. தயவு செய்து அந்த கலாச்சாரத்தை மாற்றாதீர்கள்” என்று பேசினார்
 
*நடிகர் பரத் பேசும்போது,*
 
“சினிமாவில் நாம் இருப்பதே ஒரு பெரிய வரம் தான். அப்படிப்பட்ட சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் நாமாகவே பிடித்து முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம் என்று அப்படி வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல வலுவான அரசியல் கலந்த ஒரு கருத்து இந்த படத்தின் டைட்டில் துவங்கும்போதே ஆரம்பிக்கிறது. கதையை இயக்குநர் என்னிடம் சொன்னாலும் அந்த சமயத்தில் என்னுடைய வேறு சில கமிட்மென்ட்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் சேத்தன் சீனு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கிறார். அவருக்கு தமிழில் இது மிகப்பெரிய பிரேக்காக அமையும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா என்னுடன் காளிதாஸ், காளிதாஸ் 2, மிரல் என மூன்று படங்களில் வேலை பார்த்தவர்” என்று கூறினார்.
 
*நடிகர் கராத்தே ராஜா பேசும்போது,*
 
“இந்த வள்ளுவன் படத்தில் எனக்கு ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பல கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளில் காலை, மதிய காட்சிகள் படம் பார்க்க செல்லும் போது வெறும் ஐந்து பேர், பத்து பேர் மட்டும் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறும். பல இடங்களில் திரையரங்குகளை எடுத்துவிட்டு மண்டபம், மால் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்.. அவ்வளவு பெரிய சுற்றுலா தளம்.. ஆனால் அவ்வளவு பெரிய ஊரில் ஒரு தியேட்டர் கூட இல்லை. அதேபோல பொதுமக்களிடம் ஏன் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என நான் பேசியபோது பலரும் நாங்களே வெளியில் இருந்து தின்பண்டம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் தின்பண்டங்களை விற்பது ஒரு பக்கம் விற்றுக் கொள்ளட்டும். ஆனால் வெளியில் இருந்து இப்படி கொண்டு வருபவர்களையும் அனுமதிக்கட்டும். அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து அதை களைய முயற்சி எடுத்தால் அந்த ஜனங்களும் திரையரங்கிற்கு சென்று நமது படத்தை பார்ப்பார்கள். அப்படி வெளியிலிருந்து தின்பண்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் திரையரங்குகளில் விற்கும் பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வழி வகுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தாலும் எனக்கு சந்தோசம்” என்று பேசினார்.
 
*நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,*
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது பல கஷ்டங்களுக்கு இடையே தான் நடைபெற்றது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் எங்களைப் போன்ற நடிகர்களாகட்டும் அவரவர் தரப்பில் சில கஷ்டங்கள் இருந்தன. அப்படி கஷ்டங்களுக்கு இடையே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால் இந்த படம் இப்படி இந்த அளவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தான் அப்படி அவர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நடிகர்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறார்கள் என இங்கே சிலர் பேசினார்கள். எல்லோருக்கும் அப்படி அல்ல.. கொரோனா காலகட்டத்தில் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தி வந்த ஹோட்டலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் காது படவே சில பேர் அதை விமர்சித்து பேசுவார்கள். அதனால் பொத்தாம் பொதுவாக நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. நான் இங்கே இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதில் கூட சிக்கல் இருக்கிறது. அதையும் நான் எதிர்கொண்டு செய்துதான் வருகிறேன்” என்று பேசினார்.
 
*நடிகர் பிரேம்குமார் பேசும்போது,*
 
“படத்தின் இயக்குநர் என்னிடம் இந்த கதையை சொல்ல வந்தபோது இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர்.. இந்த படத்திற்கு வள்ளுவன் என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோதே நான் இதில் நடிக்க ஓகே சொல்லி விட்டேன். இந்த படத்தில் ஒரு அழுத்தமான செய்தி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு தாக்கம் இருக்கும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் எவ்வாறு தவறு செய்கிறார்கள், அதை எப்படி தட்டிக் கேட்பது என அதற்கான தீர்வுகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
 
*நாயகி ஆஸ்னா சவேரி பேசும்போது,*
 
“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். வள்ளுவன் படத்தில் எமோஷன், ஃப்ரண்ட்ஷிப், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைய டுவிஸ்ட் என எல்லாமே இருக்கிறது. நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயம் ஒர்த் ஆக இந்த படம் இருக்கும்” என்று பேசினார்.
 
*இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,*
 
“படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப்  பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா ? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள். இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான். 
 
கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள். 
 
ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத்  தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள். 
 
இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச்  செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது. 
 
நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள்   என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.
 
சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” என்று பேசினார்
 
*இயக்குநர் ராதா பாரதி பேசும்போது,*
 
“இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடித்துள்ள இந்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நீங்கள் பார்க்கும் போது, ரொம்பவே பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கதாநாயகியைப் பார்த்து பயப்படுவீர்கள். இயக்குநர் சங்கர் சாரதி என்னுடைய சீடன் தான். யாருக்கும் தெரியாத விஷயம், அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். தேவாரம், திருப்புகழ், திருப்பாவை எல்லாம் தெளிவாகப் பாடக்கூடியவர். என் தந்தை அவரை ஆழ்வார் என்று தான் அழைப்பார். அவ்வளவு பக்திமான். அதேசமயம்  என்னிடம் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்கள் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். பரிமேலழகர், கலைஞர் போன்றவர்கள் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்கள்.
 
