Latest Post

 ‘காஃபி வித் காதல்’ ஜீ5 நிறுவனம் அறிவிப்பு! 



இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, தமிழில் ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக உருவான “காபி வித் காதல்” திரைப்படத்தை சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாள்விகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் திவ்யதர்சினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 9 ஆம் தேதி டிஜிட்டலில் வெளியாகவுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படமான இந்த ‘காஃபி வித் காதல்’ ஒரு அருமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். 

ஸ்ரீகாந்த் [மியூசிக் டீச்சர்], ஜீவா [ஐடி] மற்றும் ஜெய் [ பிஸினஸ்மேன்] ஆகிய 3 சகோதரர்களின் வாழ்க்கையைச் சுற்றி அவர்களின் வாழ்கையின் வெவ்வேறு பக்கங்களை  சொல்வதே இப்படம். ஒழுக்கமான ரூல்ஸ் மீறாத பையனாக ஸ்ரீகாந்த், தனது லிவ்-இன் ரிலேஷன்ஷனுக்குப் பிறகு கடும் மனவேதனையைச் சமாளிக்கும் நபராக ஜீவா மற்றும் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லாத நிலையில் சொந்தத் தொழிலைத் தொடங்க முயற்சிக்கும் ஜெய். இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை. ஒவ்வொரு பார்வையாளர்களும் தங்கள் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் கதை.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் E. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில், உடன்பிறந்த உறவுகளின் கோபத்தையும் அன்பையும் இந்த படம் சித்தரிக்கிறது. இப்போது, ஜீ5 தளத்தில் அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், இப்படம் 190+ நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்குக் கிடைக்கும். எனவே, இந்த இதயத்தைத் திருடும்  கதையை டிசம்பர் 9 ஆம் தேதி பார்க்கத் தயாராகுங்கள்.

ஜீ5 தளத்தின் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “பார்வையாளர்களை புதிய கதைகள் மூலம் மகிழ்விப்பதே எங்கள் நோக்கம.  'காஃபி வித் காதல்' உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், ஒரு அட்டகாசமான ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தை, பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளொம். இன்றைய வேகமான உலகில், நம் அன்புக்குரியவர்களுடன் செலவளிக்கும் நேரம் குறைவாகிவிட்டது. நம் அன்பையும் உறவுகளின் நேசத்தையும் ஞாபகப்படுத்தும் அழகான திரைப்படமாக ‘காஃபி வித் காதல்’ இருக்கும்.

இயக்குநர் சுந்தர் சி கூறுகையில், “காபி வித் காதல்” ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம்.  சில சமயங்களில் நமது பெற்றோர்கள் நமது தனித்திறமைகளை உணரத் தவறிய நேரங்கள் உண்டு, ஆனால் நம் உடன்பிறப்புகள் எப்பொழுதும் நம்மைக் கவனித்து, நம்மைச் சரியாக புரிந்து கொள்வார்கள். காஃபி வித் காதல் என்பது உறவுகளின் கலவையாகும், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் உடன்பிறப்புகளுடனான மோதல்கள் மற்றும் இனிமையான நினைவுகள் அனைத்தையும் அழகாக சொல்லும் கதை இது. இப்படத்தை காணும் ஒவ்வொருவரும் தங்கள் உடன்பிறப்பை கண்டிப்பாக நினைப்பார்கள். ஜீ5 தளம் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி இந்தக் கதையைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல, இதை விட சிறந்த தளம்  இருக்க முடியாது.

இதயத்தை கொள்ளை கொள்ளும் அருமையான பொழுதுபோக்குக்கு  'காஃபி வித் காதல்'  காண தயாராகுகங்கள்! டிசம்பர் 9 முதல் ஜீ5 தளத்தில் ‘காபி வித் காதல்’ பார்க்க தயாராகுங்கள்!


இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும்,சிந்திக்கவும் தூண்டும் - இயக்குனர் பெருமாள் காசி


எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில்  நகைச்சுவை கலந்த  படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் "என்ஜாய்".

சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும்,  கருத்து  வெளிப்பாட்டு நன்மைகளையும்,  சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை.

இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும்  இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக  இதனைப் பயன்படுத்தினார்களா  இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கட் பட்டார்களா  என்பதே என்ஜாய் சொல்லும்  கதை. 

இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும்  இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும்.  சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும்.

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் - 'என்ஜாய் ' படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார். அறிமுக இயக்குனர் பெருமாள் காசி. பல படங்களுக்கு புரொடக்சன் மேனேஜராக பணியாற்றிய பெருமாள் காசி 'என்ஜாய்' படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.


ஒளிப்பதிவு -

 KN அக்பர்,

இசை - KN ரயான் .

எடிட்டர் - மணி குமரன்.

பின்னணி இசை- சபேஷ்- முரளி.

பாடல்கள் - விவேகா, உமாதேவி.

நடனம்- தினேஷ்.

சண்டை- டேஞ்சர்மணி

கலை- சரவண அபிராமன்.


நடிகர்கள்- 

மதன்குமார் 

டான்சர் விக்னேஷ்

ஹரீஸ்குமார்

நிரஞ்சனா

ஜீ,வி அபர்ணா,

சாய் தன்யா

ஹாசின்

சாருமிசா

"வரலாறு முக்கியம்" சிறந்த காமெடி படம்- நடிகர் ஜீவா  


சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.


இந்நிகழ்வினில்..

நடிகர் டி எஸ் கே பேசியதாவது:

"சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்."

நடிகர் ஷாரா பேசியதாவது:

"இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ்,  இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை.  SMS போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்

நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது:

"இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். நான் முதன் முதலில் பார்த்த தமிழ் படம் சிவா மனசுல சக்தி படம் தான். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.  இது எனது கனவு நிஜமான தருணம். முதல் படத்திலயே மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய விஷயம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.

இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசியதாவது:

இந்தப்படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது எனது கனவு அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரக்யா குஜராத்தி பெண் ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்து விட்டார். அந்தளவு கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

நடிகர் ஜீவா பேசியதாவது:

"SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும்  அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார். பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன் பகிர்ந்துகொண்டதும், படபிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இத்திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சக்தி சரவணன் (ஒளிப்பதிவு), ஸ்ரீகாந்த் N.B. (எடிட்டிங்), மோகன் (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), பிருந்தா (நடனம்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One  (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர்.

"கட்டா குஸ்தி" திரைப்படத்தின் விமர்சனம் 


செல்லா அய்யாவு  இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியீட்டில், ஜஸ்டின் பிரபாகர் இசையில்,  நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் "கட்டா குஸ்தி". 

கேரள மாநிலம் பாலகாட்டைச் சேர்ந்த கீர்த்தி (ஐஸ்வர்யா லக்ஷ்மி) குஸ்தி போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பையை வெல்லும் கீர்த்திக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கிறது. குஸ்தி வீரராக இருப்பதாலேயே அவருக்கான வரன்கள் கைகூடாமல் விலகி செல்கின்றன. 

ஒரு கட்டத்திற்கு பிறகு சில பொய்களைச் சொல்லி கீர்த்திக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராவுக்கும் (விஷ்ணு விஷால்) திருமணம் நடத்தப்படுகிறது. சுமூகமாக செல்லும் திருமண வாழ்க்கையில் பொய்கள் வெளிச்சத்திற்கு வந்து பூகம்பமாய் கிளம்ப, தம்பதிகளின் வாழ்கையில் இடையில் புகுந்து குஸ்தி போடும் சண்டைதான் ‘கட்டா குஸ்தி’ கதை. ஐஸ்வர்யா லக்ஷ்மி சமரசமின்றி அதேமாதிரியான கதையில் இம்முறை குஸ்தி வீராங்கனையாக களமிறங்கியிருக்கிறார். 

கிராஃப் வெட்டி, சேலையை ஏற்றிக்கட்டி எதிரிகளை பந்தாடுவதாகட்டும், குஸ்தி போட்டிகளிலும், ஆக்ரோஷமான கண்பார்வையிலும், விளையாட்டு வீராங்கனைக்கான லுக்கிலும், அதேசமயம் கிராமத்து பெண்ணாகவும் இருவேறு எல்லைகளில் நடிப்பில் உச்சம் தொடுகிறார். 

