ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று நபர் கைது

ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று நபர் கைதுஆர்.கே நகர் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். அதே பகுதியில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார். தனது அலுவலகத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 300 ரூபாய் திருடு போயுள்ளதாக ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 
புகாரின் அடிப்படையில் ஆர்.கேநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கொடி ராஜன், வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் சங்கர், காவலர்கள் கவி தென்றல், வடிவேல், ஒன்றிணைந்து அப்பகுதியில் நடத்திய விசாரணையில் மணி என்கின்ற கஞ்சா மணி (வயது 22) கொடுங்கையூர் பகுதி எழில் நகரைச் சேர்ந்தவர் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததில் மணி என்கின்ற கஞ்சா மணி இரண்டு சிறுவர்களை உடன் வைத்து பர்னிச்சர் கம்பெனியில் இரவு நேரத்தில் தொலை போட்டு திருடியது ஒப்புக்கொண்டான்.

அவரிடமிருந்து 26 ஆயிரம் ரூபாய் பணமும் லேப்டாப் ஒன்றும் ஆர்.கேநகர் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். பின்பு நடத்திய விசாரணையில் 2017 ஆம் ஆண்டிலிருந்து அடிதடி திருட்டு என்கின்ற பல வழக்குகள் சுற்று வட்டார காவல்நிலையங்களில் இவர் மீது உள்ளதாகவும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.