கான்ஸ்டபிளாக செல்கிறேன் ஐபிஎஸ் ஆக வருவேன்!!

கான்ஸ்டபிளாக செல்கிறேன் ஐபிஎஸ் ஆக வருவேன்!!

கான்ஸ்டபிளா போறேன்..ஆனால் IPS ஆக திரும்ப வருவேன்?குஜராத் அமைச்சர் மகனை கண்டித்த சுனிதா 
 கான்ஸ்டபிளா போறேன்.……..

ஆனால் IPS ஆக திரும்ப வருவேன்..

குஜராத் அமைச்சர் மகனை கண்டித்த சுனிதா சூளுரை!

குஜராத் சுகாதாரத்துறை அமைச்சரின் மகனை ஊரடங்கின் போது தடுத்து நிறுத்திய பெண் காவலர் சுனிதா ராஜினாமா செய்துள்ள நிலையில் ஐபிஎஸ் ஆக திரும்பி வருவேன் என பேட்டியளித்துள்ளார்.

குஜராத்தின் சூரத் நகரின், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானியும் அவரது நண்பர்களும் இரவு நேரத்தில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்த போது, ரோந்து பணியில் இருந்து சூரத் நகர் பெண் காவலர் சுனிதா அவர்களை தடுத்தி நிறுத்தி விசாரித்துள்ளார்.
 
அப்போது பிரகாஷ், தான் அமைச்சரின் மகன் எனக் கூறி தங்களை விடும்படி சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, “கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன். 

இந்த இடத்திற்கு மோடியே வந்தாளும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் உள்ளது’ என சுனிதா கடுமையாக பேசியுள்ளார்.

இதனையடுத்து, நேர்மையாக தனது பணியை செய்த காவலர் சுனிதாவை காவல்நிலைய தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த சுனிதா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். மேலும், அமைச்சரின் மகனை எதிர்த்து பேசியது, அவர் மீதான நடவடிக்கை தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், அவரது ராஜினாமா முடிவு தொடர்பாக ஆங்கில ஊடகங்களுக்கு சுனிதா பேட்டியளித்துள்ளார். அதில்,
 
காவலர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தான் ஐபிஎஸ் அதிகாரியாக போவதாக உயர் அதிகாரிகளிடையே தெரிவித்துவிட்டேன். இதற்கு பிறகு எனக்கு நிறைய மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

இது தொடர்பாக சூரத் காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்ததன் பேரில் என் வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வு எனக்குள் இருந்த குறைந்த அதிகாரத்தையே சுட்டிக்காட்டியுள்ளதால் நான் ஐபிஎஸ் அதிகாரியாகவோ, வழக்கறிஞராகவோ, பத்திரிகையாளராகவோ திரும்ப வருவேன் என சுனிதா கூறியுள்ளார்.

அதிகாரத்தை பயன்படுத்தி அழிக்கும் செயலில் பலர் இருக்கும் நிலையில் அதே அதிகாரத்தை பயன்படுத்தி நல்லனவற்றை செய்ய சுனிதா முற்படுவதற்கு பலர் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர்.





லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.