‘படிச்சவ அதிகாரம் பண்ணுவா... படிக்காதவதான் அடங்கி போவா’, ‘நீளமான முடியில்லன்னா அவ பொண்ணுல்ல; பையன்’ போன்ற பழமைவாத வசனங்களை பேசும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால். தனக்கு கிடைத்த இடங்களில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார். நாயகன் அறிமுகத்திற்கு ஒரு பாடல், திருமணத்திற்காக ஒரு பாடல், உள்ளூருக்கு ஒரு வில்லன், வெளியூருக்கு ஒரு வில்லன், கை நீட்டியதும் வந்த வேகத்தில் பவுன்சாகும் எதிரிகள் என தெலுங்கில் படம் வெளியாவதை கவனத்தில் வைத்து மசாலாவை தூக்கலாக்கியிருக்கிறார்கள். 

திருமணத்திற்காக கூறிய பொய்யை சமாளிக்க போராடும் நாயகி, மனைவியிடம் கெத்து காட்ட நாயகன் செய்யும் செயல்கள், ஆர்ப்பரிக்க வைக்கும் இடைவேளை என ‘கட்டா குஸ்தி’ முதல் ரவுண்டில் ஸ்கோர் செய்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு பிறகு எளிதாக கணிக்கக் கூடிய காட்சிகளாக அமைகிறது. ஜனரஞ்சக சினிமாவுக்குத் தேவையான காட்சியமைப்பில் கச்சிதமாக சேர்ந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன்.

மொத்தத்தில் இந்த "கட்டா குஸ்தி" தாங்கி நிற்கும்....               

Gatta kushthi Movie Mark- 3.8/5


 

"பவுடர்" படம் எப்படி இருக்கு?!



தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் "பவுடர்" திரைப்படம். 

சினிமா மக்கள் செய்தி தொடர்பாளராக இருந்த நிகில் முருகன் அறிமுக நாயகநாக இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் தனது நடிப்புக்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பிளாக் காமெடிக்கு முயன்று கமிஷ்னர் பாத்திரத்தைக் கேலிக்கு உள்ளாக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ. வையாபுரியின் பாத்திரமும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது. சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ஆதவன் ஆகியோர் நகைச்சுவைக்காகப் பெரிதும் மெனக்கெட்டுள்ளார்கள். இறுதியில், வித்யா ப்ரதீப்பின் அத்தியாயத்தில் படத்தை முடித்தவிதம் நல்ல த்ரில்லர் படத்திற்கான க்ளைமேக்ஸ் போன்றே அமைந்துள்ளது. ஆனால், கச்சிதமில்லாத் திரைக்கதையால் படத்தின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் தவறிவிடுகிறது. படத்தின் முடிவில் வரும் No சூடு No சொரணை பாடல் எதற்கு என்றே புரியவில்லை....

மொத்தத்தில் இந்த "பவுடர்" பூசினால் த்ரில் தெரியும்..... 

68 வயது விவசாயி-யின் உயிரைக் காப்பாற்றியது வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை!






சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்ற சவாலான ரீடூ தையலற்ற பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை (Redo Sutureless Aortic Valve Replacement) சிகிச்சைக்குப் பின் 68 வயது விவசாயிக்கு புத்துயிர் கிடைத்தது. கால்சியம் படிந்த பெருந்தமனி தடுக்கிதழ் காரணமாகக், கடுமைமையான பெருந்தமனி இரத்த நாளக் குறுக்கம் (இதயத்திலிருந்து பெருந்தமனி மற்றும் உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்ட பாதிப்பு) ஏற்பட்டதால், இவர் ஏற்கனவே 2007ஆம் ஆண்டு பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மூலம் இவருக்கு உயிரி செயற்கைத் தடுக்கிதழ் பொருத்தப்பட்டது.