இயக்குநர் சங்கர் சாரதி திருக்குறளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்” என்று பேசினார்.
 
*நடிகை கோமல் சர்மா பேசும்போது*,
 
“2000 வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல.. அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ,  கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்” என்று பேசினார்.
 
*நாயகன் சேத்தன் சீனு பேசும்போது,*
 
“கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.
 
நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று  கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசினார்.
 
*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,*
 
“நான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆன சமயத்தில் தான் இதே போன்று பீட்சா படத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லோருமே பெரிய ஆட்களாக மாறிவிட்டார்கள். அதேபோலத்தான் இந்த வள்ளுவன் திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் அதேபோன்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
 
*வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது,*
 
“நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட  படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.
 
*இயக்குநர் பேரரசு பேசும்போது,*
 
“வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மீகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, கற்பழிப்பு.. வள்ளுவன் என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள். ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர்  கத்தியைக் கொடுக்கத்  தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார்.. நாடு அப்படி இருக்கிறது. என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..
 
நான் சிவகாசி படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.. நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்.. பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மீகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

Madras Diabetes Research Foundation (MDRF), Chennai signs MOU with Centre for Brain Research (CBR), Bengaluru, and UK Dementia Research Institute (UK DRI), UK, for groundbreaking research on Diabetes and Brain Health



Chennai:

In a landmark international collaboration, the Madras Diabetes Research Foundation (MDRF), Chennai, Centre for Brain Research (CBR) at the Indian Institute of Science (IISc), Bengaluru and the UK Dementia Research Institute (UK DRI) have joined forces to

advance cutting-edge research exploring the intricate relationship between diabetes and brain health. Separate Memorandum of Understanding (MoU) were signed between MDRF, CBR & UK DRI.

This collaboration brings together leading experts in the fields of diabetes, neuroscience and dementia to understand how metabolic disorders like diabetes influence cognitive decline and

neurological diseases, including dementia and Alzheimer's disease. The partnership aims to facilitate large-scale studies, data exchange and translational research to improve early detection and prevention strategies.

Dr. V. Mohan, Chairman, Madras Diabetes Research Foundation (MDRF), said:

"This collaboration marks a milestone in our journey to understand how diabetes affects not just the body but also the brain. With our decades of work in diabetes and metabolic health, and by joining hands with eminent neuroscientists and dementia researchers, we hope to uncover mechanisms that will ultimately improve the quality of life for millions worldwide."

Dr. R. M. Anjana, President, MDRF, added:

"Diabetes is increasingly being recognized as a risk factor for cognitive decline and dementia. Through this partnership, we will leverage the strength of multi-disciplinary expertise and diverse datasets to uncover early markers of brain aging in people with diabetes. This could pave the way for preventive and therapeutic breakthroughs."

Prof. Siddharthan Chandran, Director & Chief Executive, UK Dementia Research Institute, stated:

"Understanding how metabolic disorders influence brain function is one of the great scientific challenges of our time. Collaborations such as this with MDRF are crucial in uniting global expertise and resources to accelerate discoveries that can translate into real-world benefits for patients."

Prof. K. V. S. Hari, Director, Centre for Brain Research (CBR), IISc Bengaluru, commented:

"CBR's focus on brain aging and neurodegenerative diseases aligns perfectly with this initiative. Working with MDRF and UK DRI will help integrate large-scale clinical, imaging, genomics and proteomics data to identify key pathways linking diabetes and cognitive health. We are grateful to the invaluable support provided by Pratiksha Trust, to this important initiative."

Prof. Henrik Zetterberg, Head, Department of Psychiatry and Neurochemistry, University of Gothenburg, Group Leader, UK DRI at UCL Queen Square Institute of Neurology and visiting faculty at CBR, remarked:

"This collaboration represents an exciting frontier for dementia research. By studying metabolic factors and brain biomarkers together, we can gain deeper insights into disease mechanisms and identify novel intervention strategies."

Zee5 acquires OTT rights of Kavin–Andrea Jeremiah starrer ‘Mask’, all set for year end release



The Show Must Go On production company in association with Black Madras Films is producing the upcoming dark comedy thriller ‘Mask’, directed by debutant Vikarnan Ashok. The film, featuring Kavin and Andrea Jeremiah in the lead roles, is gearing up for its grand release this year end.  

On the auspicious occasion of Diwali, the makers unveiled a special festive poster wishing everyone a happy Diwali and officially announced that Zee5 has acquired the OTT streaming rights and T Series has acquired the audio rights of the film.  

Following the success of his previous outing Kiss, actor Kavin is set to enthrall audiences once again with his versatile performance, alongside the talented Andrea Jeremiah. Ruhani Sharma will be pairing up with Kavin for the first time. The film also stars Charle, Ramesh Thilak, Kalloori Vinoth, and Archana Chandhoke in pivotal roles.  

National Award-winning composer G.V. Prakash Kumar has scored the music for the film. The recently released first single, Kannumuzhi, has already struck a chord with fans and music lovers for its energetic folk beats and catchy tune.  

Debut director Vikarnan Ashok has helmed the project under the mentorship of Tamil Cinema's critically acclaimed Director Vetri Maaran, bringing a fresh vision to Tamil cinema. The film’s technical crew includes RD Rajasekhar handling cinematography, R. Ramar taking charge of editing, Jacki and M Vijay Iyyappan as the production designer, and Poorthi and Vipin designing the costumes.  

Touted to be a dark comedy thriller set against the backdrop of Chennai, Mask promises to be an engaging entertainer made on a grand scale.  


