அபராதமின்றி மின் கட்டணம்!

அபராதமின்றி மின் கட்டணம்! சென்னை: 

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்போர், அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில், ஜூன் இறுதியில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் வசிப்போரில், மார்ச், 25ம் தேதி முதல் ஜூலை, 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர், அபராதம் இன்றி கட்டணம் செலுத்த, மின் வாரியம், வரும், 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இந்த சலுகை, மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமல்படுத்திய பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது.ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியதால் மின் பயன்பாடு அதிகரித்தது,

தாமதமாக மின் பயன்பாடு கணக்கு எடுத்தது போன்ற காரணங்களால், பல வீடுகளில், அதிக கட்டணம் வந்துள்ளது. பலரும் பணம் இல்லாததால், மின் கட்டணம் செலுத்த தவணை, தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்து, கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.அது தொடர்பாக, இதுவரை, அரசின் சார்பில், எந்த அறிவிப்பும் வரவில்லை. 

இந்நிலையில், அபராதம் இன்றி, கட்டணம் செலுத்த, மின் வாரியம் வழங்கிய அவகாசம், வரும், புதன் கிழமையுடன் முடிவடைகிறது.லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.