ஹரி ஹர வீரமல்லு விமர்சனம்
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், விக்ரம்ஜீத் விர்க், நாசர், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஹரி ஹர வீரமல்லு'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
அடிமைப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து, குழந்தை ஒன்று ஆற்றோடு அடித்துச் செல்ல அதைக் காப்பாற்றுகிறார் சத்யராஜ். இந்து மதத்தின் பெருமையையும் வரலாறையும் போதித்தருளும் குருகுலத்தை நடத்தி வருபவர் தான் சத்யராஜ். குழந்தையை தனது மகன் போல் பாவித்து அவரை வளர்க்கிறார். வருடங்கள் உருண்டோட, குழந்தை வளர்ந்து பவன் கல்யாணாக வருகிறார்.
வைரங்களை திருடுவதை தனது தொழிலாக வைத்திருக்கிறார் பவன் கல்யாண். திருட்டு வைரத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு ஏழை மக்களின் பசியாற்ற உதவி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். முஸ்லீம்களின் ஆதிக்கம் சற்று ஓங்கிக் கொண்டிருந்த வேலை அது. வடக்கே, செங்கோட்டையில் தனி அரசாங்கத்தை நடத்தி, தனது முஸ்லீம் மதத்தை பரப்பிக் கொண்டிருந்தவர் ஒளரங்கசீப்.
இந்து மதத்தினைச் சேர்ந்தவர்களைக் கண்டாலே, அவர்களை தாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர் ஒளரங்கசீப். ஒளரங்கசீப்பைத் தேடிச் செல்கிறார் ஹரிஹர வீரமல்லு. அவர் ஏன் ஒளரங்கசீப்பைத் தேடி செல்கிறார்? பின்னணி என்ன? என்பதே கதை...
ஒன் மேன் ஆர்மியாக முழு படத்தையும் தாங்கி நின்று அதிரடி விருந்து படைத்துள்ளார் பவன் கல்யாண். குத்துச்சண்டை, கத்தி சண்டை என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்துள்ளார். கிளைமக்ஸ் காட்சி அதிரடி விருந்து. சண்டை காட்சிகள் அனைத்தும் சிறப்பு. 1600 களில் நடப்பது போல் கதைக்களம் என்பதால் செட்டிற்கு பெரிய செலவு செய்திருப்பார்கள் போல, நன்றாக உள்ளது செச் ஒர்க் எல்லாம், அதே நேரத்தில் மரகதமனி இசையும் கூடுதல் பலம். மத குருவாக வரும் சத்யராஜ் நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார். முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. வரலாற்று கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
இரண்டாம் பாதி ஆமை போல் கதை களம் செல்கிறது.... சிஜி பணியில் கூடுதல் கவனம் தேவை...
மொத்தத்தில் இந்த 'ஹரி ஹர வீரமல்லு' சரியான திருப்புமுனை.....
கருத்துரையிடுக