டிசம்பர் 2025

"த்ரிகண்டா" டிரைலர் வெளியீட்டு விழா!



SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு  கதாநாயகியாக நடித்துள்ளார். கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  & ஷாஜித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.


இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரைலரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்சியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது. டிசம்பர் மாதம் என்பதால் இந்த வருடம் தமிழ் சினிமா எப்படி இருந்தது, லாபம் எவ்வளவு நட்டம் எவ்வளவு என ஒரு விவாதம் அனைவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருடம் தமிழ் சினிமா நன்றாகவே இருந்தது. நிறைய சிறு முதலீட்டு படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக மாறிய நிகழ்வு இந்த வருடம் நிறைய நடந்திருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் சிறை திரைப்படம் கூட சின்ன பட்ஜெட்டில் உருவானது என்றாலும் வெளியாவதற்கு முன்பே அதன் அனைத்து உரிமைகளும் நல்ல விலைக்கு விற்றுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்திருக்கின்றன.


ஹவுஸ் மேட்ஸ், மிடில் கிளாஸ், ஆரோமலே போன்ற சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்திருக்கின்றன. இது பாராட்டத்தக்க விஷயம் தான். இப்படி இருக்கின்ற நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் போன்ற அனுபவம் மிக்க ஆட்கள் சினிமா நன்றாக இல்லை, நடிகர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் சொல்வது போல இல்லாமல் அனைத்து நடிகர்களும் குறைந்தது நான்கு படங்களாவது பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டரில் கூட்டம் வருகின்ற படம் மட்டும்தான் வெற்றி படம் என்று சொல்ல முடியாது. தயாரிப்பாளர் போட்ட முதலீடு அவருக்கு திரும்பி கிடைத்து விட்டாலே அது வெற்றி படம் தான். வாராவாரம் காந்தாரா போன்ற படங்கள் வெளியாக முடியுமா என்ன ? சின்ன சின்ன படங்கள் வரத்தான் செய்யும். அதற்கான வசூலை பெறத்தான் செய்யும். சினிமா நன்றாக இருக்கிறது. சந்தோஷமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுங்கள்.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை தெலுங்கு சினிமாவில் இது போன்ற மித்தாலஜிக்கல் படங்களை மிக அட்டகாசமாக எடுப்பார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. சுவாரசியமாக இருக்கிறது. மகேந்திரனுக்கு இது ஒரு திருப்புமுனை கொடுக்கும் படமாக இருக்கும். கியூப்பும் UFOவும் தாங்களே தனி ஆளுமை பண்ண கூடாது என்பதற்காக அவர்களுக்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களே தங்களது படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கொடுத்து திரையிட சொல்லலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை. இதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை சரியாக செய்து விட்டால் சின்ன பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில் மிகப்பெரிய செலவு இருக்காது என தெரிகிறது” என்று பேசினார்.


இசையமைப்பாளர் ஷாஜித் பேசும்போது, “இந்த படத்தில் முதலில் ஹர்ஷவர்தன் சார் தான் இசையமைப்பாளராக இருந்தார். அவர் ரொம்பவே பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் முழு நேரமாக செயல்பட முடியவில்லை. இயக்குநர் மணி என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்தார். நான் கேரளாவை சேர்ந்தவன். ஆனால் இங்கே சென்னையில் தங்கியிருக்கிறேன். தெலுங்கு படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். மித்தாலஜிக்கல், ஹாரர், த்ரில்லர் என பல ஜானர்கள் இந்த ஒரே படத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த படத்தில் பயணித்தது மிக சவாலாக இருந்தது. படத்தின் உருவாக்கம், படத்தொகுப்பு எல்லாமே எனக்கு முதலில் புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. மகேந்திரன் மட்டுமல்ல கதாநாயகி சாஹிதியும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் இசைப் பணியில்  எனது மனைவியும் ரொம்பவே உறுதுணையாக இருந்தார்” என்று பேசினார்.


குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சஞ்சய் பேசும்போது, “இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து இயக்குநர் கொடுத்துள்ளார்” என்று பேசினார்.


படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் பேசும்போது, “தெலுங்கில் நான் மூன்று படங்கள் தயாரித்துள்ளேன். தமிழில் இது எனது முதல் படம். தமிழில் இதை ஏன் தயாரித்திருக்கிறேன் என்றால் குமரிக்கண்டம், பழமையான தமிழர்கள் என இது முழுக்க தமிழுக்கான கதை. இந்த படத்தை துவக்கும்போதே நல்ல மனிதர்கள் இதில் இணைய வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இயக்குநர் மணி உள்ளே வந்தார். அனைவரும் இதில் வந்தார்கள். நாம் நல்ல கதையை தேர்வு செய்யும்போது, மக்கள் அதை பார்க்க முன்வருவார்கள்.. கடந்த வருடத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதில் அதிகப்படியான வசூலை கொண்டு வந்தது சின்ன பட்ஜெட் படங்கள் தான். மகேந்திரனை இந்த படத்தின் கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு காரணம் அவரை எல்லா மொழியில் இருப்பவர்களுக்கும் நன்கு தெரிகிறது. அவர் ஒரு சவுத் இந்தியன் ஸ்டார்” என்று பேசினார்.


நடிகர் கல்லூரி வினோத் பேசும்போது, “மகேந்திரன் எனக்கு நெருக்கமான நண்பர். அவர் முதலில் கதாநாயகனாக நடித்த விழா திரைப்படத்தில் நானும் நடித்திருந்தேன். நாமெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கப்போன காலத்தில் மகி அவரது தந்தையுடன் நடிக்க போய்க் கொண்டிருந்தார். இந்த படத்தில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளருக்கு  நிச்சயம் இந்த படம் லாபத்தை தரும். இந்த படம் வெளியான பிறகு இயக்குநர் மணிக்கு நிறைய படங்கள் தேடி வரும்” என்று பேசினார்.


கதாநாயகி சாஹிதி அவான்ஷா பேசும்போது, “த்ரிக்கண்டா படம் பவர்ஃபுல் மித்தாலஜி, சைக்காலஜி, ஆக்சன், அற்புதமான விசுவல்ஸ் என எல்லாவற்றையும் உள்ளடக்கி உள்ளது. தமிழ் சினிமா தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு எப்படி திரில்லிங்காக இருந்ததோ படம் பார்க்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படும்” என்று பேசினார்.


நாயகன் மகேந்திரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். மாஸ்டர் படம் எனக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்தேன். எனக்கு அங்கே நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி தெலுங்கில் நல்ல படம் நடிக்கலாம் என நினைத்தபோது தான் இயக்குனர் மணியை சந்தித்தேன். இந்த படம் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்குப் பிறகும் அதை போட்டு பார்த்துவிட்டு இன்னும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என இயக்குனரும் தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அந்த கஷ்டத்திற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி எதிர்பார்த்த ஒரு தெலுங்கு படமாக இந்த படம் இருக்கிறது.


மாஸ்டர் சஞ்சய் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நானே ஒரு குழந்தை நட்சத்திரம், என் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடித்திருப்பதை பார்க்க எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதேபோல சஞ்சய்க்கும் இந்த சினிமா நிறைய கொடுக்கும். நாட்டாமை படத்தில் கே.எஸ் ரவிக்குமார் எனக்கு மாஸ்டர் மகேந்திரன் என்று பெயர் வைத்தார். எத்தனை காலத்திற்கு இப்படி மாஸ்டர் மகேந்திரன் என்கிற பெயரே தொடரும் என்று நினைத்தபோது ஒரு யுனிவர்ஸ் போல லோகேஷ், விஜய் அண்ணா கூட்டணியில் மாஸ்டர் என்கிற படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் என் பெயருக்கும் அது பொருத்தமாக அமைந்துவிட்டது. எனக்கு அது பெருமையான விஷயம் தான். மகேந்திரன் என்று சொன்னால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது” என்று பேசினார்.


இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “தெலுங்கிலேயே நிறைய கதைகள் இருக்கும்போது, தமிழை தேடி வந்ததற்காக தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026 நிச்சயமாக நல்ல வருடமாக இருக்கும். ஏனென்றால் இனிமேல் நல்ல கதைகள் வரும். நல்ல கதை தான் ஹீரோ. இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுவது ட்ரைலர்கள் தான். நல்ல படம் பண்ணியிருக்கிறோம் என்று நீங்கள் பெருமையுடன் சொல்லலாம். படங்களின் பட்ஜெட்டை பொறுத்து  சாதாரண இடத்திலோ, சத்யம் தியேட்டரிலோ, பீனிக்ஸ் மாலிலோ கூட விழா நடத்தலாம். ஆனால் எல்லா படத்திற்கும் கியூப் கட்டணம் என்பது ஒன்றாக தான் இருக்கிறது. இதை யார் பேசுவார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார்.


