தமிழகத்தில் இதுவரை 8.11 லட்சம் பேர்!

தமிழகத்தில் இதுவரை 8.11 லட்சம் பேர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (ஜன.,15) 18 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 805 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.11 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,29,573 ஆக அதிகரித்து உள்ளது. 

தமிழகத்தில் உள்ள 251 ஆய்வகங்கள் (அரசு- 68 மற்றும் தனியார்-183) மூலமாக, இன்று மட்டும் 55,847 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 51 லட்சத்து 24 ஆயிரத்து 787 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 389 பேர் ஆண்கள், 232 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,01,437 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,28,102 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. 

இன்று மட்டும் 805 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 023 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்தனர். 

அதில், 3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,251 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,299 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.