Latest Post

ராகு கேது தோஷம் நீங்க.....!


ராகு தோஷம்: 

ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புத்தி  காலத்திலும் விரதம் இருந்து, ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம்  செய்து, ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் நீங்கும்.


கேது தோஷம்: 

ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி  காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து, கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு விநாயகப்பெருமானையும் தொடர்ந்து வழிபட்டு வர கேது தோஷம் விலகும்.

சௌபாக்கியத்தை அருளும் வருத்தினி ஏகாதசி விரதம்..



வைகாச மாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது. 

பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.

ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. 

இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.

இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தி தொண்டை அடைகின்றனர். இந்த ஏகாதசி விரதத்தை சரியான முறையில் கடைபிடித்து மன்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள் இந்த ஏகாதசியை கடைப்பிடித்து முக்தி பெற்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார். சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் 40 கிலோ தங்கத்தை தானமாக கொடுப்பதன் மூலம் அடையும் புண்ணியத்தை ஒருவர் சுலபமாக இந்த வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் அடைவார்.  மன்னர்களில் சிறந்தவனே, ஒரு குதிரையை தானமளிப்பதைவிட ஒரு யானையை தானம் அளிப்பது சிறந்தது. 

யானையை தானமளிப்பதைவிட நிலத்தை தானமளிப்பது சிறந்தது. நிலத்தை தானமளிப்பதைவிட எள் தானம் உயர்ந்தது எள் தானத்தைவிட பொன் தானம் உயர்ந்தது. பொன் தானத்தைவிட உணவு தானிய தானம் உயர்ந்தது. உணவு தானிய தானத்தைவிட உயர்ந்த தானம் எதுவும் இல்லை. ஓ, மன்னர்களில் சிறந்தோனே, உணவு தனியங்களை தானமளிப் பதன் மூலம் ஒருவர் தன் முன்னோர்களையும், தேவர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் திருப்தி படுத்த முடியும்.

ஒருவர் தன் மகளை தாரைவார்த்து கொடுப்பது உணவு தானியங்களை தானமளிப்பதற்கு சமம் என கற்றறிந்த சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். உணவு தானிய தானத்தையும் பசுதானத்தையும் முழு முதற்கடவுளே சமபடுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து வகையான தானங்களை விட மற்றவர்களுக்கு ஞானத்தை அளிப்பதே மிக உயர்ந்ததாகும். வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதால் ஒருவர் எல்லா வித தானியங்களின் பலனையும் அடைவார்.

தன் மகளை விற்று வாழ்க்கை நடத்துபவன் மிகப்பெரிய பாவத்தை செய்தவன் ஆகிறான். அத்தகையவன் கடைசி பிரளயம் வரும் வரை நரகத்திலேயே வாழ வேண்டியவன் ஆகிறான். ஆகையால் ஒருவன் தன் மகளை தாரை வார்க்கும் பொருட்டு எந்த ஒரு செல்வத்தையும் ஏற்கக் கூடாது. 

ஒரு குடும்பஸ்தர், பேராசையின் காரணத்தால், செல்வத்திற்காக தன் மகளை விற்றால், அடுத்த பிறவியில் அவன் ஒரு  பூனை உடலை அடைகிறான். ஆனால், ஒருவன் தன் வசதிக்கேற்ப ஆபரணங்களால் தன் மகளை அலங்கரித்து, ஒரு நல்ல வரனுக்கு தாரை வார்த்து கொடுப்பதால் தான் அடையும் புண்ணியத்தை யமராஜாவின் செயலாளரான சித்திரகுப்தனாலும் கணக்கிட முடியாது.

இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பவர் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல் மாமிசத்தை உண்ணுதல்,கீரை தேன் போன்றவற்றை உண்ணுதல், மற்றவர்கள் சமைத்த உணவை ஏற்றுக்கொள்ளுதல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சூதாட்டம், உறக்கம், வெற்றிலை பாக்கை சுவைத்தல், மற்றவர்களை குறை சொல்வது, பாவப்பட்ட ஒருவருடன் பேசுவது, கோபம் கொள்வது, பொய் சொல்வது ஆகியவற்றை ஏகாதசியன்று தவிர்க்க வேண்டும். 

மேலும் ஏகாதசிக்கு முன்தினத்திலிருந்தே உடலுறவை தவிர்க்க வேண்டும். ஒருவர் இந்த ஏகாதசியை விதிகளுக்குட்பட்டு கடைபிடித்தால் அவருடைய எல்லா பாவவிளைவுகளும் அழிந்து விடும், மற்றும் அவர் மிக உயர்ந்த இலக்கை அடைவார்.