பிக் பாஸில் வந்து விட்டால்  சினிமா வாய்ப்பு வந்துவிடாது:  தர்ஷிகா பேச்சு!



கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இது

விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில்  

சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலாஜி எழுதி  இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'டி3' படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது,

"ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று  படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். 

நல்ல விஷூவலுக்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அதனால்தான் 

இப்படி அனைத்தையும் சிரமப்பட்டு எடுத்துக் கொண்டு போய் படபிடிப்பு நடத்தினோம். இதற்காக பத்து உதவி இயக்குநர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

படப்பிடிப்புக்கு முந்திய முன் தயாரிப்பும் சிறப்பாக இருந்தது " என்றார்.


படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம் பேசும் போது,


"இந்தத் திரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் . 'டி 3' படக் குழுவே இதிலும் இணைந்துள்ளது"

என்றார் .


இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,


" இயக்குநர்  பாலாஜி அவரது முதல் படம் 'டி3' மூலம்  பழக்கம். அவர் சொன்ன ஒரு வரிக்கதை பிடித்தது . முழு ஸ்கிரிப்ட் கேட்டேன் தர முடியாது என்றார் .எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டுகிறேன் அதையெல்லாம், பார்த்து பின்னணி இசையமையுங்கள் என்றார். அப்படிப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருந்தன. அதற்கேற்றபடி பின்னணி  இசையமைத்தோம். எப்போது இயக்குநர் என்னைப் பார்க்க வந்தாலும் உதவி இயக்குநர் குழுவோடு தான் வருவார்.

இந்தப் படத்திற்குப் பெரிய நட்சத்திரங்களுக்கான படம் போல் ஊடகங்கள்  ஆதரவு தர வேண்டும்" என்றார்.


நடிகர் ஜெயக்குமார் பேசும்போது, 


"இந்தப் படத்தில் பாலாஜி உடன் பணியாற்றியது முதல் ஏதோ ஒரு குடும்ப பந்தம் போல் ஏற்பட்டு விட்டது .அவர் எவ்வளவு பிரச்சினைகளைச் சமாளித்துக் கடந்து வந்திருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 நேரில் பார்த்தபோது அவரது பிரச்சினைகளை உணர்ந்து கொண்டேன்.அவர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. எல்லா ஆணின் வெற்றிக்குப் பிறகும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இவரின் மனைவி இவருக்குப் பக்கபலமாக இருக்கிறார். இப்படி எல்லாருக்கும் மனைவி அமைந்தால் அவர்கள் எங்கேயோ சென்று விடுவார்கள்.இயக்குநர் பாலாஜியை  எனது தம்பியாக நான் பார்க்கிறேன் "என்றார்.


நாயகி தர்ஷிகா பேசும்போது,


"இது என் ஒரு கனவின் முதல் மேடை. இங்கே உள்ள ஒவ்வொருவரது கனவாகவும் இந்தப் படம் இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி  அனைவரும் உழைத்தார்கள்.


பிக் பாஸில் வந்து விட்டால் மட்டுமே வாய்ப்பு  கிடைத்துவிடாது.சினிமாவில் தாகத்தோடு வருபவர்கள் கண்டிப்பாக அந்த இடத்தை அடையலாம்.பிக் பாஸில் இருந்து வந்து விட்டோம் படம் பண்ண போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பிளாட்பார்ம், இது ஒரு பிளாட்பார்ம் அவ்வளவுதான் . நம்பிக்கையோடு இந்தத் தளத்திற்கு வந்திருக்கிறேன்.வெற்றி பெறுவேன் என்று நினைக்கிறேன்.


என்னைப் பொறுத்தவரை வாய்ப்பு கதவை தட்டாது, நாம் தேடிப் போனால் தான் வரும் என்று நான்  நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்.படத்தில் நடித்தவர்கள் அனைவரும் திறமைசாலிகள். அவர்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சித்து எதார்த்தமான மனிதர். நான் இதில் உமையாள் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நல்ல தமிழ்ப் பெயர் .அந்தப் பெயரை எனக்குப் பிடிக்கும். அனைவரும் இந்த படத்திற்காக உழைத்தார்கள். அனைவரது கனவும் இதில் இருக்கிறது.படம் வெற்றி பெறும்  என்று நம்புகிறேன்" என்றார்.


நிர்வாகத் தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,


"இந்தப் படத்திற்காக வேறொரு கதாநாயகனை வைத்து எடுத்தோம் 60 முதல்  70% முடித்து விட்டோம்.அவர் கொடுத்த  பிரச்சினைகள் தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எடுத்தோம். ஒரு கட்டத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே  கைவிட்டு விட்டோம்.என்ன காரணம்? ஒரு நடிகர் டூப் போட்டு நடிக்க வரலாம், 'டோப்' போட்டு வந்து நடிக்கக் கூடாது.

அதனால் அதை கைவிட்டு விட்டோம். ஒரு பிரசவம் ஆகிற போது கருக்கலைந்தது மாதிரியான ஒரு வலி மிகுந்த அனுபவம். இதனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் மனச்சோர்வடைந்து விட்டார்கள்.


மீண்டும் அதை எடுக்கிற போது முதலில் எடுத்த செலவுகளும்  பட்ஜெட்டில் சேர்ந்து கொள்ளும் .எனவே செலவுத்தொகை இரட்டிப்பாகும் .அதை நாங்கள் ஈடு கட்டுவதற்காக அனைவரும் பல நாட்கள் உடலை வருத்திக்கொண்டு உழைத்தோம்.  இரண்டு கால் ஷீட் இரண்டரை கால் ஷீட் என்றும் 48 மணி நேரம் கூட தொடர்ந்து பணியாற்றியும் படப்பிடிப்பு நடத்தினோம் . இப்படி இழப்புகளை உழைப்பின் மூலம் ஈடு கட்டினோம்.

