CBI அதிகாரிகள் தீவிர விசாரணை

CBI அதிகாரிகள் தீவிர விசாரணை 



துாத்துக்குடி: 


சாத்தான்குளத்தில் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ.,அதிகாரிகள் தாக்குதல் நடந்த போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்அப் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.


துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், 6௦; அவரது மகன் பெனிக்ஸ் 31 ஆகியோரை ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று சாத்தான்குளம் போலீசார் தாக்கினர்.கோவில்பட்டி சிறையில் இருவரும் இறந்தனர். 


சி.பி.சி.ஐ.டி., போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.'சஸ்பெண்ட்' செய்யப் பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்து ராஜ், வெயில்முத்து, சாமத்துரை, செல்லத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.


கைதான சிறப்பு எஸ்.ஐ., பால்துரை போலீஸ்காரர் தாமஸ் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.


                                  சி.பி.ஐ. விசாரணை

தமிழக அரசின் வேண்டுகோள்படி சி.பி.ஐ.,அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரன்குமார், எஸ்.ஐ.,க்கள் சுஷில்குமார், சச்சின், போலீசார் பவன்குமார் திரிபாதி, சைலேந்திரகுமார், அஜய்குமார் ஆகியோர் ஜூலை 10ல் டில்லியில் இருந்து வந்தனர். துாத்துக்குடி .பி.சி.ஐ.டி.,அலுவலகத்தி்ற்கு சென்று ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.


சி.பி.சி.ஐ.டி.,போலீசார் இரு கொலை வழக்குகளில் 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள், போலீஸ் ஸ்டேஷனில் கைதிகளை தாக்குவதற்கு பயன்படுத்தி இரும்பு பைப் உள்ளிட்ட தடயங்கள், பொருட்களை சி.பி.ஐ.,அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 


நேற்று முன்தினம் சாத்தான்குளம் சென்ற அதிகாரிகள் 7 மணிநேரத்திற்கும் மேலாக அங்கு ஜெயராஜ் குடும்பத்தினர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். 


நேற்று ஊரடங்கு காரணமாக பகல் வரையிலும் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் வழக்கு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். 


பிற்பகலில் 2 வாகனங்களில் சாத்தான்குளம் கிளம்பிச்சென்றனர். மாலை 5.10 மணிக்கு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வை துவக்கினர்.

போலீஸ் ஸ்டேஷனில் தற்போதைய இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், எஸ்.ஐ.,க்கள் மணிமாறன், முத்துமாரி உள்ளிட்ட போலீசார் இருந்தனர். 


ஸ்டேஷனில் லாக்கப்அறை, விசாரணையின் போது ரத்தம்படிந்த மேஜை, மாடியறைகள், கழிப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை பதிவு செய்தனர். 


விசாரணை தடயங்களை போட்டோ, வீடியோ பதிவு செய்துகொண்டனர். துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.










லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.