விஜய் நடிக்கும் 65வது படத்தின் டைட்டில் வெளியானது!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இநடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயின் 6-வது திரைப்படமாக நேரடி ஆங்கில வார்த்தை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியது.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பீஸ்ட் என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என்பதுதான் நேரடி பொருள். அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர்.
தமிழில் விஜய்யின் படத்தலைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் என வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார். இவை தவிர கில்லி, பிகில் வட்டார வழக்கு சொற்களையும் தலைப்பாக வைத்து நடித்துள்ளார்.
விஜயின் 65வது திரைப்படத்தின் பெயர் டார்கெட் என பொதுவாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வந்த நிலையில் பீஸ்ட் என்ற பெயரை மிகவும் ரகசியமாக வைத்து படக்குழுவினர் தற்போது அதனை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டைட்டில் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் நீளமான துப்பாக்கியுடன் ஸ்டைலாக காட்சியளிக்கிறார். விஜய் ரசிகர்கள் தற்போது இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது விஜய் நடிக்கும் 65வது படத்தின் டைட்டில் வெளியானதையொட்டி ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கருத்துரையிடுக