நான் சாமி கும்பிடுவேன் என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கும்.உண்மையிலே இருக்கிறதா இல்லையா?ஆனால் இந்தப் படத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து கடவுள் இருக்கிறார் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.


கதாநாயகன் வராத போது அவர் இல்லாத காட்சிகளை நாங்கள் காட்டுப் பகுதியில் எடுத்தோம் . காட்சிப்படி ஒரு வர் சாமி ஆட வேண்டும். அவர் இயக்குநர் கட் சொன்ன பிறகும் ஆடினார் ஆடினார், ஒரு மணி நேரம் ஆடிக்கொண்டே இருந்தார். அவருக்கு உண்மையிலேயே சாமி வந்துவிட்டது.இது மேக்கிங் வீடியோவில் இருக்கிறது.


மூன்று மாதம் இடைவெளி வந்தது . அந்த வீடியோவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகுதான் சித்து இந்தப் படத்தில் இணைந்தார் .ஆனால் அவர் குரலைக் கேட்டபோது எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. பிறகு தான் தெரிந்தது அந்த மேக்கிங் வீடியோவில் கடைசி 30 வினாடிகளில் அவரது குரல் இருந்தது. அந்த சாமியாடும் வீடியோ எடுத்த போது யாரோ சித்து பேசுவதை மொபைல் போனில் ஒலிக்க விட்டிருந்தார்கள். இதன்படி அந்த நடிகருக்குப் பிறகு சித்து  தான்  தொடர்வார் என்கிற குறிப்பு அந்த மேக்கிங் வீடியோவில் இருந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது.


அப்போதுதான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை வந்தது.இது ஒரு ஆன்மீக அனுபவம்.


 நான் இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் பெரிய கதாநாயகர் இருந்தால் அந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும். தியேட்டர்கள் நிறைய  கிடைக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றை இங்கே பரிசீலனை செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். ரீ ரிலீஸ் செய்யப்படும் மறு வெளியீட்டுப் படங்களுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று டிக்கெட் போடுவது போல் எங்களை போல நல்ல கதையுள்ள கொண்ட கன்டென்ட் பேஸ்டு  படங்களுக்கு முதல் ஷோவுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று போட்டால் வருகிறவர்களின் மவுத் டாக் மூலம் படம் பற்றி மக்களிடம் சென்றடையும்.இல்லாவிட்டால் முதல் ஷோவுக்கு 50 பேர் 100 பேர் தான் வருவார்கள் .ஆனால் 50 ரூபாய் 100 ரூபாய் 75 ரூபாய் என்று டிக்கெட் போட்டால் 200 பேருக்கு மேல் வருவார்கள். வாய் இருந்தால் தானே,வாய் வழியாக பேசப்படும். எனவே அப்படி கட்டணத்தைக் குறைத்து அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்.


நிறைய படங்கள் வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனால் என்ன பயன்?வாராவாரம் வருகிற ஆறு - ஏழு படங்களில் எத்தனை உருப்படியாக உள்ளன? நிறைய உப்புமா படங்கள் வருவதால் தான் சினிமாவில் பிரச்சனையே வருகிறது நீங்கள் படத்தின் தரத்தைப் பார்த்து வடிகட்டி இந்த  வாய்ப்பைக் கொடுக்கலாம். முதல் 100 டிக்கெட் 50 ரூபாய் 75 ரூபாய் என்றாவது நீங்கள் கொடுக்கலாம்.


ஒரு காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் படங்கள், பிறகு ரஜினி கமல் படங்கள், விஜய் அஜித் படங்கள் என்று இரண்டு வகையான படங்களுக்கு தான் வரவேற்பு இருந்தது. அவை ஹீரோ கண்டன்ட் உள்ள படங்கள் என்று சொல்லலாம். இப்போது இரண்டு வகையான படங்கள் மட்டுமே வருகின்றன. ஒன்று ஹீரோ கண்டன்ட் படங்கள், அடுத்தது ஸ்டோரி கண்டன்ட் படங்கள். அதாவது கதாநாயகன் உள்ள படங்கள் ,கதையுள்ள படங்கள்.இந்த இரண்டு வகை மட்டுமே இப்போது உள்ளன.


 இப்படிக் கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக தான் இந்தப் படம் வந்திருக்கிறது'' என்றார்.


சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் பேசும்போது,


"நான் டீசர் பார்த்தேன் நன்றாக உள்ளது.

 இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அமைதியாக இருப்பார்,பேசமாட்டார் என்று சொன்னார்கள்.  ஆனால் தனது படம் பேசட்டும் என்று இருக்கிறார். அவரது படம் பேசும். 

எனது இயக்குநர் செல்வராகவன் கூறுவார், படத்தில் எவ்வளவு உழைப்பு காட்டுகிறோமோ அது பலனாகத் திரும்ப வரும் என்பார் .அப்படி இந்த படத்திற்காக அனைவரும் உழைத்துள்ளார்கள். அதற்குரிய பலன் கிடைக்கும் எனக்கு தனுஷ் எவ்வளவு பிடிக்கு மோ அவ்வளவு சித்துவைப் பிடிக்கும். அப்படிப்பட்ட திறமை கொண்ட இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.படக்குழுவினருக்கு  வாழ்த்துக்கள்" என்றார்.


