'சிசு ரோட் டு ரிவெஞ்ச்' விமர்சனம்
கடந்த 2022ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து படைத்த திரைப்படம் ‘சிசு’. இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கிறார்.
அப்போது சில தீய வீரர்களின் கையில் தன் புதையல் சிக்காமல் இருக்க அவர்களுடன் சண்டையிட்டு தப்பித்து விடுவதோடு முதல் பாகம் முடிவடையும். இப்போது, மூன்று வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகம் ’சிசு- ரோடு டூ ரிவெஞ்ச்’ படம் வெளியாகி இருக்கிறது. இதில் என்ன கதை, படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக, அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடித்துவிட்டு அதன் மரக்கட்டைகளை கொண்டு வேறொரு இடத்தில் புதுவீடு எழுப்பி தனிமையில் அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார் ஃபின்லாந்தின் முன்னாள் கமோண்டோ அடாமி கார்பி.
ஆனால், அவரது நிம்மதியை குலைத்து, அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற வெறியுடன் அவரை தேடி வருகிறது எதிரணி. போர் வீரரான அடாமி என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர். தன் எதிராளியை சமாளித்து, மரணத்தை வென்று தான் நினைத்தபடி புதுவீடு கட்டி முடிக்கிறாரா? என்பது தான் ‘சிசு- ரோடு டூ ரிவெஞ்ச்’ படத்தின் மீதி கதை.
இயக்குநர் ஜல்மாரி ஹெலாண்டர் ஆக்க்ஷன் கலந்து வன்முறை படம் எடுப்பதில் புதிய சாதனை படைத்து வருகிறார். ரத்தம் சொட்டச் சொட்டத் தலை வெடிப்பது, உடல் தெறிப்பது என அனைத்தும் அவரது பிடித்தமான காட்சிகள். இதிலும் அதே போல் தான்.
தொண்ணூறு நிமிடங்கள் ஓடும் படத்தில் பேசும் காட்சிகள் மொத்தம் பத்து நிமிடங்கள் தான். ஆக்க்ஷன் ஆக்க்ஷன் தான் மீதமெல்லாம். ஒரு ரயில் பெட்டியில் இருக்கும் ராணுவ வீரர்களை அவர் சமாளிக்கும் விதம் பேஷ். பாம் டேங்கர் ஒன்றில் வந்து அவர் செய்யும் அட்டகாசம் சபாஷ். ஆனால்
படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள்..... கதையில் இன்னும் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த 'சிசு ரோட் டு ரிவெஞ்ச்' அதிரடி தாத்தா....
RATING 3/5

கருத்துரையிடுக