இயக்குநர் மணி தெலக்குட்டி பேசும்போது, “இந்த படத்தை தமிழில் எடுக்க சென்னையில் முழுக்க ஆதரவு கொடுத்தது மகேந்திரன் தான். குமரிக்கண்டம் பகுதியில் கதை நடப்பது போல இதை ஒரு புனைவு கதையாக உருவாக்கியிருக்கிறேன். இந்த டைட்டில் ஏன் வைத்தோம் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். மெகா ஸ்டார், பவர் ஸ்டார் போல மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” என்று கூறினார்.


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல்!



மிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர்.

மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு.எஸ்.ஜோதி, திரு.வி.பழனிவேல், திரு.கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் திரு.ஏ.முருகன், திரு.ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், திரு.கே.முருகன், திரு.வி.ஞானவேல், திரு.பிரவின்காந்த், திரு.வி.என்.ரஞ்சித் குமார், திரு.எஸ்.ஜெயசீலன், திரு.ராஜா @ பக்ருதீன் அலி அகமத், திரு.எம்.தனசண்முகமணி, திரு.பி.ஜி.பாலாஜி, திரு,இசக்கிராஜா, திரு.பி.மகேந்திரன், திரு.எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், திரு.ஏ.ஏழுமலை, திரு.எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
 
தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர் திரு.ஏ.எஸ்.பிரகாசம், திரு.வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் திரு.தீனா, இயக்குனர் திரு.லிங்குசாமி, இயக்குனர் திரு.சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். வேட்பாளர்களை திரு.கலைபுலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்கள் வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள். திரு.ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பேசினார்கள். 

INTER COLLEGIATE AIDS GANA SONG DANCE COMPETITION



Chennai:

The Indian Community Welfare Organisation (ICWO), along with several partners, held an Inter-Collegiate AIDS Gaana Song Dance Competition on December 23, 2025, at C. Kandaswami Naidu College for Men in Chennai. The event aimed to raise awareness about HIV/AIDS, promote prevention, and reduce stigma through the medium of Gaana music and dance. Students from multiple colleges in Chennai participated enthusiastically, combining social messages with cultural expression.

The competition was opened by Mr. PMJF M. Selvakkumar from the Lions Club of Chennai Golden Friends and Dr. V. M. Muthuramalinga Andavar, the principal of the host college, along with members of the CKNCAA. The prize distribution ceremony featured notable attendees including Thiru. M. K. Mohan, the local Member of Legislative Assembly, Tmt. R. Seethalakshmi, I. A. S., Project Director of the Tamil Nadu State AIDS Control Society, and Dr. Dilip Mathai, Director of Medical Education at Naruvii Hospitals.

Thiru. M. K. Mohan praised the students for using creative methods like song and dance to convey vital messages about HIV/AIDS awareness. He emphasized that such competitions are important as they help engage youth in spreading awareness and dispelling myths surrounding HIV/AIDS. He reiterated that HIV/AIDS is preventable and manageable through knowledge, responsible behavior, early testing, treatment adherence, and non-discrimination against those living with HIV. He encouraged students to be peer educators and advocates for change in their communities.



On this occasion, Tmt. R. Seethalakshmi formally launched an HIV/AIDS awareness poster, stressing the significance of early awareness, prevention, and a stigma-free approach. She highlighted the need for youth involvement in promoting HIV prevention. Mr. PMJF M. Selvakkumar noted the importance of educating young people, stating that platforms like Gaana songs make learning impactful. Dr. V. M. Muthuramalinga Andavar stated that awareness and prevention are crucial in controlling HIV and that engaging students creatively helps spread vital information.

Mr. E. Sundarapandian from CKNCAA and Mr. GVN Kumar emphasized the need for educational institutions to address social issues and allow students to use their skills for positive contributions. Mr. A. J. Hariharan from ICWO explained that public health awareness requires collaboration among various sectors and that initiatives focused on student’s foster long-term social responsibility.

The performances were judged by experts who recognized the creativity and clarity of the messages shared by the participants. The winners were announced: Soka Ikeda College of Arts and Science won first prize, Dr. Ambedkar Government Arts College came second, and Chevalier T. Thomas Elizabeth College for Women secured third place.

Durga Stalin Unveils the Trailer of Director Suresh Krissna's Anantha




Chennai:

The trailer of the film Anantha was officially unveiled in the presence of Ms. Durga Stalin at a grand launch event. Directed by Suresh Krissna and produced by Girish Krishnamoorthy, Anantha features an ensemble cast including Jagapathi Babu, Suhasini Mani Ratnam, YG Mahendran, Thalaivasal Vijay, Nizhalgal Ravi, Sri Ranjani, Abhirami Venkatachalam and several other prominent artistes. The film is slated for release in January on the Jio Hotstar OTT platform.


Music for Anantha has been composed by Thenisai Thendral Deva. Following the successful audio launch held last month, the trailer launch event was conducted recently in the esteemed presence of Ms. Durga Stalin. Members of the film’s cast and crew were present at the event and shared their experiences.

Speaking at the event, director Suresh Krissna said,
“Greetings to everyone. The presence of Ms. Durga Stalin at this event is nothing short of Baba’s blessings. Twelve years ago, Pa. Vijay called me and asked about Kalaignar Karunanidhi. I expressed my admiration for his writing, and to my surprise, I was immediately asked to speak to Kalaignar himself. He invited me to Gopalapuram, where I met him for the first time. He spoke appreciatively about Baashaa, its screenplay, and Rajinikanth sir’s performance. I was fortunate to spend the next six months closely interacting with him. Kalaignar Karunanidhi was someone who gave immense respect to filmmakers.

“After watching my film Sangamam, Mr. M.K. Stalin appreciated me greatly. Today, having Ms. Durga Stalin here is a deeply emotional and joyful moment for me. Producer Girish Krishnamoorthy approached me with the idea of making a film on Baba, driven purely by devotion and love, not commercial motives. When I first met Baba in 2009, he asked me why I had taken so long to come to him—something I did not understand then, but do now.

“Anantha carries a unique energy. Every actor has delivered an outstanding performance. Deva has given magnificent music, and Pa. Vijay’s dialogues are exceptional. This film itself feels like a miracle. Veteran Ratnaghar, without whom this film would not have been possible, watched the film and described it as a ‘beautiful film.’ With the trailer now released and the film set to premiere on Jio Hotstar next month, I am confident audiences will truly appreciate it. My dear friend YG Mahendran has delivered a remarkable performance. Thank you.”

Mrs. Mallika Srinivasan, who also addressed the gathering, said,
“Greetings to all. We are preparing to celebrate Baba’s 100th birth anniversary, and devotees from across the world are coming together for this occasion. Baba has done immense good for humanity. Watching the trailer of Anantha was a deeply emotional experience for me, as it beautifully captures many aspects of his life and teachings. I sincerely thank Ms. Durga Stalin for graciously accepting our invitation and being part of this event. Producer Girish Krishnamoorthy has dedicated his heart and soul to this film. I am eagerly looking forward to Anantha – Part Two. Thank you.”

At the grandly organised event, Ms. Durga Stalin officially released the trailer of Anantha in the presence of the film’s team.Anantha is scheduled to premiere in January exclusively on Jio Hotstar.

Kauvery Hospital Launches One-Tap ‘SOS’ Feature on Kauvery KARE App to Deliver Faster Emergency Care



Chennai: 

Kauvery Hospital today announced the launch of its one-tap ‘SOS’ emergency feature on the Kauvery KARE app, designed to simplify and accelerate access to emergency medical care. The feature enables users to receive immediate medical support with just a single tap, and without the need to remember emergency numbers or explain their location during critical moments.

In emergency situations, panic, confusion, or unfamiliar surroundings often make it difficult for patients or bystanders to communicate essential details to emergency services. Kauvery Hospital’s SOS feature addresses this challenge by automatically capturing the user’s location through GPS, allowing the nearest ambulance to be dispatched instantly to the exact location.

At the same time, the SOS feature enables the user or bystander to connect with a doctor from Kauvery via a 24/7 video call system, ensuring real-time medical guidance and reassurance until emergency help arrives. This seamless integration of ambulance services and live medical consultation helps bridge the crucial gap between the onset of an emergency and hospital care.

Speaking on the occasion, Mr Suresh Sambandam, Founder and CEO, Kissflow said, “ True innovation turns complex problems into simple solutions. Kauvery KARE does exactly that-putting lifesaving care with just one tap away. It is inspiring to see a Tamil Nadu leader using digital innovation to solve real world needs and create a massive impact.”

Speaking at the launch, Dr Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals, said, “Today, mobile apps have become a natural part of how people manage their daily lives from mobility to basic essentials that reach them within minutes. When convenience and speed are already expected in these areas, healthcare cannot remain an exception. During medical emergencies, every second matters. During such moments it is natural for patient or their attenders to be worried and in times of panic they will be unable to reach out for help or explain their situation which can lead to delays. Our goal is to remove complexity from emergency care. With the Kauvery KARE SOS feature, help is just one tap away.”