இயக்குநர் பாலாஜி பேசும்போது,


"இது ஒரு உணர்ச்சிகரமான மேடை .ஒரு முடிவிலிருந்து மீண்டும் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு என்கிற நிலையில் இருந்து மீண்டும் வந்து இங்கே நிற்கிறோம். இதற்காகப் பலரும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த ஆதரவுகளின் பலம்தான் என்னை நடத்தி வந்து இருக்கிறது.


நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் சினிமாவை அனுமதிக்காத குடும்பத்திலிருந்து இங்கே வந்தவன்.இங்கே வந்த பிறகுதான் சினிமாவில் உள்ள பிரச்சினைகள் தெரிந்தன.


யாருமே இப்படி ஒரு முடிவிலிருந்து துடைத்தெறியப்பட்டதிலிருந்து மீண்டு எழுந்து வர மாட்டார்கள். நாங்கள் மறுபடியும் தொடங்கி இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். உடன் நின்று உழைத்த மனிதர்களின் ஆதரவும் ஊக்கமும்  தட்டிக் கொடுக்கும் நம்பிக்கையும்தான்   எங்களை  இவ்வளவு தூரம் இப்படிக் கொண்டு வந்து நிறுத்திருக்கிறது. முதல் ஹீரோ செய்த பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் சித்து ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இப்படி நடிக்க ஒப்புக்கொள்வது சிரமம். ஆனால் சித்து சமரசம் செய்து நடிக்க வந்தார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். தர்ஷிகாவுக்கும் நல்ல படமாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் சாரை பல இரவுகள் நான் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.

படத்தில் ஆங்கிலத் தலைப்பு வைத்தது பற்றி கேட்கிறார்கள். எனக்குச் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் அப்படி வைத்தேன் .பொருத்தமாக இருக்கிறது.அந்த மலைக் கிராமத்தில்  ஒவ்வொரு ஏழு  ஆண்டுக்குப் பிறகு வருகிற ஜூன் மாதத்தில் ஆண்கள் எல்லாம் இறந்து போவார்கள் என்பது நம்பிக்கை. இதை அடிப்படையாக வைத்துத்தான் டார்க் அந்தத் தலைப்பை வைத்தோம்.


எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்த என் தேவதை  செந்தில்குமாரிக்கு என் நன்றி" என்றார் .


படத்தின் நாயகன் சித்து பேசும்போது,


" எனது வாழ்க்கையை தொடங்கி வைத்து எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் சார் இங்கே வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி. அவர் அறிமுகத்தால் தான் இந்த வண்டி இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. என்னுடைய குடும்பமாக அவர் இருக்கிறார். எப்போதும் அமைதியாக இருப்பவர்.எப்படிப்பட்ட விஷயத்தையும் அவர் எளிதாகக் கையாள்வார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும்.இது அனைவருக்கும் தேவை. நான் எதுவாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து மனதில் போட்டு குழப்பிக் கொள்வேன்.நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.


எனது மனைவி  ஷ்ரேயா எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்.அவர் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.


பொதுவாக இன்ஸ்டாகிராம் பார்த்து நான் பதற்றம் அடைவேன் .இன்ஸ்டாகிராமில் எதுவுமே நேர்நிலையாக வருவதில்லை .அங்கு அது நடந்தது, இங்கே இது நடந்தது என்று எதிர்மறையாகவே வருகின்றன. பார்க்கவே பயமாக இருக்கும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு பயங்கரமான ஒரு கெட்ட நேரம் என்று தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை பல பிரச்சினைகள் என்று இருந்தன.மிகவும் மன அழுத்தத்திலிருந்து  கொண்டிருந்தேன்.அடுத்த கட்டம் என்ன என்று புரியாமல் இருந்தேன், நிறைய யோசித்தேன். நமக்கு நேரம் சரியில்லையோ, ஒரு ராசி சரியில்லையோ என்று யூட்யூபில் பார்க்கும்போது மேலும் மன அழுத்தம் அதிகமானது. தலைப்புகளைப் பார்க்கும் போதே மோசமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொன்றும் நம்மை பயமுறுத்துவது போலவே இருக்கும்.வயது வரம்பைக் கடந்து நடக்கப் போகிறது, வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது,இந்தத் தேதியில் இது நடந்தே தீரும் என்று எல்லாம் பயமுறுத்தினார்கள். இது வேலைக்காகாது என்று அதைப் பார்ப்பதை விட்டு விட்டேன். 


அப்போதெல்லாம் நான்வருத்தமாக மன அழுத்தத்தில் இருந்தாலும் அதை கூல் கூல் என்று கூறி தணிப்பது என் மனைவி ஷ்ரேயா தான். 


எல்லாரையும் போலவே நல்ல படம் நல்ல பாத்திரம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஒரு நாள் என்னை இயக்குநர் பாலாஜி தொலைபேசியில் அழைத்தார். சந்திக்க வேண்டும் என்றார்.அப்பொழுது எனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று நினைத்தேன்.நான் 'டி3 'படம் பார்த்ததில்லை. இருந்தாலும் தொழில் நுப்ப ரீதியாக ட்ரெய்லர் டீசர் எல்லாம் நன்றாக இருந்தன. பிறகு நானே அழைத்தேன் போய்ச் சந்தித்தேன், கதை கூறினார் நன்றாக இருந்தது.போலீஸ் வேடம் என்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. புதிதாகவும் இருக்கும் சவாலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அவர் நல்ல திறமைசாலி. அவர் திறமைக்கு பெரிய இடத்துக்கு செல்வார் .யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள்.அவர் அப்படிப்பட்ட நேர்த்தியான வேலைக்காரர்.


