"கட்டா குஸ்தி" திரைப்படத்தின் விமர்சனம்

"கட்டா குஸ்தி" திரைப்படத்தின் விமர்சனம் 


செல்லா அய்யாவு  இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியீட்டில், ஜஸ்டின் பிரபாகர் இசையில்,  நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் "கட்டா குஸ்தி". 

கேரள மாநிலம் பாலகாட்டைச் சேர்ந்த கீர்த்தி (ஐஸ்வர்யா லக்ஷ்மி) குஸ்தி போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பையை வெல்லும் கீர்த்திக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கிறது. குஸ்தி வீரராக இருப்பதாலேயே அவருக்கான வரன்கள் கைகூடாமல் விலகி செல்கின்றன. 

ஒரு கட்டத்திற்கு பிறகு சில பொய்களைச் சொல்லி கீர்த்திக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராவுக்கும் (விஷ்ணு விஷால்) திருமணம் நடத்தப்படுகிறது. சுமூகமாக செல்லும் திருமண வாழ்க்கையில் பொய்கள் வெளிச்சத்திற்கு வந்து பூகம்பமாய் கிளம்ப, தம்பதிகளின் வாழ்கையில் இடையில் புகுந்து குஸ்தி போடும் சண்டைதான் ‘கட்டா குஸ்தி’ கதை. ஐஸ்வர்யா லக்ஷ்மி சமரசமின்றி அதேமாதிரியான கதையில் இம்முறை குஸ்தி வீராங்கனையாக களமிறங்கியிருக்கிறார். 

கிராஃப் வெட்டி, சேலையை ஏற்றிக்கட்டி எதிரிகளை பந்தாடுவதாகட்டும், குஸ்தி போட்டிகளிலும், ஆக்ரோஷமான கண்பார்வையிலும், விளையாட்டு வீராங்கனைக்கான லுக்கிலும், அதேசமயம் கிராமத்து பெண்ணாகவும் இருவேறு எல்லைகளில் நடிப்பில் உச்சம் தொடுகிறார். 

‘படிச்சவ அதிகாரம் பண்ணுவா... படிக்காதவதான் அடங்கி போவா’, ‘நீளமான முடியில்லன்னா அவ பொண்ணுல்ல; பையன்’ போன்ற பழமைவாத வசனங்களை பேசும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால். தனக்கு கிடைத்த இடங்களில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார். நாயகன் அறிமுகத்திற்கு ஒரு பாடல், திருமணத்திற்காக ஒரு பாடல், உள்ளூருக்கு ஒரு வில்லன், வெளியூருக்கு ஒரு வில்லன், கை நீட்டியதும் வந்த வேகத்தில் பவுன்சாகும் எதிரிகள் என தெலுங்கில் படம் வெளியாவதை கவனத்தில் வைத்து மசாலாவை தூக்கலாக்கியிருக்கிறார்கள். 

திருமணத்திற்காக கூறிய பொய்யை சமாளிக்க போராடும் நாயகி, மனைவியிடம் கெத்து காட்ட நாயகன் செய்யும் செயல்கள், ஆர்ப்பரிக்க வைக்கும் இடைவேளை என ‘கட்டா குஸ்தி’ முதல் ரவுண்டில் ஸ்கோர் செய்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு பிறகு எளிதாக கணிக்கக் கூடிய காட்சிகளாக அமைகிறது. ஜனரஞ்சக சினிமாவுக்குத் தேவையான காட்சியமைப்பில் கச்சிதமாக சேர்ந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன்.

மொத்தத்தில் இந்த "கட்டா குஸ்தி" தாங்கி நிற்கும்....               

Gatta kushthi Movie Mark- 3.8/5


 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.