500 எபிசோடுகள் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் மாஸ்டர் செஃப்!
இதன் முக்கிய ஸ்பான்சர்களை ஒன்றாக அழைத்து வந்த இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், இந்நிகழ்வின் செயல்வடிவத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ததோடு, மாஸ்டர் செஃப் கிச்சனின் பிரமாண்டமான அரங்கமைப்பு குறித்த செய்திகளையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சராக பட்டர்ஃபிளை கிச்சன் அப்ளையன்சஸ் பங்கேற்க, சக்தி மசாலா, டேஸ்டி டேஸ்டி மற்றும் உதய கிருஷ்ணா நெய் ஆகிய நிறுவனங்கள் இணை-ஸ்பான்சர்களாக இடம்பெறுகின்றன. சங்கீதா மொபைல்ஸ், வேல்ஸ் பல்கலைக்கழகம், அணில் ஃபுட்ஸ் மற்றும் இன்வினியோ ஆரிஜின் ஆகியவை சிறப்பு பார்ட்னர்களாக பங்கேற்கின்றன. இவர்கள் அனைவருமே இந்த நிகழ்வு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
2021 ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று முதன்முறையாக தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி, சன்டிவியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணியிலிருந்து, 10:30 மணி வரை ஒளிபரப்பாகும். 500-வது எபிசோடை உண்மையான தமிழ் பாரம்பரிய ஸ்டைலில் உயிரோட்டமுள்ளதாக வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களால் வழங்கப்படுகின்ற மாபெரும் ஆதரவு பற்றிய தங்கள் உள்நோக்குகளையும் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் இச்சந்திப்பு நிகழ்வில் பகிர்ந்துகொண்டனர்.
இனவேட்டிவ் ஃபிலிம் அகடாமியின் நிறுவனர் திரு. சரவண பிரசாத் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை தொடங்குவதில் நாங்கள் அளவற்ற உற்சாகம் கொண்டிருக்கிறோம்; இந்த மைல்கல் சாதனை நிகழ்வின் எபிசோடை தமிழில் வெளியிடுவது உண்மையிலேயே ஒரு மாபெரும் கௌரவமாகும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சி, பொது பொழுதுபோக்கு அலைவரிசை தளத்தில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை கைவசப்படுத்தியிருக்கிறது;
இதன் பிராந்திய நிகழ்வை தயாரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை தொடங்கும் இப்பயணத்தில் வலுவான ஆதரவைத்தரும் தூணாக இருந்து வரும் எமது ஸ்பான்சர்களுக்கு இத்தருணத்தில் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தருணத்தை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது அளவற்ற மகிழ்ச்சியை எங்களுக்குத் தருகிறது.,” என்று கூறினார்.
எண்டமோல் ஷைன் இந்தியா நிறுவனத்தின் திரு. அபிஷேக் ரெஜி பேசுகையில்:
“உலகளவில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதற்குமுன் கண்டிராத சாதனை அளவுகளை நிர்ணயித்திருக்கிறது. இதன் பிராந்தியத்தழுவல், உற்பத்தி தரம், உள்ளடக்கம் மற்றும் போட்டியாளர்கள் ஆகிய அம்சங்களில் இந்த தர அளவுகோலையும் கடந்திருக்கிறது என்று என்னால் நம்பிக்கையோடு கூறமுடியும். ஒரு மொழியில் மட்டுமின்றி, நான்கு பிராந்திய மொழிகளில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தயாரித்து வழங்க IFA உடன் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே ஆனந்தமான அனுபவமாக இருந்திருக்கிறது. இலட்சக்கணக்கான குடும்பங்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர். ஐசரி கே. கணேஷ்:
“மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கும் மற்றும் அதன் தயாரிப்பாளர்களுக்கும் இன்றைய தினம் ஒரு மைல்கல்லாக அமைகிறது. இக்கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக பங்கேற்பதில் உண்மையிலேயே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பானது, புதிய சிகரங்களை தொடும் என்றும் மற்றும் பார்வையாளர்கள் தவறாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சியாக அமையும் என்றும் நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்,” என்று கூறினார்.
மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை தயாரிப்பதில் ஈடுஇணையற்ற முயற்சிகளை மேற்கொண்டதற்காக இதன் தயாரிப்பாளர்களைப் பாராட்டிய,
இந்நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர் பட்டர்ஃபிளை நிறுவனத்தின் திரு. V.M.L. கார்த்திகேயன் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் பட்டர்ஃபிளை நிறுவனம் ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது மற்றும் சிறப்பான நிகழ்ச்சிகளை தேர்வுசெய்து ஸ்பான்சர் செய்வதில் நாங்கள் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறோம். உலகளவில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றை பிராந்திய மொழிகளில் கொண்டு வருவதற்கு IFA மற்றும் எண்டமோல் ஷைன் கைகோர்த்திருப்பதால், தவறவிடக்கூடாத சிறப்பான வாய்ப்பாக இது எங்களுக்கு இருந்தது. மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை எமது நுகர்வோர்களுக்கும் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கும் வழங்குவதில் உரிய நேரத்திற்குள் இந்த சூப்பர் குழுவோடு நாங்கள் இணைந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
இன்வெனியோ ஆரிஜின் நிறுவனத்தின் திரு. அலங்கார் பாண்டியன் அவரது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டபோது:
“ஒரு இணை பார்ட்னராக மாஸ்டர் செஃப் தென்னிந்தியா நிகழ்ச்சியில் இணைவதில் நாங்கள் மகிழ்கிறோம்; இந்த கூட்டுவகிப்பு ஒரு உலகளாவிய பார்வையாளர் குழுவிற்கு எமது போர்ட்ஃபோலியோவை இன்னும் மேலதிகமாக கொண்டுபோய் சேர்க்கும்,” என்று கூறினார்.
துபாய் மற்றும் சிங்கப்பூரில் செயல்தளங்களைக் கொண்டிருக்கிற இன்வெனியோ ஆரிஜின் FZC / பிரைவேட் லிமிடெட், பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான வெளிநாட்டு வினியோகஸ்தர்களாகவும் மற்றும் டிஜிட்டல் மீடியாவுக்கு நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இன்வெனியோ ஆரிஜினின் இந்திய தயாரிப்பு பிரிவான இன்வெனியோ ஃபிலிம்ஸ் இந்தியா, பிராந்திய மொழிகளில் 4 திரைப்படங்களையும், 2 பாலிவுட் திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறது. பிராந்திய மொழிகளிலான தழுவலாக தயாரிக்கப்படும் இதனை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மாஸ்டர் செஃப் தென்னிந்தியா நிகழ்ச்சியின் பார்ட்னர்களாக அவர்கள் இணைந்திருக்கின்றனர்.
சக்தி மசாலா (டாக்டர். சாந்தி துரைசாமி), டேஸ்டி டேஸ்டி (திரு. எஸ். நாகராஜன்), உதயகிருஷ்ணா நெய் (திரு. பி. ஜெகநாதன்), ஆகியோர் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இணை – ஸ்பான்சர் பார்ட்னர்களாக மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை வழங்குகின்றனர். சங்கீதா மொபைல்ஸ் (திரு. எல். சுபாஷ் சந்திரா), சுதா ஹாஸ்பிட்டல்ஸ் (டாக்டர். ஹரிஷ்), அணில் ஃபுட்ஸ் (திரு. பிரபாகர் மற்றும் சுகுமார்) ஆகிய நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியின் இணை – ஸ்பான்சர்களாக இணைந்திருக்கின்றனர்.
பிரபல நடிகர் மக்கள் செல்வன் – விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்ற மாஸ்டர் செஃப் தமிழ், 2021 ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அதன் முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. சன்டிவியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணியிலிருந்து 10:30 வரை மக்கள் மனம் கவர்ந்த இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கௌரவம் மிக்க இப்போட்டியில் விருதை வெல்வதற்கு பல இல்ல சமையற்கலை நிபுணர்கள், அவர்களது சமையற்கலைத் திறன்களை வெளிப்படுத்தி போட்டியிடுவது பார்வையாளர்களின் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பன்மடங்கு உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
கருத்துரையிடுக