கண்புரை மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரிப்பு!

கண்புரை மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரிப்பு!


சென்னை: 


முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சனை (டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம்) மற்றும் கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் அதிகரித்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண் பாதிப்பு நிலைகளின் தீவிரத்தை கோவிட்-19 பெருந்தொற்று கணிசமாக மோசமாக்கியிருக்கிறது என்கின்றனர் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள். தாமதிக்கப்பட்ட சிகிச்சை அல்லது வீட்டிலிருந்து பணியாற்றுவதன் காரணமாக பணி – வாழ்க்கை சமநிலை இழப்பு ஆகியவற்றினால் ஏற்படுகின்ற முதிர்ச்சியடைந்த கண்புரை நோய்கள் மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளில் இதன் மோசமான தாக்கம் காணப்பட்டிருக்கிறது.

 

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் அமர் அகர்வால்:


பெருந்தொற்றுக்கு முந்தைய சூழலை ஒப்பிட்டு, புள்ளியல் விவரங்களை வழங்கி கூறியதாவது: “2019 ஆண்டின் கடைசி காலாண்டில் எமது மருத்துவமனைக்கு வருகை தந்த அனைத்து கண் புரை நோயாளிகளில் 10%-க்கும் குறைவானவர்கள், முதிர்ச்சியடைந்த கண்புரை நிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த அளவானது, ஐந்து-மடங்கு உயர்ந்து 50% ஆக அதிகரித்திருக்கிறது.  அதைப்போலவே, டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் கண் அழுத்தத்தினால் உருவாகின்ற உலர்ந்த கண்கள் நோய்களின் எண்ணிக்கையும் அதே காலஅளவில் 10% - லிருந்து, 30-50% என உயர்ந்திருக்கிறது.  உரிய காலஅளவுகளில் பரிசோதனைக்கு வர பல நோயாளிகள் தயங்கியதன் காரணமாக, பல நோயாளிகளிடம் ஏற்கனவே இருந்த கண்விழி விறைப்பு மோசமாகியிருப்பதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம்.  முன்னதாக கருவிழி ஒட்டு சிகிச்சை செய்துகொண்ட  நோயாளிகளிடம் கருவிழி ஒட்டு நிராகரிப்பு மற்றும் கண்ணில் உயர்அழுத்தம் போன்ற சிக்கல்களும் காணப்பட்டன.  இப்பெருந்தொற்று காலத்தின்போது, நீரிழிவு நிலையுள்ள பலர் உரிய காலஅளவுகளில் கண் பரிசோதனைகளை செய்யாமல் அலட்சியப்படுத்தியதால், அவர்களது விழித்திரையில் கடுமையான சிக்கல்கள் உருவாகின.”

 

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறைத்தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி கூறியதாவது:


 “கடந்த சில மாதங்களின்போது டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் கண் அழுத்தம் மற்றும் உலர்கண்கள் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருப்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம்.  டிஜிட்டல் சாதனங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துவது மற்றும் பணி – தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை இழப்பு ஆகியவற்றின் காரணமாகவே இத்தகைய பாதிப்புகள் உருவாகின்றன.  பொதுமுடக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில், கண் வெண்படல அழற்சியோடு சில நோயாளிகள் மற்றும் கருவிழி நாள அடைப்புகளுடன் வேறுசில நோயாளிகளையும் நாங்கள் பார்க்க நேர்ந்தது.  அதற்குப் பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.”

 

அவர் மேலும் பேசுகையில்: “50 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது ஒரு கண் மருத்துவரால் தங்களது கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும்.  நீரிழிவு சார்ந்த கண்அழுத்தம், நீரிழிவு தசைநீர்க்கட்டு, கண்புரை நோய் மற்றும் கண்விழி விறைப்பு நோய் போன்ற நீரிழிவினால் ஏற்படும் கண் நோய்களில் ஏதாவது இத்தகைய நோயாளிகளில் 30% -க்கும் அதிகமானவர்களிடம் உருவாகிறது.  நீரிழிவு சார்ந்த கண் நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளில் ஏறக்குறைய 10% நபர்களுக்கு பார்வைத்திறனை அச்சுறுத்தும் விழித்திரை அழிவு ஏற்படுகிறது,” என்று கூறினார்.  பரிசோதனைகள் குறித்து பேசுகின்றபோது, நீரிழிவு நோயாளிகள் ஒரு கண் மருத்துவரை சந்திக்கும் வேளையில், பார்வைத்திறன் சோதனை, கண்ணாடிகளின் திறன், உள்விழி அழுத்த அளவீடு மற்றும் விழித்திரை மதிப்பீடு ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். நீரிழிவு சார்ந்த கண்நோய் கண்டறியப்படுகின்றபோது, ஃப்ளோரசெசின் ஃபண்டஸ் ஆஞ்சியோகிராபி, ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி மற்றும் பி ஸ்கேன் அல்ட்ராசோனோகிராஃபி போன்ற பரிசோதனைகளை செய்வதும், நோயின் நிலைமையைச் சார்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன.  நோயின் நிலையை நிர்ணயிப்பதற்கும், சிகிச்சையை திட்டமிடவும் மற்றும் நோயின் வளர்ச்சியை கண்காணிக்கவும் இந்த ஸ்கேன் சோதனைகள் அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. 


 

டாக்டர்அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்அஷ்வின் அகர்வால் பேசுகையில்:


பெருந்தொற்று காலத்தில் உதாசீனம் செய்யுமளவிற்கு எந்த உடல்நல பிரச்சனையும் மிகச்சிறியதல்ல.  தொடக்கத்தில் டெலி கன்சல்ட் எனப்படும் தொலைபேசி வழியாக ஆலோசனை பெறும் திட்டம் மிகச்சிறப்பான விருப்பத்தேர்வாக இருக்கிறது மற்றும் பல நேர்வுகளில் சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதற்கு இது போதுமானதாக இருக்கக்கூடும். சில நேரங்களில், நேரடியாக சந்தித்து சிகிச்சைப்பெறுமாறு மருத்துவர் அறிவுறுத்தலாம்.  அவ்வாறு செய்ய தவறுவது, ஒரு சிறிய கண் பிரச்சனையை அதிக சிக்கலான பிரச்சனையாக மாற்றிவிடக்கூடும்.  முகக்கவசம், கை தூய்மையாக்கல், தனிமனித இடைவெளி கடைபிடிப்பு போன்ற அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றி, அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் செயல்படுத்தப்படுகின்ற ஒரு கண் மருத்துவமனையை நோயாளிகள் தேர்வு செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.