வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 10 லட்சம் மோசடி!

வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 10 லட்சம் மோசடி!

தூத்துக்குடியில் பலரிடம் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 10 லட்சம் மோசடி செய்தவர் கைது - கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடியில் பலரிடம் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் புகார் அளித்தனர். மேற்படி புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ‘எம்.எஸ் லாஜிஸ்டிக்ஸ் மெரைன் ஷிப்பிங் ஏஜென்சி உரிமையாளரான அண்டன் கோமஸ் மகன் மைக்கேல் ராஜ் (41) என்பவரை கைது செய்தனர். 

அவர் அந்தோணி ரூபன் என்பவரிடம் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித்தருவமாக ரூபாய் 2 லட்சமும், மரியஜோஸ் ஸ்டானி என்பவரிடம் ரூபாய் 3,30,000/-மும், முகம்மது ஜாபித் பன்ருட்டி என்பவரிடம் ரூபாய் 50,000/-மும், பிரியத் என்பவரிடம் ரூபாய் 50,000/- ஜார்ஜ் என்பவரிடம் ரூபாய் 50,000/-மும், மரிய அன்டோ ராஜன் என்பவரிடம் ருபாய் 1 லட்சமும், மெக்வின் என்பவரிடம் ரூபாய் 1 லட்சமும், கந்தராஜ் சிவகாசி என்பவரிடம் ரூபாய் 1 லட்சமும், சாமுவேல் பாட்ரிக் என்பவரிடம் ரூபாய் 40,300/-ம் ஆகிய 9 பேரிடம் மொத்தம் ரூபாய் 10,20,300/- பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. 

மேலும் இதுபோன்று பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்படி மோசடி நபரைக் கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.