தூத்துக்குடி ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் சடலம் மீட்பு!

தூத்துக்குடி ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் சடலம் மீட்பு!

 தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த  விஜி மகன் காளிமுத்து (19), அதே பகுதியியை சேர்ந்த காந்தி மகன் ரஞ்சித்குமார் (19) ஆகிய இருவரும் நண்பர்களுடன் நேற்று (14.01.2021) மாலை பாலத்தின் அடியில் ஆற்றில் குளிக்கச் சென்றனர். 

குளிக்கச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் திரும்பவராததால் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூரங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடினர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ், விளாத்திக்குளம் காவல் ஆய்வாளர்  ரமேஷ், உதவி ஆய்வாளர்கள்முனியசாமி, குருசாமி மற்றும் காவல்துறையினர், தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சங்கு குளி  குமார் என்பவர் தலைமையில் 6 பேர், தீயணைப்புத்துறை அலுவலர் இருதயராஜ் தலைமையில் 5 பேர் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாக அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த தேடுதலில் வேம்பாரைச் சேர்ந்த காந்தி மகன் ரஞ்சித்குமார் (19) மட்டும் வேம்பார் அக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரான காளிமுத்துவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில்  தொடர் கனமழை பெய்து வருகிறது, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது, அதே போல் மாவட்டத்தில் உள்ள அநேக குளங்கள் மழை நீரால் நிரம்பி உள்ளன, யாரும் ஆற்றங்கரைக்கு குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட வருவாய்த்துறை சார்பிலும், மாவட்ட காவல்துறை சார்பிலும் தொடர்ந்து பலமுறை எச்சரித்து வருகிறோம்.

 இருப்பினும் அறிவிப்பை பொருட்படுத்தாமல் ஆற்றிற்கு குளிக்கச் சென்று இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டு, அவர்களது குடும்பத்தாருக்கு பேரிழப்பை ஏற்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

ஆகவே பொதுமக்கள் யாரும் ஆற்றங்கரை, குளங்கள் போன்ற எந்த நீர் நிலைகளுக்கும் சென்று குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.