Beyond emergency support, the Kauvery KARE app serves as a comprehensive digital healthcare platform. Individuals can book appointments across any Kauvery Hospital unit, opt for video or in-person consultations, access health reports digitally, and manage medical records for multiple family members on a single app. The app is available on iOS and Android.

The launch of Kauvery KARE reflects Kauvery Hospital’s commitment to using technology to enhance accessibility, responsiveness, and continuity of care. By combining emergency response with everyday healthcare services, the app aims to provide patients with a dependable, all-in-one digital health solution—available anytime, anywhere.

“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!



குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் A R இசையாமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது. 

அவ்விழாவில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது :


நடிகர் கூல் சுரேஷ் பேசும் போது,

“இந்த படத்தில் நான் நடிக்கத் தொடங்கிய போது, படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. பின்னர் இயக்குனர் நவீன் சார் வாட்ஸ்அப்பில் படத்தின் ஸ்டில் அனுப்பியபோது, ஆங்கில அறிவு குறைவினால் படத்தின் பெயரை ‘Pulse’ என்பதற்கு பதிலாக ‘Piles’ என்று தவறாக புரிந்து கொண்டேன். அதனால் கதையைக் குறித்து பல்வேறு கற்பனைகள் உருவானது. பின்னர் இயக்குனர் நவீன் சார் தெளிவாக விளக்கி, படத்தின் தலைப்பின் உண்மையான அர்த்தத்தை புரிய வைத்தார். அதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்,” என்று கூறினார்.

மேலும், இயக்குனர் நவீன் அவர்களின் பணிப்பற்று மற்றும் அமைதியான செயல்பாட்டை பாராட்டிய கூல் சுரேஷ்,
“ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த கோபமும் இல்லாமல், அனைவரிடமிருந்தும் சிறப்பான வேலை வாங்கும் திறன் அவருக்கு உள்ளது. தயாரிப்பாளர் அளித்த முழு ஆதரவுடன் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை அடையும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

படத்தின் கதாநாயகன் மகேந்திரன் குறித்து பேசிய அவர்,
“ஒரு காட்சிக்காக உடல் தயாரிப்பில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டது அவரது டெடிகேஷனை காட்டுகிறது. இது உண்மையான ஹீரோவின் அடையாளம்,” என்று பாராட்டினார்.
அதேபோல், கும்கி அஸ்வின், சரத், ஈபி சுந்தர் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பையும் அவர் குறிப்பிட்டு பாராட்டினார். குறிப்பாக, ஈபி சுந்தர் அவர்களின் இரவு நேர லொகேஷன் ஆய்வு போன்ற செயல்பாடுகள் அவரது தொழில்முறை அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக கூறினார்.
மேலும், நடிகை அர்ச்சனா குறித்து உருக்கமாக பேசிய கூல் சுரேஷ்,
“பிக் பாஸ் காலத்திலிருந்தே நாங்கள் சகோதர பாசத்துடன் இருந்தோம். இன்று அவர் இந்த விழாவுக்கு வந்து வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சி. அவரது ஆசீர்வாதத்துடனும் ரசிகர்களின் ஆதரவுடனும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்று தெரிவித்தார்.

நடிகை அர்ச்சனா பேசும்போது,

“மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டு அல்ல. அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம். அதுவே பெண்களை தாயாக மாற்றும் அடிப்படை. அதில் அவமானப்பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை,” என்று அவர் தெளிவாக கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர்,
“அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரராக கூல் சுரேஷ் அண்ணன் எனக்கு உதவி செய்தார். பெண்கள் அந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய புரிதலுடன் செயல்பட்ட ஒரு ஆணாக அவர் இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

மேலும், கூல் சுரேஷ் குறித்து பேசுகையில்,
“வெளியில் அவர் பேசும் விதம் வேறாக இருந்தாலும், அவருக்குள் மிகுந்த பாசமும் மனிதநேயமும் கொண்ட ஒரு அண்ணன் இருக்கிறார்,” என்று பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, ‘பல்ஸ்’ திரைப்படம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்த அர்ச்சனா,
“படத்தின் ட்ரைலர் மிகவும் வலுவாகவும் பரபரப்பாகவும் இருந்தது. கதாநாயகன் மகேந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் காட்டிய உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் செய்த துணிச்சலான முயற்சிகள் வியக்கத்தக்கவை,” என்று கூறினார்.

இயக்குனர் நவீன் அவர்களை வாழ்த்திய அவர்,
“முதல் படத்திலேயே இவ்வளவு வலுவான ஹாஸ்பிட்டல் த்ரில்லர் கதையை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தை மிகவும் கன்வின்சிங்காக எடுத்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

தயாரிப்பாளரின் மீது நம்பிக்கை தெரிவித்த அர்ச்சனா,
“ஒரு நல்ல குழுவை நம்பி முதலீடு செய்துள்ளீர்கள். இந்த படம் கண்டிப்பாக நல்ல வர்த்தக வெற்றியை தரும்,” என்றார்.

நடிகர் சேது பேசும்போது,

இயக்குனர் நவீன் கணேஷ் எனக்கு நீண்ட நாட்களாக தெரிந்தவர். இந்த கதையை அவர் சொன்னபோதே இது ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தது. ட்ரைலரை பார்த்தபோது அது மிகுந்த பரபரப்புடனும், மிரட்டலாகவும் இருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.
படத்தின் இசை குறித்து குறிப்பிட்ட சேது,
“மியூசிக் டைரக்டர் த்ரில்லர் படத்துக்கு தேவையான சரியான பிஜிஎம்ஐ கொடுத்திருக்கிறார். பின்னணி இசை படத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது,” என்று பாராட்டினார்.
கதாநாயகன் மகேந்திரன் பற்றி பேசுகையில்,
“அவரை நான் ‘மாஸ்டர்’ படத்திலிருந்தே கவனித்து வருகிறேன். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட நடிகர். இந்த படத்தில் அவர் எடுத்த முயற்சி ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் அவர் எடுத்த ரிஸ்க் பாராட்டத்தக்கது. இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்,” என்றார்.
கூல் சுரேஷ் குறித்து சிரிப்புடன் பேசிய அவர்,
“அவர் இல்லாமல் இன்றைய விழாக்கள் முழுமை அடையாது. நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விப்பது அவரின் தனிச்சிறப்பு,” என்று கூறினார்.
படத்தின் தலைப்பை பற்றி விளக்கிய சேது,
“ஒரு மனிதனின் உயிர் நிலையை அறிய ‘பல்ஸ்’ எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒரு திரைப்படத்தின் வெற்றி ரசிகர்களின் மனதின் ‘பல்ஸை’ பிடிப்பதில்தான் இருக்கிறது. இயக்குனர் நவீன் அதை சரியாக செய்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்த அவர்,
“இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவது மிகுந்த தைரியம் தேவைப்படும் செயல். அந்த தைரியத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள்,” என்றார்.

இயக்குனர் நவீன் கணேஷ் பேசும்போது,

“புதுமுக இயக்குனராக இருந்த என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, கதையின் மீது நம்பிக்கை வைத்து எந்த சமரசமும் இல்லாமல் படம் எடுக்க முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. பட்ஜெட் குறித்து கவலைப்படாமல், படத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்,” என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் தொழில்நுட்ப குழுவை பாராட்டிய நவீன்,
“ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால் ரியல் லொகேஷன்களில் படமாக்கினோம். அதற்கு ஏற்ற வகையில் ஆர்ட் டைரக்டர் முகமது மிக இயல்பான செட் வடிவமைப்பை செய்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி எடிட்டராக இருக்கும் சோம் சேகர் இந்த படத்துக்கு பணியாற்றியது எனக்கு பெரிய பலம். ஒரு த்ரில்லர் படத்துக்கு மிக முக்கியமான எடிட்டிங்கை அவர் கிரிஸ்பாகவும் வேகமாகவும் வழங்கியுள்ளார்,” என்றார்.

ஆக்சன் காட்சிகள் குறித்து பேசுகையில்,
“ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பெயருக்கேற்ற வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் மகேந்திரன் செய்த சண்டைக் காட்சி தியேட்டரில் நிச்சயம் கைத்தட்டல் பெறும்,” என்று கூறினார்.

கதாநாயகன் மகேந்திரன் பற்றி அவர் கூறுகையில்,
“அவர் ஒரு உண்மையான ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’. நான் நினைப்பதை திரையில் அப்படியே கொண்டு வருபவர். ‘ஓகே’ சொன்ன பிறகும் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் டேக் கேட்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. அந்த உழைப்பே படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது,” என்று பாராட்டினார்.

படத்தின் தலைப்பு குறித்து விளக்கிய நவீன் கணேஷ்,
“இது ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத் துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம்,” என்றார்.

மேலும், கூல் சுரேஷ் இந்த படத்தில் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளதாகவும், நடிகர் சேது மற்றும் அர்ச்சனா விழாவுக்கு வந்து வாழ்த்தியதற்காக நன்றிகளையும் தெரிவித்தார்.

