கமலுக்கு காலில் என்ன?!
கமலுக்கு காலில் ஏற்பட்ட தொற்று, அறுவை சிகிச்சை வாயிலாக, வெற்றிகரமாக நீக்கப்பட்டது.
நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மற்றும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ளார். இந்நிலையில், காலில் ஏற்பட்ட வலி காரணமாக, அறுவை சிகிச்சை செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.அதன்படி, சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில், நேற்று கமலுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
மருத்துவமனை சார்பில், மருத்துவ இயக்குனர் சுஹாஸ் பிரபாகர் வெளியிட்ட அறிக்கையில், 'கால் எலும்பு அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட, சிறு தொற்றை நீக்கும் அறுவை சிகிச்சை, ராமச்சந்திரா மருத்துவமனையில், கமலுக்கு செய்யப்பட்டது. அவர் தேறி வருகிறார்' என, கூறியுள்ளார்.
கமல் சார்பில், அவரது மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக் ஷரா ஹாசன் வெளியிட்ட அறிக்கை:ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மோகன்குமார் தலைமையில், எங்கள் அப்பாவுக்கு, காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை, மருத்துவ குழு நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறது. நான்கைந்து நாட்களுக்கு பின், அப்பா வீடு திரும்புவார்.
சில நாட்கள் ஓய்வுக்கு பின், மீண்டும் மக்களைச் சந்திப்பார்; மகிழ்விப்பார். அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.
இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.
கருத்துரையிடுக