நீங்கள் சந்தித்த நண்பருக்கோ, அக்கம்பக்கத்திலோ கொரோனா பாசிடிவ் என்றால் உடனடியாக என்ன செய்யவேண்டும்?
நேற்று இயல்பாக பேசிக் கொண்டிருந்தவருக்கு இன்று கொரோனா பாசிடிவ் என சொல்லி தனிமைப் படுத்துகின்றனர். எனவே தெரிந்த நெருக்கமான உறவுகள், நண்பர்களுடன் பேசுவதற்குக் கூட தயக்கமாக உள்ளது என்பதே மக்களின் புலம்பலாக உள்ளது.
இன்று கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. நேற்று இயல்பாக பேசிக் கொண்டிருந்தவருக்கு இன்று கொரோனா பாசிடிவ் என சொல்லி தனிமைப் படுத்துகின்றனர். எனவே தெரிந்த நெருக்கமான உறவுகள், நண்பர்களுடன் பேசுவதற்குக் கூட தயக்கமாக உள்ளது என்பதே மக்களின் புலம்பலாக உள்ளது. அப்படி நீங்கள் சந்தித்து பேசிய நண்பருக்கோ, தெரிந்தவர்களுக்கு மறுநாளே கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும். உங்களை தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?
தனிமைப்படுத்திக் கொள்ளுதல் : முதல் வேலையாக உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா அறிகுறியானது 10 - 14 நாட்களுக்குப் பிறகுதான் தெரிய வரும். எனவே வீட்டிலேயே உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வெளியே எங்கும் செல்லாதீர்கள். யாரையும் சந்திக்காதீர்கள். வீட்டிலும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து உள்ளேயே இருங்கள். உங்கள் வீட்டிற்குள்ளும் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள்.
அறிகுறிகளை கவனியுங்கள் : தனிமையில் இருக்கும் 14 நாட்களிலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அறிகுறிகளைக் கவனித்துக் கொண்டே இருங்கள். அதற்காக எப்போதும் பயம், பதட்டத்துடன் இருக்காதீர்கள். ரிலாக்ஸாக 14 நாட்களை கழியுங்கள்.
சுய பரிசோதனை : குறைந்தது ஐந்து நாட்களாவது தனிமையில் இருந்துவிட்டு மருத்துவமனையையோ அல்லது உங்கள் மருத்துவரையோ அணுகி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதில் நெகடிவ் என வந்தால் தனிமையை தளர்த்திக்கொள்ளுங்கள்.
Advertisement
உணவு : இந்த சமயத்தில் உங்களுக்குத் தேவை நோய் எதிர்ப்பு சக்தி. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள். வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.
மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் : நீங்கள் சந்தித்த மற்றவர்களுக்கும் இந்த விஷயத்தை தெரியப்படுத்துங்கள். அவர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ள சொல்லுங்கள். ஒருவேளை உங்களுக்கு பரிசோதனையில் பாசிடிவ் என வந்தால் கட்டாயம் நேரம் தாழ்த்தாமல் உடனே நீங்கள் சந்திந்த மற்ற நபர்களையும் எச்சரிக்கையுடன் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள்.
கருத்துரையிடுக