நடிகர் மகேந்திரன் பேசும்போது,

இயக்குனர் நவீன் எனக்கு பல வருடங்களாக பழக்கம். நாங்கள் இருவரும் பல பயணங்களை பகிர்ந்த நண்பர்கள். அவர் இந்த கதையை சொல்லும்போது, நான் முதலில் ஒரு நடிகராக இல்லாமல் ஒரு நண்பராகவே கேட்டேன். ஆனால் கதையை கேட்க கேட்க அதன் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது,” என்று மகேந்திரன் தெரிவித்தார்.

படத்தின் ஹாஸ்பிட்டல் பின்னணி குறித்து பேசுகையில்,
“ஒரு ரியல் ஹாஸ்பிட்டல் போலவே தோன்ற வேண்டும், அதே நேரத்தில் ஷூட்டிங்கிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த சவாலான பணியை ஆர்ட் டைரக்டர் முகமது மிக நேர்த்தியாக செய்துள்ளார்,” என்று பாராட்டினார்.

தயாரிப்பாளர் விக்ரம் அவர்களுக்கு நன்றி தெரிவித்த மகேந்திரன்,
“ஒரு புதுமுக குழுவை முழுமையாக நம்பி, எந்த கேள்விகளும் இல்லாமல் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது மிகப் பெரிய விஷயம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கை கிடைப்பது அரிது. அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்,” என்றார்.

கூல் சுரேஷ் குறித்து சிரிப்புடன் பேசிய அவர்,
“ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் இருப்பே ஒரு கலகலப்பை உருவாக்கும். படத்தில் அவர் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்,” என்று குறிப்பிட்டார்.

ஆக்சன் காட்சிகள் பற்றி அவர் கூறுகையில்,
“ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா அளித்த தைரியமும் பாதுகாப்பும் காரணமாக, கிளைமாக்ஸ் காட்சிகளை இயல்பாக செய்ய முடிந்தது. அந்த முழு நம்பிக்கை அவருக்கே,” என்று நன்றியை தெரிவித்தார்.

படத்தின் இசை குறித்து பேசுகையில்,
“பிஜிஎம் வெறும் பின்னணி இசை அல்ல; ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ட்ரைலரில் கேட்டது ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே,” என்று கூறினார்.
மேலும், நடிகர்கள் சேது மற்றும் அர்ச்சனா உள்ளிட்ட அனைவரின் ஆதரவுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

KPY சரத் பேசும்போது,

படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ட்ரைலரை பார்க்கும் போது படம் மிகவும் வலுவான மெடிக்கல் த்ரில்லராக உருவாகியிருப்பது தெரிகிறது. குறிப்பாக பின்னணி இசை மிக உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
கதாநாயகன் மகேந்திரன் குறித்து பேசுகையில்,
“நாங்கள் எல்லாம் ஒரே நண்பர்கள் குழு. அவர் எவ்வளவு கடினமாக உழைப்பவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். உடலை வருத்தி, ஆபத்தான ஆக்சன் காட்சிகளில் அவர் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது,” என்றார்.

கூல் சுரேஷ் பற்றி குறிப்பிடுகையில்,
“அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். இந்த படத்தில் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,” என்று கூறினார்.
தயாரிப்பாளர் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்த KPY சரத்,
“ஒரு புதிய குழுவை நம்பி படம் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த நம்பிக்கை கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், படத்தின் இசை, எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினருக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

K ராஜன் பேசும்போது,

இன்றைய சூழலில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதே தயாரிப்பாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. அந்த நிலையில், புதுமுகங்களை நம்பி, ஒரு நல்ல கதையின் மீது நம்பிக்கை வைத்து பெரிய முதலீடு செய்த தயாரிப்பாளர் விக்ரம் பாராட்டுக்குரியவர். இது மிகுந்த தைரியம் தேவைப்படும் முடிவு,” என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் இயக்குனர் நவீன் குறித்து பேசுகையில்,
“‘பல்ஸ்’ என்ற தலைப்பை பற்றி பலர் பேசினார்கள். ஆனால் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது தலைப்பு அல்ல, கதையில் இருக்கும் வலிமை தான். ஹாஸ்பிட்டல் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த கதையில், பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு உள்ளடக்கம் இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

கதாநாயகன் மகேந்திரன் குறித்து அவர் கூறுகையில்,
“சின்ன வயதிலிருந்தே அவரை கவனித்து வருகிறேன். ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்தாலும், தனக்கான இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். உழைப்பு ஒருநாளும் வீண் போகாது. ஆனால் ஹீரோவான பிறகு சம்பள விஷயங்களில் தயாரிப்பாளரை நினைத்தே முடிவு எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் நலமுடன் இருந்தால் தான் சினிமா துறை நலமாக இருக்கும்,” என்றார்.

மேலும், “பெரிய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி, படம் ஓடாத போது நஷ்டம் முழுவதும் தயாரிப்பாளருக்கு தான் ஏற்படுகிறது. ஆனால் ‘பல்ஸ்’ போன்ற சின்ன படங்கள்தான் புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, சினிமாவை உயிரோடு வைத்திருக்கின்றன,” என்று வலியுறுத்தினார்.

கூல் சுரேஷ் குறித்து சுட்டிக்காட்டிய K. ராஜன்,
“மேடையில் நகைச்சுவையாக பேசினாலும், வாழ்க்கையில் ஒற்றுமையுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும். இந்த படக்குழுவின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும்,” என்று கூறினார்.

16வது "ராஜஸ்தான் ரத்னா" மற்றும் "ராஜஸ்தான் ஸ்ரீ" விருதுகள் 2025



ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு தனது 16வது "ராஜஸ்தான் ரத்னா" மற்றும் "ராஜஸ்தான் ஸ்ரீ" விருதுகளை ஏற்பாடு செய்தது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கௌரவ நீதிபதி திரு. எம். கற்பகவிநாயகம் மற்றும் கௌரவ விருந்தினராக தமிழகத்தின் தலைமை வழக்கறிஞர் திரு. பி.எஸ்.ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜஸ்தானியர்களின் சிறந்த சேவை, தலைமைத்துவம், நேர்மை மற்றும் சமூகம், பொது வாழ்க்கை, வணிகம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான நீடித்த பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இது 16வது விருது வழங்கும் விழா, முதல் பதிப்பு 32 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. 

டிசம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சேத்துப்பட்டியில் உள்ள லேடி ஆண்டாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஒரு முறையான நிகழ்வில், இரண்டு விருது பிரிவுகளின் கீழ் 5 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

“ராஜஸ்தான் ரத்னா” விருது பெற்றவர்கள் 2025: 

1. திரு. பியாரேலால் பிடாலியா - கல்வி, சமூக மேம்பாடு, இரக்கம் மற்றும் மனிதகுலத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு நான்கு தசாப்தங்களாக தன்னலமற்ற சேவை செய்தவர். அவர் தனது சொந்த கிராமத்தில் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 600 பாதுகாப்பான பிரசவங்களை வசதி செய்யும் தொண்டு மகப்பேறு மருத்துவமனையை நிறுவினார். 

2. திரு. Dr. சுனில் ஷ்ராஃப் - சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், 30,000க்கும் மேற்பட்ட சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி மாற்றியுள்ளார். சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் பேராசிரியராகவும் தலைவராகவும் பல தலைமுறை மருத்துவ நிபுணர்களை வடிவமைத்துள்ளார். 

ராஜஸ்தான் ஸ்ரீ விருது பெற்றவர்கள் 2025: 

1. திரு. கிஷோர் ஜெயின் - 1989 ஆம் ஆண்டு கசானா ஜூவல்லரியின் நிறுவனர், சென்னையில் உள்ள சௌகார்பேட்டையில் அதன் முதல் கிளையை 25 ஊழியர்களுடன் தொடங்கி ரூ.50 லட்சம் விற்றுமுதல் மூலம் திறந்தார். 3,500க்கும் மேற்பட்டோரை வேலைக்கு அமர்த்தும் ஒரு உலகளாவிய நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதன் வருவாய் ரூ.10,200 கோடிக்கு மேல். வணிகத்திற்கு அப்பால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு பல கோடி நன்கொடைகள் அளித்து, தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை அவர் மேற்கொண்டார் - எண்ணற்ற உயிர்களை இரக்கத்துடனும் நம்பிக்கையுடனும் தொடும் ஒரு புதிய நோயாளி தொகுதியை உருவாக்குதல். 

2. திரு. பிரவீன் டாடியா - ஒரு அர்ப்பணிப்புள்ள கொடையாளரும், அயராத அமைப்பாளருமான ஸ்ரீ டாடியா, சமூகத்தை வலுப்படுத்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சேவை செய்து வரும் ஒரு தொலைநோக்கு சமூகத் தலைவராக இருந்து வருகிறார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினராக, மத்திய இணை அமைச்சர் பதவியை வகித்து, உள்ளடக்கிய நிர்வாகம், சிறுபான்மையினர் நலன் மற்றும் சமூக நீதியை ஆதரிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். 

