ANANDHA MOVIE REVIEW

‘அனந்தா’ விமர்சனம் 



சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் தான் ‘அனந்தா’. புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகிமையையும், அவரது பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான ஆன்மிகத் திரைப்படம். ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இப்படம், பக்தி மற்றும் தெய்வீக நம்பிக்கையை முன்னிறுத்தும் குறுங்கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

கதைக்களம்:

புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில் தொடங்கும் கதை,  இறுதி அழைப்பை முன்னிட்டு ஐந்து பக்தர்களை ஒன்றிணைக்கிறது. மும்பை தொழிலதிபர், பாலக்காட்டைச் சேர்ந்த முதியவர், காசியில் வசிக்கும் தாய், சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் மற்றும் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு தம்பதி என வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இந்தக் கதாபாத்திரங்கள், தங்கள் வாழ்க்கையில் சாய்பாபா நிகழ்த்திய தெய்வீகத் தலையீடுகளை அனுபவக் கதைகளாக பகிர்கிறார்கள். இக்குறுங்கதைகள், பக்தியின் வலிமையையும் நம்பிக்கையின் ஆழத்தையும் எடுத்துரைக்கின்றன.

ஜெகபதி பாபு, தொழிலதிபர் வேடத்தில் பொருத்தமாக இருந்தாலும், அவர் சொந்தக் குரலில் பேசியிருந்தால் பாத்திரத்திற்கு மேலும் வலு சேர்ந்திருக்கும். அபிராமி வெங்கடாசலம் நடனக் கலைஞராக சில உணர்ச்சிகரமான தருணங்களை நன்றாக கையாள்கிறார். 

புட்டபர்த்தி நிர்வாகியாக வரும் நிழல்கள் ரவி அமைதியான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். ஓய்.ஜி. மகேந்திரன் நடித்த பாலக்காட்டு முதியவரின் கதையில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. மனைவியை இழந்த சோகம், தனிமை, அதன்பின் ஏற்படும் மனமாற்றம் என உணர்வூட்டமாக நடித்துள்ளார். 

அவரது மனைவியாக நடித்த ஸ்ரீரஞ்சனி இயல்பான நடிப்பை வழங்குகிறார். சுஹாசினி, தாயின் தவிப்பையும் சரணாகதியையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறார். ஆனால் 

கதை கொஞ்சம் நாடகம் போல் இருந்தது.....

மொத்தத்தில் இந்த 'அனந்தா' சிறந்த பக்தி.   

RATING: 4/5

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.