காலப்போக்கில், கால்ஷியம் அதிகம் சேர்ந்ததால் தடுக்கிதழ் சிதைந்து குறுகியதால், உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டது. நோயாளி மூச்சு விடச் சிரமப்படவே, 2022 நவம்பரில், சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இதயம் & நுரையீரல் மாற்றும் அறுவை சிகிச்ச்சை பிரிவு தலைவர் – சிடிவிஎஸ் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியின் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், காரை படிந்த பெருந்தமனி இரத்த நாளக் குறுக்கம் மற்றும் இதயத்தின் பெருந்தமனி தடுக்கிதழ் இறுக்கமாக மூடிக் கொள்ளாமை ஆகியவை உறுதி செய்யப்பட்டன. இதன் காரணமசக இதயத்தின் இடது கீழறையிலிருந்து ஏற்றப்பட்ட குருதி பின்னோக்கிக் கசியத் தொடங்கியது.

 அறுவை சிகிச்சை விவரங்களை டாக்டர் கோவினி விளக்குகையில்:

‘நோயாளிக்கான பல்வேறு சிகிச்சை வாய்ப்புகளை ஆய்வு செய்தோம். டிஏவிஐ (TAVI) (செருகு வடிகுழாய் பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை அதாவது சிதைந்த தடுக்கிதழை அகற்றாமல் அதற்குள்ளேயே புதிய தடுக்கிதழைச் சொருகும்) அறுவை சிகிச்சையும் பரிசீலிக்கப்பட்டது. டிரான்ஸ் ஈஸோஃபேகியல் எக்கோ பரிசோதனையின் போது மருத்துவர் குழு இன்னொரு சவாலைச் சந்தித்தது. இயல்பான நிலையில் 21மிமி இருக்க வேண்டிய நோயாளியின் பெருந்தமனி தடுக்கிதழ் 20மிமிக்கும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரிவடையும் போது பெருந்தமனி தடுக்கிதழ் உறுதி பலவீனமோ, சேதமோ ஏற்படும் அபாயம் நிகழலாம். எனவே அபாயம் அடையும் சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு ரெடோ தையலற்ற பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம்’ என்றார். 



டாக்டர் கோவினி மேலும் தொடர்கையில்:

‘சேதமடைந்த தடுக்கிதழை அகற்ற ஸ்டெர்னோடொமி அறுவை சிகிச்சை மூலம் நோயாளியின் மார்பக எலும்பு பிரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தடுக்கிதழுக்குப் பதிலாக 21மிமி உயிரி செயற்கை / தையலற்ற தடுக்கிதழ் பொருத்தப்பட்டது. புதிய தடுக்கிதழைப் பொருத்தித் தைக்க வேண்டியதில்லை என்பதாலும், அறுவை சிகிச்சை அதிக சிக்கலில்லை என்பதாலும், குணமடையும் காலம் விரைவு என்பதாலும், வயதான அல்லது கூட்டு நோய்கள் உள்ள நோயாளிகளுக்குத் தையலற்ற தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். தையலற்ற தடுக்கிதழ் பொருத்த 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே தேவைப்படும். குருதி மாற்றம், சிறுநீரகக் கோளாறு, மார்பக மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்கம், நீண்ட காலம் செயற்கைச் சுவாஸத்தில் வைத்திருத்தல் உள்ளிட்ட அறுவை சிகிச்சைக்குப் பிந்திய சிக்கலகள் கணிசமாக குறையும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி படிப்படியாக நன்கு குணமடைந்தார்’ என்றார்.

சென்னை ஃபோர்டிஸ் மருத்துவமனை எஸ்பியூ தலைவர் வேங்கட பணீதர் நெல்லுரி பேசுகையில்:

‘நோயாளியின் மருத்துவ நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொள்கையில், இந்த அறுவை சிகிச்சை உண்மையிலேயே சவசலானதுதான். இருப்பினும், உரிய நேரத்தில் நோயாளியை எங்கள் நிபுணர் குழு பரிசோதித்துத் தேவையான சிகிச்சையை வழங்கியதால் அவருக்குப் புதிய வாழ்க்கை கிடைத்தது. நோயாளி விரைவில் குணமடைய உதவிய டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி மற்றும் அவாது இதய அறுவை சிகிச்சைக் குழு நிபுணர்கள், ஐசியு நிபுணர்கள், இதய மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் ஆகியோர் குறித்து நாங்கள் பெருமைப்படுவதுடன், அனைவருக்கும் மனதார நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். 



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.