3. திரு. ஷிவ் தாஸ் மீனா, ஐ.ஏ.எஸ் - ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவரது வாழ்க்கைப் பயணம் விடாமுயற்சி, தகுதி மற்றும் சேவைக்கு ஒரு சான்றாகும். இந்த தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாவட்ட ஆட்சியர், பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக, அமைதியான அதிகாரம் மற்றும் மூலோபாய தொலைநோக்குப் பார்வையுடன் மாநில நிர்வாகத்தை வழிநடத்தினார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பை அவர் வெற்றிகரமாக நடத்தினார். 


விருது பெற்றவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு தலைவர் ஆற்றிய உரை:

தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பகவிநாயகம் தனது உரையில் கூறியதாவது: 

விழாவில் நீதிபதி எம்.கற்பகவிநாயகம் பேசுகையில், “இங்கு வழங்கப்பட்ட விருதுகள் என்பது ஒருவர் எவ்வளவு படித்தவர், எவ்வளவு திறமையானவர் என்பதற்காக வழங்கப்பட்டதல்ல. இந்த சமுதாயத்துக்கு எவ்வளவு சேவை செய்திருக்கிறார்கள் என்பதை வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. அன்பும், அறிவும் ஒன்று சேரும்போது தான் நாம் முழுமையானவராக மாறுவோம். யாரையும் காயப்படுத்தாமல் பிறருக்கு உதவுவோம். பிறருக்காக வாழுங்கள். மனிதனின் அழகே தனிமனித ஒழுக்கம் தான். நாம் 100 சதவீத மனிதராக வேண்டும் என்றால், ஒழுக்கம் அவசியம். அது இருந்தால் கிரிக்கெட் வீரர் தோனி போல் நூறு அடிக்கலாம்.” என்று தெரிவித்தார். 

விருது பெற்றவர்களில் ஒருவரும், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் (ஓய்வு) கூறியதாவது: 

முன்னதாக ஷிவ் தாஸ் மீனா பேசுகையில், “ராஜஸ்தான் எனது பண்பாடுகளையும், விழுமியங்களையும் உருவாக்கிய ஜென்ம பூமி என்றால், தமிழகம் எனக்கு வாய்ப்பளித்து, வளர்த்தெடுத்த கர்மபூமி ஆகும். மாட்டு வண்டி கூட செல்ல முடியாத இடத்துக்கு மார்வாடியால் செல்ல முடியும் என்ற பழமொழி உண்டு. அதுபோல் நாங்கள் எங்கு சென்றாலும், அந்த மண்ணின் வளர்ச்சிக்காக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவோம். நாம் உலகத்தை விட்டு செல்லும்போது நம்முடன் வரக்கூடிய நற்பெயரையும், புண்ணியத்தையும் சம்பாதிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார். 

நரேந்திர ஸ்ரீஸ்ரீமால், தலைவர் - ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு (RAJAT) கூறியதாவது: 

"ராஜஸ்தானி ரத்னா" மற்றும் "ராஜஸ்தானி ஸ்ரீ" விருதுகள் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 32 ஆண்டுகளில், சமூகப் பொறுப்பு மற்றும் பிற சமூக சேவை மூலம் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கியதற்காக தகுதியான ராஜஸ்தானி மக்களை அங்கீகரித்து வருகிறது. இந்த விருது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடுவர் குழு 70க்கும் மேற்பட்ட பரிந்துரைகளைப் பெற்றது, மேலும் விருதுகளைப் பெறத் தகுதியான சிறந்த 5 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது ராஜஸ்தானி சமூகத்தையும் அதன் உறுப்பினர்களையும் சமூகத்திற்கு நல்லது செய்யத் தொடர்ந்து ஊக்குவிக்கும், மேலும் சமூகத்திற்குத் திருப்பித் தரும் பழக்கத்தை வளர்க்க பலரை ஊக்குவிக்கும். விருது பெற்றவர்களை நான் மனதார வாழ்த்துகிறேன்"

எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான்!



தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு சென்னை அடையாறு பகுதியில் இன்று காலை நடைபெற்றது (CYCLOTHON) . 

பசுமை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மிதிவண்டி. டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்) எலிஃபண்டைன் நிர்வாக இயக்குநர் திரு. ரமணன் பாலகங்காதரன் உடன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மதியிறுக்க (ஆட்டிசம்) நிலையினர் பங்கேற்றுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். மேலும் நகரம் முழுவதும் சுமார் 400 மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்று நிகழ்வை வெற்றிகரமாக முடித்தனர்.

தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் சைக்ளோத்தான் டீசர்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.


இந்நிகழ்வினில் கலந்துகொண்ட டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்)  பகிர்ந்துகொண்டதாவது:

மாரத்தான் சென்னையில் பரவலாக நடந்து வருகிறது ஆனால் இப்போது முதல்முறையாக சைக்ளோத்தான் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிள் ஒட்டுகிறார்கள். பெரிய மகிழ்ச்சி. மக்களின் அடிப்படை தேவை மனமகிழ்ச்சி தான் அது சைக்கிளிங்கில் கிடைக்கும். இதில் கலந்துகொள்ளும் போது பல இடங்களை பார்த்த திருப்தி கிடைக்கும். 50, 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் ஓட்டுபவர்கள் தினமும் எத்தனையோ பேரைச் சந்திப்பார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி தரும். உற்சாகம் தரும். மேலும் இதன் மூலம் சாதனைகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் நிகழும் அதற்காக இந்த சைக்களத்தான் நிகழ்வை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். பைக் ஒரு தானியங்கி இயந்திரம் அதை ஓட்ட உடல் உழைப்பு தேவை இல்லை.  சைக்கிள் ஓட்ட உடல் பலம் தேவை, இளைஞர்கள் பைக் மோகத்தை விட்டு விட்டு சைக்ளோத்தானை  தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான உடல் தகுதி யோடு இருக்கக்கூடிய விளையாட்டு சைக்கிள் பந்தயம் தான். உலக நாடுகளில் பாரிஸில் 1800 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயம் ஆனது இருக்கிறது. லண்டனில் கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல சைக்கிள் ஓட்டக்கூடிய பந்தயங்கள் இருக்கிறது. அங்கு உள்ளவர்கள் அதற்கே தயாராக இருக்கிறார்கள் நமது ஊரில் நாம் இமய மலைக்கு காரில் செல்வதே பெரிய விஷயமாக பார்க்கிறோம். மூன்று நாள் நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அவர்கள் சைக்கிள் ஓட்டுவது அவர்களது மன உறுதியை காட்டுகிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை விட சைக்கிளை ஓட்டுவதே நல்லது.


Frame and Fame Awards Curtain Raiser: Honouring Cinema with Credibility



Veteran journalist, producer, director, and actor Mr. Chithra Lakshmanan, a stalwart of Tamil cinema with over five decades of experience, has announced the launch of the Frame and Fame Awards under his acclaimed YouTube platform, Touring Talkies.  The awards are jointly organised by veteran PROs Mr. Singaravelu, Mr. Riaz K. Ahmed, and Ms. Paras Riyaz as partners.

Addressing the media in Chennai, Mr. Chithra Lakshmanan stated that Frame & Fame was conceived as a meaningful tribute to the film fraternity, emphasising that true recognition and applause hold greater value than commercial success, and that the awards seek to restore dignity and credibility to film honours.

The FRAME & FAME  Awards will be held on January 25, 2026, at Kamarajar Arangam, Chennai, celebrating outstanding achievers across the Indian film industry.

Renowned filmmaker Mr. K. Bhagyaraj will serve as Chairman of the Jury, with Ms. Khushbu Sundar, Mr. Ilavarasu, Mr. Murali Ramasamy, Mr. T. Siva, Mr. R. K. Selvamani, and Mr. R. V. Udayakumar as jury members. The awards will be presented in 50 categories, covering artistes, technicians, and creative professionals, along with select special honours to be announced shortly.

Jury members T. Siva, R.V Udayakumar, K. Bhagyaraj, and R. K. Selvamani, unveiled the trophy and lauded the organisers' integrity and unwavering commitment to cinema, expressing confidence that Frame and Fame will soon emerge as one of the most respected film honours in the country.

Jointly presented by Mr. A. C. Shanmugam, Mr. Ishari K Ganesh, and Mr. Kannan Ravi (Dubai), FRAME & FAME Awards aims to set a new benchmark in film awards through its focus on fairness, credibility, and a sincere celebration of talent.

NATIONAL AROGYA EXPO & AYUSH CONCLAVE 2026



Chennai:

As a significant prelude to the upcoming National Arogya Expo & AYUSH Conclave 2026, a high-level preview and interaction meeting was successfully held on December 16, 2025, at Chennai. The conclave is being jointly organised by the Ministry of AYUSH, Government of India, and the Heartfulness Institute, with the support of NASYA, VIBA, and Dr. SHREEVARMA’s Wellness.

