தேரே இஷ்க் மே - திரை விமர்சனம்
இந்திய விமானப்படையின் மிகத் தேர்ந்த விமானியான ஹீரோ ஷங்கர் கட்டுக்கடங்காத கோபமும் யாருக்கும் அடங்காத குணமும் கொண்டவராக இருக்கிறார். அப்படியானவருக்கு மன ரீதியான ஆலோசனை வழங்குவதற்கு உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதற்காக, சிறந்த மனநல நிபுணருக்கு ஷங்கர் குறித்த விவரங்கள் அடங்கிய ரகசிய கோப்பு அனுப்பப்படுகிறது. அதைப் பார்க்கும் அந்த மருத்துவரான முக்தி அவசர அவரசமாக ஷங்கரைக் காணச் செல்கிறார். அங்கு இருவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இந்நிலையில் தனுஷின் தந்தை பிரகாஷ் ராஜ் மரணமடைகிறார். ஒரு பக்கம் காதலிக்கு திருமணம், மறுபக்கம் தந்தையின் மரணம்! பிறகு என்ன நடந்தது? என்பதே கதை....
இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது வழக்கமான காதல் கதையில் மீண்டும் பட்டையை கிளப்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக எமோஷனல் காட்சிகள் நம்மை வெகுவாக கவருகிறது.
ராஞ்சனா படத்தில் எப்படி குந்தன் நம்மை கண்கலங்க வைத்தாரோ, அதே போல் இப்படத்தில் சங்கரும் நம்மை கலங்க வைத்துவிட்டார். அதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றி.
மனிதனிடம் நீங்காத வன்முறை மட்டுமல்ல அன்பும் அவனுக்கு மிகப்பெரிய எதிரியே என்பதை தனுஷ் மற்றும் க்ரித்தி சனோனின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகளுடன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
காதல் என்றாலே வலிதான். அதிலும் ஒருதலைக் காதல் என்றால்? இவை இரண்டும் இப்படத்தில் பதிவாகியிருக்கின்றன. க்ரீத்தி சனோன் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். தனுஷுக்கு நிகரான நடிப்பை திரையில் காட்டியுள்ளார்.
குறிப்பாக இரண்டாம் பாதியில் தேவதாஸ் போல காதலில் பாதிக்கப்பட்டு வாடும் காட்சிகளில் க்ரீத்தியின் நடிப்பு வேற லெவல். காதல் என்றாலே வலிதான். அதிலும் ஒருதலைக் காதல் என்றால்? இவை இரண்டும் இப்படத்தில் பதிவாகியிருக்கின்றன.
முதல் பாகத்தில் நகைச்சுவை, காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் காதலின் வலி என்ன என்கிற அழுத்தமாக வசனங்கள் உணர்வுப்பூர்வமாக மாறுகின்றன. இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கதையின் இன்னொரு நாயகனாக அசத்தியிருக்கிறார்.
பின்னணி இசையிலும் பாடல்களிலும் உணர்வுகளைத் தெளித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்பாடலான உசே கேக்னா பாடல் ஒலிக்கப்படும்போது சின்னச் சின்ன மரணங்களுக்குப் பெயர்தான் காதல்.... என மனம் சஞ்சலமடைகிறது.
கதையில் கொஞ்சம் கவனம் தேவை.... டப்பிங் பல இடங்களில் சரியாக இல்லை....
மொத்தத்தில் இந்த 'தேரே இஷ்க் மே' காதல் உணர்வின் வலி.....
RATING 3.3/5

கருத்துரையிடுக