இந்தப் படத்தில் அவர் எடுத்திருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது எந்தக் குறையும் சொல்ல முடியாது. எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து எடுத்திருந்தாலும் அதைப் போட்டு பார்க்கும் போது இன்னும் நன்றாக  செய்திருக்கலாம் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால் அவர் எடுத்து இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஒரு திருத்தம் கூட சொல்ல முடியாது. திருத்தத்துக்கு வேலை இருக்காது. அவ்வளவு சரியாக செய்வார். நள்ளிரவு இரண்டு மணிக்குப்  படப்பிடிப்பு நடக்கும். இருந்தாலும் அவர் அசராமல் இருப்பார்.



வேலை பார்க்காமலே உடல் வலி இருக்கும் அளவிற்கு நாங்கள் படப்பிடிப்பு இடத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.அதற்குப் பிறகு போய் படப்பிடிப்பு நடத்தினோம். படக்குழுவினர் அத்தனை பேரும் அவ்வளவு உழைத்தார்கள்.


இன்ஸ்டாகிராமைப் பார்த்து நமது நண்பர்களைப் பற்றி அறிய முடிந்தது .இன்ஸ்டாகிராமில் நாம் சிரமத்தில் இருக்கும் போது ஆறுதலாகசொல்வார்கள் என்று போஸ்ட் போடும்போது ஆறுதலாக கமெண்ட்ஸ்கள் வரும்.ஆனால் சற்று முன்னேறி நல்ல விஷயத்திற்காக வாழ்த்துக்கள் எதிர்பார்த்து போடும்போது வராது.

முகம் தெரியாதவர்கள் கூட ஆதரவு தந்து வாழ்த்தியிருந்தார்கள். ஆனால் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்த மனதில்லை. அப்போது 'டாடா' படத்தில் வரும் கவின் பேசும் வசனம் தான் என் நினைவுக்கு வந்தது. 'நாம் நல்லா இருக்கலாம் . ஆனா உங்களைவிட நான் நல்லா இருந்திடக் கூடாது' என்று தான் நினைப்பார்கள்.அப்படி பல நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டேன். இந்தப்படம் நன்றாக வந்து இருக்கிறது அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் "என்றார்.


நடிகர் சித்துவின் மனைவி  ஷ்ரேயா பேசும்போது,

"மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .சித்துவின் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதுவரை அவரது கடின உழைப்பால் தான் வந்திருக்கிறார்.எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.


Kauvery Hospital Alwarpet Achieves JCI Accreditation, Strengthening Chennai’s Position as Asia’s Healthcare Capital



Chennai:

Kauvery Hospital proudly announces that its Alwarpet unit has achieved the prestigious Joint Commission International (JCI) 8th Edition Accreditation, following the Vadapalani unit’s accreditation in January 2025. With this dual recognition, Kauvery joins an exclusive group of hospitals in India with multiple JCI-accredited centers, reaffirming its role as a trusted destination for world-class healthcare.

The JCI 8th Edition standards represent the most rigorous and updated benchmarks in global healthcare. Covering more than one thousand measurable elements, these standards emphasize:

Patient Safety First: Robust infection control practices, stringent medication management, and strict adherence to surgical safety protocols.

Clinical Excellence: Continuous monitoring of treatment outcomes, use of evidence-based medicine, and integration of multidisciplinary expertise in patient care.

Transparency & Rights: Clear communication with patients and families, respect for patient rights, and shared decision-making in treatment.

Emergency Preparedness: Advanced systems to handle critical care situations, ensuring patients receive timely, life-saving interventions.

Continuous Improvement: Regular staff training, clinical audits, and technology adoption to constantly enhance care quality.

Green Hospital: For Kauvery Hospital, this means that care goes beyond treating illness — it includes protecting the environment in which patients live and ensuring healthcare remains safe, reliable, and sustainable for future generations. By aligning with these global standards, Kauvery demonstrates its responsibility not only to today’s patients but also to the health of tomorrow’s communities. Global Health Impact is not just a standard — it is a promise: to provide world-class care that is safer for patients, smarter for communities, and kinder to the planet

Speaking on this achievement, Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director of Kauvery Hospital, said:

“This achievement is more than an institutional milestone — it is a moment of pride for Chennai. Dual JCI accreditation at Kauvery Alwarpet and Vadapalani reflects our city’s growing stature as a global healthcare hub.

JCI accreditation ensures globally benchmarked systems for patient safety, infection control, clinical governance, and continuous improvement. Every step of care — from admission to discharge — follows evidence-based protocols that lead to fewer medical errors, faster recovery, and higher patient satisfaction.

At the same time, efficiency, reduced wastage, and better coordination help lower the overall cost of care. By doing things right the first time, we make healthcare both high in quality and affordable. This accreditation reassures our patients that they are receiving care aligned with the world’s best standards.”

For the community, this accreditation translates into safer surgeries, lower infection risks, accurate diagnostics, and improved treatment outcomes. It also assures international patients that Chennai, long recognized as the healthcare capital of Asia, continues to uphold and exceed global standards of care.

With two JCI-accredited units, Kauvery Hospital sets a benchmark in clinical excellence and patient safety, reinforcing Chennai’s reputation as a trusted healthcare destination for both local and global communities.