The event marked an important milestone in setting the tone and vision for the national conclave scheduled to be held from January 9 to 12, 2026, at the Heartfulness Institute, Babuji Memorial Ashram, Manapakkam, Chennai. The preview meet brought together senior AYUSH physicians, integrated medicine experts, core committee members, and key stakeholders from the healthcare and wellness ecosystem.

The gathering emphasized that the National Arogya Expo & AYUSH Conclave 2026 is not merely a conference, but a national health movement aimed at repositioning India’s traditional systems of medicine as a core solution to contemporary health challenges. In the context of rising lifestyle disorders, chronic diseases, mental health concerns, and preventive healthcare needs, speakers highlighted the urgent necessity of shifting the healthcare narrative from disease management to disease prevention.

Participants collectively reiterated that AYUSH systems—Ayurveda, Yoga, Siddha, Unani, Naturopathy, and Homoeopathy—offer a holistic, time-tested, and scientifically grounded approach to human health. These systems, they noted, address not only physical ailments but also mental well-being, lifestyle balance, and long-term sustainability of health.

Speaking at the event, Dr. SHREEVARMA, Founder Chairman – Wellness by Heartfulness, underscored that AYUSH should not be viewed as an alternative to modern medicine, but as an integrated life science that complements and strengthens the overall healthcare framework. He emphasized that preventive healthcare, lifestyle correction, and mind–body harmony must form the foundation of future medical systems, and AYUSH provides a clear and culturally rooted pathway toward this goal.

Dr. Gowthaman highlighted the growing global relevance of integrated medicine, stressing that traditional medical knowledge and modern clinical approaches are not opposing forces, but mutually reinforcing disciplines. He spoke on the scientific validation, research opportunities, and expanding international interest in AYUSH-based healthcare models.

Dr. Vijeyapal and Dr. Veera Cholan shared their clinical and community-based experiences, drawing attention to the rising burden of lifestyle-related disorders and the responsibility of healthcare professionals to educate society on preventive practices. They emphasized that AYUSH systems play a crucial role in empowering individuals to take ownership of their health through sustainable lifestyle choices.

Adding to the discussion, Dr. Jayarooba focused on the importance of engaging the younger generation—students, young doctors, and researchers—in the AYUSH movement. She noted that platforms such as the National Arogya Expo & AYUSH Conclave provide a rare and valuable opportunity for learning, collaboration, and inspiration at a national level.

The speakers collectively highlighted that the National Arogya Expo & AYUSH Conclave 2026 will feature high-level academic sessions, expert panel discussions, research presentations, student engagement programs, and collaborative forums for doctors, researchers, entrepreneurs, and policymakers. The conclave is designed to foster meaningful dialogue on the future of healthcare in India and beyond.

In parallel, the Arogya Expo will showcase a wide spectrum of AYUSH products, medical technologies, research innovations, wellness solutions, and industry advancements. The expo is expected to serve as a vibrant platform for national and international collaboration, encouraging partnerships between healthcare practitioners, industry leaders, startups, and research institutions.

Participants at the preview event also emphasized the critical role of the media in shaping public understanding of AYUSH systems. Accurate, evidence-based, and responsible communication was highlighted as essential to building trust and awareness among the public.

Media organizations were encouraged to act not only as information disseminators, but as partners in a larger social transformation toward preventive and holistic healthcare.

The event concluded with a unified expression of commitment from all attending doctors and committee members, affirming their full support for the National Arogya Expo & AYUSH Conclave 2026. Attendees pledged active participation and collaboration to ensure the success of the conclave and its broader mission of advancing India’s traditional health systems on a global platform.

This preview meeting is being viewed as more than a preparatory gathering—it marks the beginning of a national journey toward integrated, preventive, and sustainable healthcare, firmly rooted in India’s traditional wisdom and aligned with contemporary global health needs.


'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!



'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ''கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. 'உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!'  என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார்.‌ அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது.  'வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!' என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.

இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் - ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.

இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம் கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,'' என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில், ''கொம்பு சீவி படத்திற்கு வரவேற்பு வழங்க உள்ள அனைவருக்கும் நன்றி. சிவகார்த்திகேயனை வைத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' என மூன்று படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் பொன்ராம். மூன்று திரைப்படங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் குடும்பம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள். தொலைக்காட்சி பார்வையாளர்களின் ரேட்டிங் கணக்குப்படி தமிழில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் சீம ராஜா. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் 'பிராப்பரான டெலிவிஷன் மூவி' என்றால் இயக்குநர் பொன் ராமிற்கு தான் அதில் முதலிடம். நான் அவருடைய இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகன். நிறைய சிரித்து ரசிக்க கூடிய படங்களை உருவாக்கக்கூடிய இயக்குநர் அவர். அவருடைய இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது காமெடியும், ஆக்ஷனும் அதிகம் இருக்கிறது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொன் ராமின் இயக்கத்தில் எங்கள் தலைவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் படம் இது. கிராமிய பின்னணியிலான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஸ்பெஷலாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'பருத்திவீரன்', சமீபத்தில் வெளியான ' விருமன்' என பல படங்களை குறிப்பிடலாம்.  இது போன்ற படங்களுக்கு அவருடைய இசை மண்ணின் இயற்கையான மணத்தையும் மண்ணின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.

கேப்டனின் மனசு அவருடைய  வாரிசுகளுக்கும் இருக்கும் என்பதை விஜய பிரபாகரன் நிரூபித்திருக்கிறார். அண்மையில் அவர் பாலாவின் படத்தை பார்த்து பாராட்டியதே இதற்கு சான்று.‌

சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' படத்தின் மூலமாகத்தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று பார்த்தது போலவே இன்றும் சரத்குமார் இளமையாக இருக்கிறார். அவரை ஓல்டு கெட்டப் போட்டு தான்  வயதானவராக காண்பிக்க வேண்டியது இருக்கிறது. யுவனின் இசை எப்படி இளமையாக இருக்கிறதோ, அதேபோல் சரத்குமாரும் இருக்கிறார். அவரும் இந்த படத்தில் இருப்பதால் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ''இந்த மேடை என் மனதிற்கு நெருக்கமான மேடை. நிகழ்வு தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை பாசத்தின் குழுமமாகத்தான் இங்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இதற்காக வாய்ப்பளித்த இயக்குநர் பொன்ராமிற்கு நன்றி.

இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் எஸ். ஏ  சந்திரசேகரின் உதவியாளர்களாக பணியாற்றும் தருணத்திலேயே என்னுடைய நண்பர்கள். ஆனால் நான் அவர்களுடைய எந்த படத்திலும் நான் பாடல் எழுதவில்லை. கொம்பு சீவி படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் இயக்குநர் பொன்ராமை சந்தித்து இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என உரிமையுடன் கேட்டேன். ஏனெனில் கேப்டன் மீது வைத்திருக்கும் நட்பின் காரணமாகவே கேட்டேன்.‌

பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் நான் 'ராஜ்ஜியம்' படத்தில் 'தமிழன் தமிழன்..' என்பது போன்ற பாடல் எழுதுவதற்கான சூழல் போன்று தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கேப்டனுக்கு எழுதியது போல் அசைக்க முடியாத பாடல் ஒன்றை சண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன். இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

'பருத்திவீரன்' படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். இதுபோன்ற கிராமியத்தை நினைவுபடுத்தும் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பளித்த யுவனுக்கும்,  இயக்குநருக்கும் நன்றி.‌

எங்கள் வீட்டு பிள்ளை சண்முக பாண்டியனுக்கு மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர் கேப்டன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே இது நடைபெற்றது. இதற்காகவும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கேப்டனுடன் ஆறு, ஏழு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் முதன் முதலாக கேப்டன் நடிப்பில் உருவான 'வாஞ்சிநாதன்' படத்திற்கு பாடல் எழுதுவதற்காக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணம் மேற்கொண்டேன். அது மறக்க முடியாது. அவரைப் பற்றிய நினைவுகள் ஏராளம்.‌ அதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

அந்த வகையில் சண்முக பாண்டியன் திரையுலகில் வளர்ந்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். கேப்டனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய அன்பை உங்கள் மீது செலுத்துவோம். அதற்கான களமும், காலமும் வருவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் அன்பால் உருவான குழந்தை. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. அன்பு வெல்லும். சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான கொம்பு சீவியும் வெல்லும் என நம்புகிறேன், வாழ்த்துகள்,'' என்றார்.

