'எனிமி' திரைப்பட விமர்சனம்

'எனிமி' திரைப்பட விமர்சனம்



நடிகர்கள் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ்
நடிகைமிருநாளினி
இயக்குனர்ஆனந்த் சங்கர்
இசைதமன்
ஓளிப்பதிவு
காலஅளவு      
ஆர்.டி.ராஜசேகர்
2 Hrs 39 Min

நண்பர்கள் எதிரிகளான கதையை பல தமிழ் படங்களில் பார்த்தபோதிலும் எனிமி புதிதாக காட்ட முயற்சி செய்திருக்கிறது. இரண்டு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட நபர்கள் மோதிக் கொள்வதை திரையில் பார்ப்பது எப்பொழுதுமே சுவாரஸ்யம் தான்.

விஷால், ஆர்யா  எனும் இரண்டு ஆக்ஷன் ஹீரோக்களால் அது ஓரளவுக்கு ஒர்க்அவுட்டும் ஆகியிருக்கிறது. தனக்கு எது வருமோ அதை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.

முன்னாள் சிபிஐ அதிகாரி(பிரகாஷ் ராஜ்)தன் மகன் மற்றும் பக்கத்து வீட்டுக்கார பையனுக்கு பயிற்சி அளிப்பதுடன் படம் துவங்குகிறது. அந்த இரண்டு பேரையும் காவல் துறையில் சேர்த்து பெரிய ஆளாக பார்க்க வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம்.


சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார் சோழன்(விஷால்). தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் தமிழ் சமூகத்திற்கு உதவி செய்கிறார். ஆனால் ஆர்யாவை எதிர்கொள்வோம் என்பது அவருக்கு தெரியாது. அப்படி எதிர்கொள்ளும்போது கொலை முயற்சியை முறியடிக்கிறார்.

அங்கு தான் கதை சூடுபிடிக்கிறது. ஒரு குழந்தை வளர்ந்து நல்லவராவதும், கெட்டவராவதும் குறித்து திரையில் காட்டியிருக்கும் காட்சிகளில் வலுவில்லை. வேகமாக நகரும் கதைக்கு காதல் டிராக் கை கொடுக்கவில்லை.

அஸ்மிதாவாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் மிர்ணாளினி ரவி. ராஜீவாக ஆர்யா பக்கவாக இருக்கிறார். இது படம் என்பதை மறந்து ராஜீவ் மீது பார்வையாளர்கள் கோபம் அடைகிறார்கள்.

ராஜீவ் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கியிருந்தால் சிறந்த வில்லன்களில் ஒருவராக இருந்திருக்கும். விஷால் எதிர்பார்த்தது போன்றே சிறப்பாக நடித்திருக்கிறார். சாம் சி.எஸ்.-இன் பின்னணி இசை அபாரம்.

கிளைமாக்ஸில் வரும் ஸ்டண்ட் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.