லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் சிக்கிய பெண் அதிகாரி!
லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் கரூர் நகராட்சி அலுவலகத்தின் பெண் ஊழியர் சிக்கினார். சொத்து தொடர்பாக பெயர் மாற்றம் செய்து சான்று வழங்க கரூர் நகராட்சி அலுவலகத்தை ஒருவர் நாடினார். அப்போது சான்றளிப்பதற்காக சம்மந்தப்பட்ட பெண் அலுவலர் ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, இது குறித்துஸ் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்று கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலிசார் வந்திருந்து புகாருக்கு ஆளான பெண் அலுவலரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதோடு, அந்த அலுவலகமே அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் அந்நகராட்சியின் சக அலுவலர்கள், லஞ்சம் கேட்ட பெண் அதிகாரியை கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த பொம்பளையால் நகராட்சியின் பெயரை கெடுத்துவிட்டாரே என்று வருத்தப்படுகின்றனர்.
கருத்துரையிடுக