நான் போலீஸ்: புரோட்டா கொடு!

நான் போலீஸ்: புரோட்டா கொடு! 


சென்னை :

ஓட்டலில், போலீஸ் எனக்கூறி, புரோட்டா பார்சல் கேட்டு மிரட்டிய நபர், போலீசாரிடம் சிக்கினார்.

சென்னை, சாலிகிராமம், காமராஜர் சாலையை சேர்ந்தவர் விஜய், 35. இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஒரு மாத காலமாக, இரவு நேரத்தில் இவரது கடைக்கு வரும் நபர், போலீஸ் எனக் கூறி, புரோட்டா, தோசை, சப்பாத்தி பார்சல் வாங்கி சென்றுள்ளார்.

வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு கடைக்கு வந்த நபர், புரோட்டா, தோசை பார்சல் கேட்டுஉள்ளார். ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், காத்திருக்கும் படி விஜய் கூறியுள்ளார். அப்போது, தான் இரவு ரோந்து பணிக்கு செல்ல வேண்டும் என, ஊழியர்களை, அந்த நபர் மிரட்டி உள்ளார். 

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விஜய், விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 

விசாரணையில், பிடிபட்ட நபர், விருகம்பாக்கம், சாய் நகரைச் சேர்ந்த சிவகுமார், 47, என, தெரிய வந்தது. நில தரகரான இவர், ஊரடங்கால் வருமானமில்லாத காரணத்தால், போலீஸ் என மிரட்டி, உணவு வாங்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விருகம்பாக்கம் போலீசார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.