With advanced technology, specialized expertise across disciplines, and a compassionate care model, Kauvery Hospital is redefining excellence in Chennai’s healthcare ecosystem. This dual accreditation is a powerful affirmation of the city’s reputation as a preferred destination for medical travelers and a trusted choice for local communities.

Apollo Cancer Centres Raises Awareness on Hereditary Cancer!



Chennai:

Apollo Cancer Centres (ACC), one of India’s foremost cancer care networks, is leading the charge during Hereditary Cancer Awareness Week to highlight the critical importance of recognizing hereditary cancers. The focus is on to emphasize early detection through genetic testing and proactive screening, aiming to educate families, empower high-risk individuals, and underscore how timely intervention can save lives.


Hereditary cancers arise from inherited gene mutations passed from parents to children, which increase, but do not confirm, the risk of developing cancer. These mutations disrupt genes responsible for cell growth, repair, and tumour suppression. Globally, hereditary cancers account for 5–10% of all cancers (PMC.NCBI), while most are caused by lifestyle, environmental factors, or random mutations. Common hereditary cancer syndromes include Hereditary Breast and Ovarian Cancer (HBOC), Lynch syndrome, and Familial Adenomatous Polyposis.


In India, breast cancer accounted for 1,78,361 cases and ovarian cancer for 45,701 cases in 2020 (Globocan Report). Over 10% of these are linked to BRCA1 and BRCA2 mutations, with prevalence across Indian studies ranging from 2.9% to 28% (IJMIO). Other gene mutations linked to HBOC remain underreported. Lynch syndrome, which causes 2–3% of colorectal cancers (ScienceDirect), is also associated with elevated risks of cancers in the endometrium, stomach, pancreas, ovary, urinary tract, and more. Familial Adenomatous Polyposis (FAP) is a rare inherited condition causing numerous colon polyps and a near-certain risk of colorectal cancer by age 40, with limited data available in India (NCBI).


Against this backdrop, ACC Chennai recently treated a remarkable case of familial clustering where four members of a single family from Guwahati, spanning two generations, were diagnosed with cancers linked to Lynch syndrome. The mother, Mrs. Namita Dey, was diagnosed with ovarian cancer at 50 years and treated in 2011, while her daughter, Mrs. Deepa Ghosh, was diagnosed with ovarian cancer at 26 years and treated in 2012. More recently, her other two children, Mrs. Shikha Sarkar and Mr. Mathura Nath Dey, both diagnosed at 40 years, were treated in 2024 for right colon cancer. All four are currently doing well, underscoring how timely intervention and surgical care can change treatment outcomes to lead a better-quality life.


Speaking about the significance of this case, Dr. Venkat P, Senior Consultant, Surgical Oncology, Apollo Cancer Centre, Chennai, said, “These cases clearly demonstrate that cancer is not always sporadic—it can often be inherited and run through families across generations. When multiple family members are affected, it is a strong signal that genetic factors may be at play. In such high-risk families, genetic counselling and proactive screening become invaluable tools. They not only help us identify individuals who may be predisposed but also enable us to take preventive or early treatment measures, offering patients the best chance of cure, survival, and improved quality of life.”


Adding perspective, Dr. Priya Kapoor, Consultant – Surgical Oncology, Apollo Cancer Centre, Chennai, noted, “Families with multiple cases of colorectal, ovarian, or endometrial cancers must take their medical history seriously and not dismiss these patterns as coincidence. Such clustering is often the first indication of an inherited cancer syndrome. Genetic testing becomes the essential first step in identifying those at risk, followed by structured surveillance plans. Regular colonoscopies, timely removal of polyps, and in some cases even preventive surgeries, allow us to intervene before cancers fully develop—helping save lives and reducing the emotional and physical toll on families.”


The Patient said, “When cancer struck not just one but four of us in our family, it felt overwhelming and frightening. But our Doctors at Apollo Cancer Centres, helped us, not just with treatment, but guidance and compassion at every step. Today, we are all doing well, and we carry hope instead of fear. It has shown me that even when cancer runs in families, timely care can truly change the story.”


Reinforcing ACC’s commitment, Mr. Harshad Reddy, Director, Group Oncology & International, Apollo Hospitals Enterprise Ltd, said, “At Apollo Cancer Centres, our commitment goes far beyond offering advanced treatment—we see it as our responsibility to lead awareness and education on cancers that can be inherited. Too often, families don’t realize that cancer can run in their genes until multiple members are affected. Awareness, when combined with timely action, is the strongest weapon to win over cancer.”


The event highlighted ACC’s expertise in hereditary cancers, featuring insights from the treating oncologists and showcasing real-life patient cases. Through these efforts, ACC continues to reinforce its leadership in hereditary cancer education, raising awareness about genetic risk, early detection, and proactive care, and demonstrating its commitment to improving patient outcomes across India.

 

'இறுதி முயற்சி' விமர்சனம் 



வெங்கட் ஜனா இயக்கத்தில், வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில், வைரம் சினிமாஸ் சார்பில் ரஞ்சித், மேகாலி மீனாட்சி, விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ், சிறுமி மவுனிகா, சிறுவன் நீலேஷ்  ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 'இறுதி முயற்சி' (https://www.tamillive.news/2025/10/iruthi-muyarchi-movie-review.html)

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

ரஞ்சித் ஒரு ஜவுளி கடை வியாபாரி. தொழிலில் நஷ்டம் அடைந்து கந்துவட்டி ரவுடி ராஜப்பாவிடம் எண்பது லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். கடனை கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறுகிறது. ராஜப்பா ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உன் மனைவி மற்றும் மகளை நிர்வாணமாக நிற்க வைத்துவிடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார். ரஞ்சித்துக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். (https://www.tamillive.news/)

கடனை கட்ட முடியாமல் ரஞ்சித்தின் வீட்டு வாசலில் இரண்டு அடியாட்கள் எப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ரஞ்சித்தின் மனைவி மேகாலி மீனாட்சி குளிக்கும் போது வீடியோ எடுக்க முயற்சி செய்து அடாவடி செய்கின்றனர். 