இயக்குநர் எம் ராஜேஷ் பேசுகையில், ''சந்தோஷமாக இருக்கிறது. இந்த விழா ஒரு குடும்ப விழாவை போல் தான் இருக்கிறது. நானும் பொன்ராமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய காலத்தில் இருந்தே நண்பர்கள். 'நண்பேன்டா..' என சொல்லிக் கொள்வது போல உள்ள நண்பர்கள். அவருடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலிருந்து இந்த கொம்பு சீவி படம் வரை நான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நண்பனாகவும் கதை விவாதத்தில் பங்கு கொண்டும் உதவி செய்து இருக்கிறேன். இதே போல் அவரும் என்னுடைய படங்களுக்கு உதவி செய்திருக்கிறார். எங்களுக்கு இடையேயான இந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். மிகவும் பிடித்திருந்தது. திரையில் இரண்டு தூண்களாக சரத்குமார் - சண்முக பாண்டியன் தோன்றுகிறார்கள். இந்தப் படத்தில் சரத்குமார் எனர்ஜியுடன் கூடிய நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார். நான் படத்தை பார்க்கும் போது நிறைய இடங்களில் சண்முக பாண்டியன் நடிப்பில் கேப்டனை பார்ப்பது போல் இருந்தது. திரையரங்கில் இந்த காட்சிகளை பார்க்கும் போது ரசிகர்களுக்கு குறிப்பாக கேப்டனின் ரசிகர்களுக்கு அற்புதமான தருணமாக இருக்கும்.

திரைக்குப் பின்னால் இரண்டு தூண்களாக ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். படத்தின் முன்னோட்டத்தை மிகவும் ரசித்தேன்,'' என்றார்.

இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் பேசுகையில், ''பொன்ராம் என்னுடைய பேவரைட் ஆன டைரக்டர். அவருடைய காமெடி திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அவருடைய இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் பட்டியலில் இருப்பதை போல் இருக்கிறது. இதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சண்முக பாண்டியனை நான் சந்தித்து இருக்கிறேன். அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அவருக்காக மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது. தைரியத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அதில் பயணம் செய்யுங்கள். எல்லா திறமைகளும் உங்களிடத்தில் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உங்களுடைய அப்பா அம்மாவின் ஆசியும் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்.  திரையில் உங்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்.

இந்த விழாவின் நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. அவருடன் நான் 15 ஆண்டு காலமாக பயணித்து வருகிறேன்.‌ அவருடைய இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.

விஜய பிரபாகரன் பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோட அண்ணனாக இல்லாமல் சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன்.
சண்முகத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2012ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார்.  சினிமாவில் 13 ஆண்டு காலமாக சண்முகம் பயணிக்கிறார். இந்த 13 ஆண்டு கால பயணம் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த 13 ஆண்டில் எத்தனையோ ஹீரோக்கள் எத்தனையோ படங்களை செய்து இருக்கலாம். ஆனால் இது சண்முகம் நடிக்கும் நான்காவது படம் தான். ஏனென்றால், நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டது சண்முகம் தான். 'எனக்கு படங்களில் நடிப்பதை விட அப்பாவுடன் இருந்து அவரை மீட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு தர வேண்டும்' என உறுதியாக சொன்னார். அதனால்தான் அப்பா என்னை அரசியலில் ஈடுபடு என சொன்னார்.

நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு முன் பல படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் அவை முறையாக நடைபெறவில்லை. இருந்தாலும் அவன் எந்த சலனமும் இல்லாமல் நான் உறுதியாக வருவேன் என நம்பிக்கையுடன் இருந்தான். கேப்டனின் மகன் என்னால் முடியும் என தைரியத்துடன் இருந்தான். 13 ஆண்டுகளில் அவருடைய நண்பர்கள் சினிமாவில் ஜெயித்தாலும் சினிமா மீதான அவனுடைய ஆர்வம் சிறிதும் குறையவில்லை. இந்த தருணத்தில் ஸ்டார் சினிமாஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  சண்முகத்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவிலான அறிமுகமாக இருக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் முகேஷ் சார், சண்முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் பொன்ராம் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று எங்களிடம் சொன்னதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

நான் கல்லூரி படிக்கும்போது சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவான படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அளவிற்கு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சண்முகம் நடிக்கப் போகிறான் என்றவுடன் சந்தோஷப்பட்டேன்.  வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்த்தபோது பொன்ராம் இந்த படத்தில் சரத் சார் நடிக்கிறார் என்று சொன்னவுடன் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.

புலன் விசாரணை காலகட்டத்தில் இருந்து கேப்டனும் சரத் சாரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான நட்பு தனித்துவமானது. இன்று அப்பா இல்லாத நிலையில் சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக சரத் சார் கை கொடுத்து ஆதரவு தருவதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வஸ்தாரா..'  பாடலில் சண்முகமும், சரத் சாரும் நடனமாடும் போது, யார் பெட்டர் என்று தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ரெண்டு பேருமே நன்றாக ஆடினார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவை நான் முதல் முறையாக 'அலெக்ஸாண்டர் மூவி பி ஜி எம் -  யுவன் ஷங்கர் ராஜா ' என்ற டைட்டில் வரும் போது தான் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் அவரை நேரில் சந்திக்கிறேன். சந்தித்து பேச தொடங்கியவுடன் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

'சகாப்தம்' படத்தின் பணிகளை தொடங்கும் போது கேப்டன் எங்களிடம் என்ன சொன்னார் என்றால், சண்முகத்தின் முதல் படத்தில் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து தான் இசை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 'சகாப்தம்' படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். சண்முகத்தின் அடுத்த படமான 'படைத்தலைவன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அவருடைய அடுத்த படமான 'கொம்பு சீவி' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கேப்டனின் ஆசை சண்முகத்தின் முதல் மூன்று படங்களிலும் நிறைவேறி இருக்கிறது. பவதாரணி கூட 'சகாப்தம்' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இதனாலேயே சண்முகத்திற்கு கேப்டனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அப்பா சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் ஹீரோ, ஹீரோயின் மட்டும் இல்ல அதுல ஒர்க் பண்ற எல்லா டெக்னீஷியன் பெயரையும் நீ படிக்க வேண்டும் என சொல்வார். எல்லோரும் ஒன்றிணைந்து தான் ஒரு படத்தினை உருவாக்குகிறார்கள் என்பார்.  அதனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற போது நானும், அம்மாவும் சென்றிருந்தோம். அப்போது இந்த 'உசிலம்பட்டி..' பாடல் ஒலித்த போது அனைவரும் ரசித்தனர். இதை பார்த்த உடன் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்தேன்.  படம் வெளியான பிறகு இதற்காகவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருவார்கள். இது சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன்.  அத்துடன் இது ஒரு புது கூட்டணி என்பதாகவும் பார்க்கிறேன். டிசம்பர் 19ம் தேதி அன்று கொம்பு சீவி மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,'' என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், '' நான் இந்த மேடையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேச வேண்டும். நான் குழந்தை பருவத்தில் இருந்து கேப்டனின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். கேப்டன் எனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன்.

கேப்டன் திருமணம் ஆகி முதல் முறையாக தம்பதிகளாய் எங்களது வீட்டிற்கு விருந்திற்காக வருகை தந்தார்கள். அப்போது நான் , என்னுடைய உறவினர்கள் அனைவரும் அப்பாவின் இசையை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தோம்.

இயக்குநர் பொன்ராம் என்னை சந்தித்தபோது, யார் ஹீரோ என கேட்டேன். சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார். என்னுடைய சகோதரரான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு.

சரத் சாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் பணியாற்றுகிறேன்.

இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்தன. அவருடன் பணியாற்றிய அனுபவம் ஜாலியாக இருந்தது.

கேப்டன் சார் நடித்த 'தென்னவன்' படத்திற்கு நான் இசையமைத்தேன். 'அரவிந்தன்' படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த 'அலெக்சாண்டர்' படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன். இந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் 'அலெக்ஸாண்டர்' படத்திலிருந்து தான் தொடங்கியது. இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது,'' என்றார்.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இங்கு இருக்கும் அனைவரும் கேப்டனை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் தான், அறிமுகமானவர்கள் தான்.
யுவன் ஷங்கர் ராஜா பிறந்ததில் இருந்தே எனக்கு தெரியும். இளையராஜா சார், ஜீவா ஆன்ட்டி எங்களுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். திரையுலகத்தில் எனக்கு சிலர்தான் நண்பர்கள். அதில் மிகவும் முக்கியமானவர் ஜீவா ஆன்ட்டி தான். அவர்கள் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்லலாம்.

அப்போதெல்லாம் எல்லா படங்களும் வெளியாகும். ஹீரோக்களை விட நாங்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம். இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லா படத்திற்கும் பிரிவியூ காட்சி பார்க்க ஜீவா என்னை அழைப்பார்கள். கேப்டன் படம் என்றால் நான் என்னுடைய நண்பர்கள், தோழிகள் அனைவரையும் அழைப்பேன்.

பிரபாகரன், சண்முகம் போல் யுவனும் எனக்கு ஒரு பிள்ளை தான். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் இளையராஜா குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவேன். அதேபோல் சரத்குமாருடனும் பேசுவேன்.
எங்களுடைய திருமணம் நடந்தது ஜனவரி 31 1990. அன்றுதான் 'புலன் விசாரணை' திரைப்படமும் வெளியானது. அன்று முதல் அவர்கள் இருவரிடத்திலும் உண்டான பிணைப்பு, நட்பு இன்று வரை உறுதியுடன் தொடர்கிறது. நடிகர் சங்க தலைவராக பணியாற்றிய போது சரத் சாரும் நெப்போலியன் சாரும் கேப்டனுக்கு இரண்டு கரங்கள் போல் இணைந்து செயல்பட்டார்கள். இப்படி பழைய நினைவுகளை நினைக்கும் போது ஒவ்வொன்றும் அற்புதமான தருணங்களாகத்தான் இருக்கிறது.

