இந்த வாரம் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைட் விறுவிறுப்பான தொடரில்?!

இந்த வாரம் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைட் விறுவிறுப்பான தொடரில்?! 

சென்னை: 


புகழ்பெற்ற பின்னணி பாடகர் ஹரிச்சரன் உடன் ஒரு இதயபூர்வமான உரையாடல் நிகழ்வை கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் பிரபலமான சிந்தனைகள் சிம்ப்ளிஃபைட் நிகழ்வின் இந்த வார எபிசோட் ஒளிபரப்புகிறது. இந்த தொடரில் பின்னணி பாடகர் ஹரிச்சரன் இனிமையான பாடல்களை பாடுவதுடன் வாழ்க்கை பற்றிய அனைத்து விஷயங்கள் பற்றியும் குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

 

வரும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8ம் தேதி காலை 11 மணியளவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியின் 3 அற்புதமான சிறப்பம்சங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

 

குழந்தை வளர்ப்பு 101: ஒரு பழமையான ஏக்க நினைவுக்குறிப்புடன் உரையாடல் தொடங்கும் இந்த வாரத் தொடரில் ஶ்ரீ ஶ்ரீ குருதேவ் அவர்களும் மற்றும் ஹரிச்சரனும் தங்களுடைய குழந்தைபருவத்திலிருந்து நினைவலைகளை பகிர்ந்துகொள்வது இடம்பெறுகிறது. இதில் நவீன கால குழந்தை வளர்ப்பு பற்றியும் மற்றும் எப்போதும் வளர்ந்துவரும் உலகில் ஒரு குழந்தையை வளர்த்துருவாக்குவது பற்றியும் அவர்கள் உரையாடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எந்த வகையான முக்கிய திறன்களை பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும் குருதேவ் அவர்கள் விரிவாக வேறுபடுத்தி எடுத்துரைப்பதை புதிதாக பெற்றோர்களாக இருப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

 

திருப்திக்கு மேல் வாழ்வாதாரம்: ஒருவர் தனது தொழில்பூர்வமான வாழ்க்கையில் எப்படி நிம்மதியடையலாம் என்பது பற்றி குருதேவ் அவர்கள் வழங்கும் நுண்ணறிவுள்ள, அறிவார்ந்த ஆலோசனைகள் தொடரில் இடம்பெறுகிறது. ஹரிச்சரன் மற்றும் குருதேவ் அவர்களும் திருப்திக்கு மேல் வாழ்வாதாரம் எப்படி முக்கியமாக இருக்கிறது என்பது பற்றி பேசும் நிலையில், வேலை – வாழ்க்கை சமநிலையை அடைய விரும்பும் பணியாளர்களுக்கு இந்த தொடரில் அறிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது.

 

திருமண பந்தம்: திருமணம் பற்றியும் மற்றும் குடும்பத்தை உருவாக்குவதற்கு தம்பதியர் இருவரும் எப்படி பிணைப்போடு இருக்க வேண்டும் என்பது பற்றியும் குருதேவ் அவர்களிடம் சுவாரஸ்யமான கேள்வியை ஹரிச்சரன் எழுப்பும்போது இந்த  உரையாடல் தொடர் உச்சத்தை எட்டுகிறது.

 

பின்னணி பாடகல் ஹரிச்சரன் அவர்கள் குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் ஒரு அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதை பார்ப்பதற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை 8ம் தேதி நவம்பர் 2020 அன்று காலை 11:00 மணிக்கு கலர்ஸ் தமிழின் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைட் வாரத்தொடரை கண்டுமகிழ மறந்துவிடாதீர்கள்.லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.