சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்- பிரதமர் மோடி
புதுடில்லி :
''நாடு முழுதும், கொரோனா பாதிப்புகளை குறைக்க, தேசிய அளவிலான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும். ''தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளில், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடு முழுதும், கொரோனா தொற்று நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், பிரதமர் மோடி கூறியதாவது:
டில்லியில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.
டில்லியில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளை, அனைத்து மாநிலங்களும் பின்பற்றி, தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.மக்கள் அனைவரும், தனிப்பட்ட முறையில், தங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதும், பொது இடங்களில், ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதும், இந்த நேரத்தின் அவசியமாக உள்ளது.
நாடு முழுதும், கொரோனா பாதிப்புகளை குறைக்க, தேசிய அளவிலான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்.தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளில், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பிரதமர் வேண்டுகோள் கடந்த மாதம் நடைபெற்ற 'மன் கீ பாத்' வானொலி நிகழ்ச்சியில்:
சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து, பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி, வரும், 26ல் நடக்கிறது. அன்றைய தின உரை குறித்து, மக்கள் தங்கள் பரிந்துரைகளை, 'நமோ' செயலியில் பதிவிடுமாறு, பிரதமர் கேட்டுக் கொண்டார்.மேலும், கூட்டு முயற்சியால், பலரது வாழ்க்கையில், சிறப்பான மாற்றங்களை உருவாக்கிய, சுவாரஸ்யமான நிஜ வாழ்க்கை சம்பவங்களை பகிருமாறு, மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துரையிடுக