நவீன்ஸ் – ன் புதிய ‘ஹேங்கிங் கார்டன்ஸ்’ செயல்திட்ட அறிமுகத்தோடு இணைந்து தொடங்கப்படும் ‘சீட்ஸ் ஆன் வீல்ஸ்’!

நவீன்ஸ் – ன் புதிய ‘ஹேங்கிங் கார்டன்ஸ்’ செயல்திட்ட அறிமுகத்தோடு இணைந்து தொடங்கப்படும் ‘சீட்ஸ் ஆன் வீல்ஸ்’! 

சென்னை மாநகரில் மக்களின் அதிக நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றிருக்கின்ற ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான நவீன்ஸ், ஒருவார காலம் நடைபெறுகின்ற ‘சீட்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற பசுமை செயல்திட்டத்தை இன்று தொடங்கியிருக்கிறது. மரங்களை நடுவதற்கு தேவையான விதைப்பந்துகளை இலவசமாக வினியோகிப்பதற்காக ஒரு பிரத்யேக வாகனம், நகரின் பல்வேறு பகுதிகளில் பயணிக்கும். நவீன்ஸ் – ன் இந்த புதுமையான கருத்தாக்கம் சென்னை வாழ் மக்கள் மத்தியில் மரங்களை நட்டு, பசுமைப்பரப்பை அதிகமாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் உயர்த்தும் நவீன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளால் வினியோகிக்கப்படுகின்ற இந்த விதைப்பந்துகள் வினியோக திட்டம் 2021 அக்டோபர் 8, இன்று முதல் ஆரம்பமாகிறது.

 

பழங்காலத்தில் உலக அதிசையங்களில் ஒன்றாக கருதப்பட்ட பாபிலோனின் ஹேங்கிங் கார்டன்ஸ்’   என்பதால் உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெரும் திட்டமான நவீன்ஸ், ‘ஹேங்கிங் கார்டன்ஸ்’ குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து இந்த பசுமை செயல்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.  சென்னையின் திரைப்பட தயாரிப்பு மையமான ஆற்காடு சாலையில், இன்னும் சில ஆண்டுகளில் அமையவிருக்கும் வளசரவாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து சில நிமிட தூரத்தில் அமைந்திருக்கும் ஹேங்கிங் கார்டன்ஸ் குடியிருப்பு வளாகத்தில், 2 மற்றும் 3 BHK ப்ரீமியம் அபார்ட்மென்ட்கள் என்ற கலவையில் மொத்தத்தில் 107 அடுக்குமாடி வீடுகள் உருவாகின்றன.  நவீன்ஸ் – ன் அற்புதமான கட்டுமானக்கலைத் திறனோடு இயற்கையின் மேஜிக்கை அனுபவித்து ஆனந்தமடைய நவீன்ஸ் – ன் இந்த செயல்திட்டம் வகை செய்யும். 

 

நவீன்ஸ் – ன் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான டாக்டர். குமார்:


இந்த பசுமை செயல்முயற்சி குறித்துப் பேசுகையில்:


“ஐஜிபிசி (IGBC) – ன் பசுமை சேம்பியன் விருதை தேசிய அளவில் வென்ற சாதனை எங்களுக்கு இருக்கிறது.  இயற்கையின் மீது பேரார்வம் கொண்டிருக்கும் நவீன்ஸ், மரங்களை நட்டு இயற்கைக்கு நெருக்கமாக தங்கள் வாழ்விடங்களை அமைத்துக்கொள்ளவும் சுற்றுச்சூழலுக்கு உதவவும் இத்திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கிறது.  இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இத்தகையதொரு தனித்துவமான முயற்சியாக விதைப்பந்துகளை நகரின் பல பகுதிகளில் வினியோகிக்கும் இத்திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  நவீன்ஸ் – ன் ஹேங்கிங் கார்டன்ஸ் திட்டம் குறித்து சொல்வதென்றால், முழுமையான சூழலமைப்பை தனக்குள் கொண்டிருக்கின்ற தனிச்சிறப்பான அமைவிடமாக இது இருக்கும்.  இயற்கையின் மடியில் அதன் இனிமையை நுகர்வோர்கள் உணருமாறு செய்வதாக இது அமையும்.  இதன்மூலம் சென்னையின் அடுத்த புதிய அதிசயமாக இது மக்களின் பெரும் வரவேற்பை பெறும் என்பது நிச்சயம்,” என்று கூறினார். 

 

தொன்மைக்காலத்தில் உலகளவில் புகழ்பெற்றிருந்த பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்பதன் உண்மையான அழகை சிறிய அளவில் உருவாக்க வேண்டுமென்ற நவீன்ஸ் – ன் ஒரு புதிய முயற்சியாக இந்த பசுமை செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.   சுற்றுச்சூழல் பாதுகாப்பை எண்ணத்திலும், செயலிலும் கொண்டிருக்கின்ற பெருநிறுவனமாக உருவாக வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கிய நவீன்ஸ் – ன் பயணத்தில் இதுவொரு மைல்கல். 




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.