சண்முக பாண்டியன் நடித்த 'சகாப்தம்' படத்திற்கு தயாரிப்பாளர் எல் கே சுதீஷ். அவருடைய தாய் மாமாவாக மட்டும் இல்லாமல் அவருடைய அனைத்துமாக இன்று வரை அவர் இருக்கிறார்.‌

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து ரசித்து கொண்டாட கூடிய படமாக இருக்கும். இதனை தமிழக மக்கள் அங்கீகரிப்பார்கள்.

இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், ராஜா சாரும், யுவனும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். அம்மா பற்றிய சென்டிமென்ட் பாடல் என்றால் அது ராஜா சார் பாடினால்தான் சிறப்பு.

படத்தில் சண்முகமும் , சண்முகத்தின் தாய் மாமாவாக நடித்திருக்கும் சரத் சாரும் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். டிசம்பர் 19ம் தேதியன்று கொம்பு சீவி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ''மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவை சந்தித்தேன். அவர்தான் சண்முக பாண்டியனை
வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு கேப்டனையும், சண்முக பாண்டியனையும் சந்தித்தேன். சண்முக பாண்டியனை நேரில் பார்த்ததும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

என்னை பொறுத்தவரை ஒரு படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர் மட்டும் பணியாற்றுவதுடன் தயாரிப்பாளரும் இணைந்து கிரியேட்டிவ்வாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவன். அந்த வகையில் இந்த படத்திற்கும், இந்த நிகழ்விற்கும் தயாரிப்பாளர் முகேஷின் பங்களிப்பும் அதிகம். இதை நான் பாராட்டுகிறேன்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்கி கொண்டிருந்தபோது வைகை அணையின் உள்பகுதிக்கு சென்றேன்.‌ அங்கு மோட்டார் வைத்த கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா என்ற ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதைப்பற்றி விசாரித்த போது அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும்.‌ நீரின் அளவு உயர்ந்தால் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விடுவோம் என்றார்கள். இந்த விஷயம் தான் இந்தப் படத்திற்கான கதையாக உருவானது.

அதன் பிறகு கொரோனா காலகட்டத்தின் போது தேனியில் முகாமிட்டிருந்தேன். அப்போது அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது அப்போது ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை எனக்குள் எதையெதையோ உணர்த்தியது.‌ அதுதான் எனக்கு இந்தப் படத்திற்கான உந்துதல்.

இப்படி ஒரு சீரியஸான கதையில் எப்படி காமெடி என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் எனக்கான சவால்.  இதில் தான் 'ரொக்க புலி' என சரத் சாரும், 'பாண்டி' என சண்முக பாண்டியனையும் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இருக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. என்னை முதன் முதலாக துபாய்க்கு அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடலை பாடியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு மிகப்பெரிய நன்றி.

சரத் சாரிடம் கதை சொல்லும் போது சற்று பயம் இருந்தது. எப்போதாவது ஒருமுறை தான் அவர் பெரிய மனிதர் போல் நடந்து கொள்வார். மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் இளைஞராகவும், மனதளவில் குழந்தையாகவும் இருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிக்காவிற்கும், சரத்குமாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான் தார்னிகா.

சண்முக பாண்டியன் இந்தப் படத்தில்  நடிக்கும் போது காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்க வேண்டும் என்றதும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்.‌ ஆனால் சண்டை காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்காமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏனென்றால் அது கேப்டனின் ரத்தத்தில் ஊறிய விஷயம். அவருக்கு ஒரு குளோசப் காட்சி வைக்கும் போது கேப்டனை பார்த்தது போலவே இருந்தது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'படைத்தலைவன்' படத்தின் தோற்றத்திலிருந்து தான் அவருடைய இந்த படத்திற்கான கதாபாத்திர தோற்றத்தை உருவாக்கினோம். இந்த  திரைப்படத்தின் கதை களம் 1996ம் ஆண்டு என்பதால் அதற்கு ஏற்ற வகையில் மாற்றினோம். பகல், இரவு என்று பாராமல் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கான உயரமும், இடமும் தமிழ் சினிமாவில் காத்துக்கொண்டிருக்கிறது.

முதலில் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக தான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் தான் சண்முகத்திற்காக கதை ஒன்றை உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டார். அந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்த கதைக்கான எண்ணம் உதித்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்த படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

தயாரிப்பாளர் முகேஷ் த செல்லையா பேசுகையில், ''எல்லோரும் சினிமாவிற்காக சென்னைக்கு வருவார்கள். என்னை கொம்பு சீவி விட்டது இரண்டு பேர். ஒருவர் இளையராஜா. மற்றொருவர் கேப்டன் விஜயகாந்த். அவர்களுடைய இன்ஸ்பிரேஷன், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் தான் எனக்கு ஊக்கம் தருபவை.

இளையராஜா இன்றும் காலையில் 6:00 மணிக்கு தன்னுடைய ஒலிப்பதிவு பணியை தொடங்குவார். மாலை 6:00 மணி அளவில் நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார். இந்த இடைப்பட்ட தருணத்தில் அவர் வழங்கும் இசை படைப்பு என்பது மகத்தானது அவர் சென்றடையாத இடமே இல்லை.

கேப்டன் விஜயகாந்தின் நடிப்பு மட்டுமல்ல அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அவருடைய கதாபாத்திரங்களும் மக்களுடைய மனதில் ஆழமாக சென்றடைந்திருக்கிறது.  அவர் பிரியாணி மட்டும் போடவில்லை. அதனை பாசத்துடன் வழங்குவார். பிரியாணி உணவு மட்டுமல்ல அவரின் அன்பும் கூட.  இதனை பார்த்து வியந்து தான் சென்னைக்கு வருகை தந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் பட தயாரிப்பினை தொடங்கி இருக்கிறேன். உங்கள் அனைவரது ஆசியும், ஆதரவும் எங்களுடைய நிறுவனத்திற்கு தேவை. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், ''இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பல நடிகர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அவருடன் பணியாற்ற முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம்.

இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும்  திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ''இந்த விழா கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக கருதுகிறேன். இந்த விழாவிற்காக இந்த மேடையில் நிற்கும் போது எனது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் நட்பை பற்றி குறிப்பிட்டார்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.‌ ஏனெனில் கலை உலக பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, புலன் விசாரணை படத்திற்காக ஒரு வில்லனை தேடிக் கொண்டிருக்கும் போது சரத்குமார் வாட்ட சாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்த்திடம் பரிந்துரை செய்திருக்கிறார். உடனடியாக என்னை அழைத்துக் கொண்டு விஜயகாந்தின் அலுவலகத்தில் அவர் முன் நிறுத்துகிறார்கள். அவர் என்னை பார்த்தவுடன் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், என்னுடைய நண்பர் ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். என்னை பார்த்ததும் அவர் முடிவு செய்துவிட்டார். அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் . உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன் நின்றேன். அன்று தொடங்கியது தான் இந்த கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம்.

அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். 'சரத் இந்த படத்தில் உங்களுக்குத் தான் மிகப்பெரிய பெயர்' என்றார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் நடித்தேன்.

புலன்விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டை காட்சிகளில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியை சொன்ன போதும், சரத் குணம் அடைந்து வந்த பின் அந்த காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது இன்று வரை அவருடைய என்னை பிணைத்து வைத்திருப்பதும் அவருடைய அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அவருக்கு அருகே இருந்து அனுபவித்தவன் நான்.

இன்று இந்த மேடையில் இருந்து ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார்.  அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.

இந்தப் படத்தில் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குடும்ப ரீதியிலான உறவு தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

சண்முக பாண்டியனுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உயரத்தை பற்றி தவறாக நினைக்காமல் உங்கள் உயரத்திற்கு ஏற்ற பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நீங்கள் 'தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்'. அதனால் கழுத்தை குனிந்து மற்றவர்களிடம் கேட்காமல் நிமிர்ந்து கதையைக் கேட்டு பணியாற்ற வேண்டும்.

இந்த 'கொம்பு சீவி' படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

ஒரு திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்துவிடும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல், இந்த படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும். அதே தருணத்தில் டிஜிட்டல் தளங்களுக்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுப்பதை, 50 நாளாக உயர்த்தினால் நன்றாக இருக்கும். மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள். ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அப்போதுதான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தத் திரைப்படம் விவசாயத்தை பற்றியும், விவசாயம் சிறப்பாக இல்லாத தருணத்தில் விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதனை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.