"பவுடர்" படம் எப்படி இருக்கு?!

"பவுடர்" படம் எப்படி இருக்கு?!தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் "பவுடர்" திரைப்படம். 

சினிமா மக்கள் செய்தி தொடர்பாளராக இருந்த நிகில் முருகன் அறிமுக நாயகநாக இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் தனது நடிப்புக்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பிளாக் காமெடிக்கு முயன்று கமிஷ்னர் பாத்திரத்தைக் கேலிக்கு உள்ளாக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ. வையாபுரியின் பாத்திரமும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது. சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ஆதவன் ஆகியோர் நகைச்சுவைக்காகப் பெரிதும் மெனக்கெட்டுள்ளார்கள். இறுதியில், வித்யா ப்ரதீப்பின் அத்தியாயத்தில் படத்தை முடித்தவிதம் நல்ல த்ரில்லர் படத்திற்கான க்ளைமேக்ஸ் போன்றே அமைந்துள்ளது. ஆனால், கச்சிதமில்லாத் திரைக்கதையால் படத்தின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் தவறிவிடுகிறது. படத்தின் முடிவில் வரும் No சூடு No சொரணை பாடல் எதற்கு என்றே புரியவில்லை....

மொத்தத்தில் இந்த "பவுடர்" பூசினால் த்ரில் தெரியும்..... 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.