ராஜினாமா செய்த நாராயணசாமி: தலைமை முடிவு?!

ராஜினாமா செய்த நாராயணசாமி: தலைமை முடிவு?!

புதுச்சேரி:

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து முறைப்படி அறிவித்தார். 

நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவையைவிட்டு வெளியேறிய நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். தனது அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக கூறினார். இனி ஆளுநரின் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
ராஜினாமா செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான். நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். என்.ஆர் காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.கவுக்கு மக்கள் தக்க தண்டனை கொடுப்பார்கள். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தான் வாக்களிக்க உரிமை உண்டு. நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.