கொள்ளை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உட்பட 5பேர் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு

கொள்ளை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உட்பட 5பேர் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு



கடையம் அருகே வீடுபுகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் நிதி நிறுவன மேலராளர் உட்பட  5பேர் கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகள் மீட்டனர்.


தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவநாடானூரைச் சேர்ந்த முத்துராஜா என்பவரது வீட்டில் கடந்த மாதம் 13-ந் தேதி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த 33.5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். முன்னதாக கோவிலூற்றைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 9 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.


இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிப்பதற்காக, ஆலங்குளம் காவல் துணை  கண்காணிப்பாளர்  பொன்னிவளவன் மேற்பார்வையில், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.


இதில் நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த பழவூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ராமையா (35), அவருடைய உறவினரான வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து முத்துராஜா, கணேசன் ஆகியோரது வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. 


பின்னர் அந்த நகைகளை சேரன்மாதேவி தனியார் நிதி நிறுவன மேலாளரான சிவகுமரேசன் மூலமாக முக்கூடலைச் சேர்ந்த பிச்சுமணி, நெல்லை டவுனைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ், கார்த்திக், சிவகுமரேசன், பிச்சுமணி, கார்த்திகேயன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகளை மீட்டனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.