பஞ்சவடி ஆஞ்சநேயர்!



ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறுநாள் வரும்படி அனுப்பி விட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான்.

இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.

12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, லட்சுமணன், சத்ருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் இருக்கிறது.

இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும்.பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,''என வரம் கொடுத்தார்.

இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.




நாகூர் தர்காவில் கந்தூரி விழா! 


நாகை மாவட்டம் நாகூரில் உலகப்புகழ்பெற்ற தர்கா உள்ளது. இங்கு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கந்தூரி விழா வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. 

இதை தொடர்ந்து 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி (வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் நாகூர் வருவார்கள்.

இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கொடி மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் செல்லும் இடங்களை பார்வையிட்டனர். மேலும் விழா நாட்களில் தர்காவிற்கு வருபவர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தர்கா நிர்வாக அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். 

தொடர்ந்து ஆண்டவர் சமாதி, தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், தர்கா குளம், அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

விழா காலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கலெக்டர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆய்வின்போது நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தர்கா நிர்வாக மேலாளர் ஜெகபர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


வைகுண்ட ஏகாதசி தரிசன சிறப்பு ஏற்பாடு!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசிக்காக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலகம், ராமச்சந்திரா பஷ்கரணி, பைராகிபட்டிடையில் உள்ள ராமாநாயுடு பள்ளிக்கூடம், மார்க்கெட் யார்டு ஆகிய 5 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒமைக்ரான் பரவல் பாதிப்பை அடுத்து உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இந்த இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.

சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம், 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆகியவற்றில் முக்கிய பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்கள் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வைகுண்ட துவாதசி அன்று அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஏகாந்தமாக சக்கர ஸ்தானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நடக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க கவுண்ட்டர்களிலும், கோவில் உள்ேளயும் குழாய்கள் மூலம் (ட்ரை ஓசோன்) கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அலிபிரி சோதனைச் சாவடி, திருமலையில் உள்ள அறை ஒதுக்கீடு மையங்கள், வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ், லட்டு கவுண்ட்டர்களில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துப் பக்தர்களும் 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். 

பக்தர்கள் சரியாக முகக் கவசம் அணிய வேண்டும். இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் உள்ளூர் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனத்துக்காக ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு 1000 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீவாணி டிரஸ்ட் பக்தர்களுக்கு 1000 மகா லகு தரிசன (தூரத்தில் இருந்து வழிபடுதல்) டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

ஜனவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வீதம் லகு (மூலவருக்கு சற்று அருகில் இருந்து வழிபடுதல்) தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஆர்ஜித சேவையில் ஜனவரி மாதத்துக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது.

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிடும் ஆர்யா!


ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். 

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. 


ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். ஸ்ரீகாந்தின் திரையுலக பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். ஜான் விஜய் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான் விஜய், ரிஷா இருவரும் துணிச்சலாக சில நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளனர்.

ஊட்டியை சுற்றி உள்ள வனப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பல நாட்கள் குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே அர்ப்பணிப்பு உணர்வுடன் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார் 

இயக்குனர் மணிபாரதி கூறும் போது:

“வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் அல்லது வில்லன்கள் தங்களது பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது போன்று பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப்படத்தில் ஊட்டி காட்டேஜ் ஒன்றில் உள்ள ஒரு படுக்கை (Bed) தனது பார்வையில் தன்னை தேடிவந்த மனிதர்களின் வாழ்க்கையை விவரிப்பது போல இதன் கதையை உருவாக்கியுள்ளோம். அதற்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ‘தி பெட்’ என தலைப்பு வைத்துள்ளோம்” என கூறுகிறார். 

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வரும் ஜன-3ஆம் தேதி வெளியிடுகிறார்.

நடிகர்கள்:

ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:

இயக்குநர் ; எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு ; கே.கோகுல்

படத்தொகுப்பு ஜே.பி (கொடி, பட்டாஸ் படங்களில் பணியாற்றியவர்)

இசை ; தாஜ்நூர்

பாடல்கள் ; யுகபாரதி

கலை ; பழனிவேல்

நடனம் ; தீனா

சண்டை பயிற்சி ; ஆக்ஷன் பிரகாஷ்

ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

தயாரிப்பாளர் ; வி விஜயகுமார்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ்

மக்கள் தொடர்பு ; A ஜான்



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.