புறநகர்ப் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்..

புறநகர்ப் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்..
புறநகர்ப் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக  பேருந்து பணிமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு பெட்ரோல் குண்டு அல்லது வெடிகுண்டு வீசக்கூடும் என மர்மநபர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், மேலூர், செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட புறநகர்  அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் நள்ளிரவு முதல் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று பிற மாவட்டங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.