மகளிடம் அத்துமீறல்: அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்!
இந்நிலையில் மனைவி மஞ்சு மற்றும் இரண்டாவது மகள் ஆகிய இருவரும் இன்று காலை திருவண்ணாமலைக்கு சென்று இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மதியம் குடிபோதையில் விட்டிற்கு வந்த முருகன் தனியாக இருந்த தனது மூத்த மகளிடம் அத்துமீறி ஈடுபட்டதாகவும் அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பத்மா அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தை முருகன் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார். இந்நிலையில், மயங்கி விழுந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் உயிரிழந்த முருகனின் மனைவி மஞ்சு மற்றும் மகள் ஷர்மிளா கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துரையிடுக