ஏஆர் ரகுமான் திருடி விட்டார்.. நடிகர் பரபரப்பு புகார்!

ஏ.ஆர். ரகுமான் திருடி விட்டார்.. நடிகர் பரபரப்பு புகார்


நடிகர் பாபு கணேஷ், இவர் கடல்புறா, நாகலிங்கம், தேசிய பறவை,  நடிகை, நானே வருவேன்,  ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். இவர் இந்திய அளவில் முதன் முறையாக காட்சிகளுக்கு ஏற்ப தியேட்டர்களில் வாசனை வீசும் புதிய முறையை தன்னுடைய படத்தில் அவர் அறிமுகம் செய்தார். இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது காட்டுப்புறா என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் தியேட்டர்களில் வாசனை வீசும் அவரது தொழில்நுட்பத்தை வைத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘le musk’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். 

இந்த நிலையில் காட்சிக்கு ஏற்ப தியேட்டர்களில் வாசனை வீசும் தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன்முதலில் தான் பயன்படுத்துவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ ஆர் ரகுமான் பொய் கூறுவதாக பாபு கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம், மியூசிக் யூனியன் எனப் பல வழிகளிலும் கடிதம் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லை என்பதால் சட்டப்படியான நடவடிக்கைக்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது என நிருபர்களிடம் பாபு கணேஷ் கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.