உங்களை போன்றவர்களோடு எப்போதும் நிற்பது என் கடமை-பா.இரஞ்சித்

உங்களை போன்றவர்களோடு எப்போதும் நிற்பது என் கடமை- பா.இரஞ்சித்

கேரளாவில் நடைபெற்ற ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் நடை பெற்ற  கூட்டத்தில் இயக்குனர் பா. இரஞ்சித் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

                                           பா.இரஞ்சித்

இந்தியா முழுமைக்கும் தலித்துகளின் நிலமை இன்றுவரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.குறிப்பாக நிலமற்ற தலித்துகள் இந்தியா முழுமையும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.முற்போக்கு மாநிலமான கேரளாவிலும் தலித்துகளும், மீனவர்களும், ஆதிவாசிகளும்  இன்றும் நிலமற்றவர்களாக வாழ்ந்து வருவதை நாம் கேள்விக்கு உட்படுத்தவேண்டியதாக இருக்கிறது.மாணவர்கள் இன்றைக்கு ஆய்வு செய்து இங்கு சமர்ப்பித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்று இதை குறித்த விவாதம் நடைபெருவது வரவேற்ப்புகுறியது.இது குறித்த புரிதலை ஆதிவாசி மக்கள் , மீனவர்கள் , தலித் மக்களுக்கு மாணவர்களின் இந்த ஆய்வுக்கட்டுரைகள் விழிப்புணர்வை  ஏற்படுத்தும் என்பதில் பெரும் நம்பிக்கை இருக்கிறது.இதுபோன்ற மறக்கப்படுகிற, மறுக்கப்படுகிற உரிமைகளை ஆராய்ச்சி மாணவர்கள் , மற்றும் சமூக ஆர்வலர்கள்  பெரும் அளவில் விவாதமாக்கவேண்டும்.மேலோட்டமாக பார்க்கும்பொழுது பாதிக்கப்படுகிறவர்களின் பாதிப்புகள் வெளியே தெரிவதில்லை. பாதிக்கப்படும் சமூகத்திலிருந்து வரும் கலைஞர்களாலும் , இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களாலும் மட்டுமே உண்மை நிலையை வெளிக்கொண்டுவரமுடியும்.அந்த வகையில் இப்படி எளிய மக்களின் பக்கமிருக்கும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் உங்களைப்போன்றவர்களோடு எப்போதும் நிற்பது என் கடமை.நீலம் பண்பாட்டு மையம்  செயல்பாடுகளுக்கு  கேரளாவிலும் பெரும் வரவேற்பு கிடைப்பது பெரும் மகிழ்வாக இருக்கிறது.கலை வழியாக நாம் பேசுகிற விசயங்கள் எளிதாக மக்களிடையே சென்று சேறுகிறது. நம்மிடமிருக்கும் கலைகள் வழியாக தொடர்ந்துபேசுவோம்.

                                                  என்றார்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.