இது ஒருபுறம் இருக்க ரஞ்சித் வீட்டின் அருகே ஒரு சைக்கோ கொலையாளி இரவு நேரங்களில் மட்டும் கொலை செய்துவிட்டு மறைந்து வாழ்கிறான். ரஞ்சித் தனது கடனை அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை..... (https://www.tamillive.news/)

ரஞ்சித் சிறப்பாக எதார்த்தமாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. கணவன் நிலை மற்றும் சூழல் அறிந்து நடக்கும் மனைவியாக எதார்த்தமாக நடித்திருப்பவர், அளவான பேச்சு,  இயல்பான உடல்மொழி என்று தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கருணை இல்லாத மனிதராக கந்துவட்டி தாதாவாக நடித்திருக்கும் விட்டல் ராவ், அவரது தம்பியாக நடித்திருக்கும் புதுபேட்டை சுரேஷ், குற்றவியல் ஆய்வாளராக நடித்திருக்கும் கதிரவன், ரஞ்சித்தின் மகளாக நடித்திருக்கும் சிறுமி மெளனிகா, மகனாக நடித்திருக்கும் சிறுவன் நீலேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

கடன் பிரச்சனைகள் எல்லா குடும்பத்திலும் இருப்பதால் அனைவரையும் இந்த கதை கொஞ்சம் இணைக்கும். ஆனால்

கதையில் பல இடங்களில் லாஜிக்கே இல்லை.... இசையில் கூடுதல் கவனம் வேண்டும்.... போலீஸ் கதாபாத்திரத்தில் வேற ஆட்களை நடிக்க வைத்திருக்கலாம்.... (https://www.tamillive.news/)

மொத்தத்தில் இந்த 'இறுதி முயற்சி' கடன்காரர்களின் மனதை தொடும்.....    

RATING: 2.6/5

(https://www.tamillive.news/)

#IRUTHIMUYARCHIREVIEW



95-Year-Old Man Undergoes Successful Protected Angioplasty at PROMED Hospital, Chennai




Chennai:

PROMED Hospital, Chennai, a leading centre for advanced cardiac and critical care has achieved a landmark medical feat by successfully performing a protected angioplasty on a 95-year-old man, one of the oldest patients in Asia to undergo such a complex cardiac intervention. 

The breakthrough redefines the possibilities of heart treatment in the elderly and underscores Promed’s leadership in geriatric cardiac care.  The patient, Mr. S, was admitted to Promed Hospital after suffering a major heart attack (NSTEMI) that severely weakened his heart function. Despite his advanced age and multiple pre-existing conditions — including hypertension, anemia, and a prior stroke in 2023 — the cardiac team, led by Dr. Arun Kalyanasundaram, Director & Head of Cardiology, undertook a highly complex yet precisely planned multi-vessel percutaneous coronary intervention (PCI).  To ensure maximum safety during this high-risk procedure, doctors utilized the Impella CP, a miniature heart pump that temporarily supports cardiac function. Intravascular Ultrasound (IVUS) imaging provided real-time, high-definition visuals to guide the precise stent placement.  Drug-Eluting Stents (DES) were successfully deployed in the Right Coronary Artery (RCA) and Left Main Artery (LMA), while Drug-Eluting Balloons (DEB) were used to clear blockages in the Posterior Left Branch (PLB) and Diagonal artery, a combination rarely attempted in patients of this age group.  The procedure was completed successfully without complications. Mr. S made an excellent recovery and has since been discharged in a stable condition. He has resumed light physical activity and daily interactions, marking a remarkable comeback for a patient of his age.  This case highlights that advanced cardiac procedures can be performed safely and effectively in nonagenarian patients when guided by expertise, technology, and individualized care.  

Dr. Arun Kalyanasundaram, Director & Head of Cardiology, Promed Hospital, said:

“Performing angioplasty in a 95-year-old patient with multiple health challenges required not just technical skill but strategic restraint. Every step from risk evaluation to stent deployment was meticulously planned to ensure safety and long-term success. What makes this case remarkable is the precision and teamwork that enabled complete revascularization in such an elderly patient.”  

Dr. Spoorthi Arun, Founder & Managing Director, Promed Hospital, added “We are dedicated to ensuring that advanced cardiac interventions are accessible to all, regardless of age. This successful protected angioplasty using the Impella heart pump exemplifies how technology, teamwork, and compassion come together at Promed to deliver safe outcomes, even in extremely high-risk situations.”  

Mr. S, the 95-year-old patient, shared, “After the heart attack, I was told my heart was very weak and had several blockages. When the doctors said it could be treated, I had both fear and faith. Today, I feel stronger and grateful, I can enjoy conversations, short walks, and time with my family again. They didn’t just treat my heart; they gave me back my life.”  This protected angioplasty on Asia’s oldest patient marks a significant milestone in the evolution of geriatric cardiac care. 

It showcases India’s growing expertise in managing high-risk cardiac procedures with global standards of precision and safety.  Promed Hospital continues to be at the forefront of technology-driven, patient-centred innovation, combining empathy with clinical excellence to redefine possibilities in cardiac and critical care.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.