தொடர்ச்சியாக 24+மணி நேரம் கேரம் விளையாடும் சாதனையை துவங்கியுள்ளார் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த அஸ்வின் சௌந்திரராஜன்.
மின்ட், தங்கசாலை, பென்ஷனேர்ஸ் லேனில் வசித்து வருபவர் அஸ்வின். கேரம் மீதான ஆர்வத்தினால் மிக நன்றாக கைதேர்ந்த அவருக்கு கேரம் விளையாட்டில் சாதிக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து 40 மணி நேரத்த்திற்கு மேல் விளையாட முடிவு செய்துள்ளார்.
அதன் முன்னோட்டமாக இன்று காலை 8 மணியளவில் விளையாட துவங்கியுள்ள அவர் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேல் கேரம் விளையாடயுள்ளார் . மேலும் இருவருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கேரம் விளையாட்டு வீரர்கள் கேரம் விளையாடி வருகின்றனர்.
இது குறித்து அவர் கூறுகையில்:
தனது தொடர் பயிற்சியின் மீதான நம்பிக்கையில் தான் 40 மணி நேரத்திற்கும் மேல் விளையாட உள்ளதாகவும், இதன் மூலம் கேரம் விளையாட்டை நோக்கி பல இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
FOR You Tube LIVE SUBSCRIBE & CLICK BELL BUTTON
https://www.youtube.com/c/tamillivenewsofficial
கருத்துரையிடுக