தூத்துக்குடி பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது....

தூத்துக்குடி பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது....

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை மிரட்டல், அடிதடி  வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. செல்வராஜ், முதல் நிலைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கராஜ், திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம், திரு. செந்தில், திரு. திருமணி, திரு. வள்ளிநாயகம் மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (18.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது  தூத்துக்குடி பொன்னகரம் டாஸ்மாக் கடை முன்பு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி பூபல்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் ராஜ் (எ) டெரன்ஸ் ராஜ் (30), அகமது கணி மகன் ஜான் வாஸ் (31) மற்றும் டேனியல் மகன் ரூபன் ஜோஸ்வா (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர்  எதிரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராஜ் (எ) டெரன்ஸ் ராஜ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 9 வழக்குகளும், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகளும், எதிரி ஜான் வாஸ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 6 வழக்குகளும், மற்றொரு எதிரியான ரூபன் ஜோஸ்வா என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.