‘மகாசேனா’ திரைப்பட விமர்சனம்
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்கத்தில் விமல், சிருஷ்டி டாங்கே, யோகிபாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சுபாங்கி ஜா, சிவகிருஷ்ணா, இலக்கியா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘மகாசேனா’
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
யாளி மலைப்பகுதியில் உள்ள குரங்கணி எனும் கிராமத்தில் யார் கண்ணுக்கும் தெரியாத ‘யாளீஸ்வரர் சிலை’ ஒன்று கோயிலில் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சாமி சிலையை தொட்டு பார்த்தால் தான் அங்கு சாமி சிலை இருப்பது உணர முடியும். சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் தான் அச்சிலையை அனைவரும் கண்களால் காண முடியும்.
இந்த சாமி சிலையை இன்னொரு பழங்குடி மக்கள் அபகரிக்க 3000 ஆண்டுகள் முயற்சி செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக முயற்சிகள் செய்தும் அது தோல்வியில் தான் முடிந்தது. எனவே இரு கிராம மக்களிடையே பகை தொடர்ந்து இருந்து வருகிறது. இன்று குரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தலைவன் செங்குட்டுவன் (விமல்) சேனா என்ற யானையை தனது மகனை போல் பாவித்து வளர்த்து அதனுடன் வலம் வந்து அந்த கிராம மக்களுக்கு சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.
பழங்குடித் தலைவி கங்கா (மஹீமா குப்தா) செங்குட்டுவனைக் கொன்று, அந்த சாமி சிலையை அடைந்தே தீருவேன் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறாள். அதே நேரத்தில் ஊழல் நிறைந்த ஒரு வனப்பகுதி காவல் அதிகாரி பிரதாப் (ஜான் விஜய்) என்பவனும் அந்த சிலையை விரும்புகிறான். வனப்பகுதி காவல் அதிகாரி பிரதாப் சாமி சிலையை கைபற்ற பழங்குடித் தலைவி கங்காவுக்கு உதவுவது போல் நடித்து அவர்களை அந்த சாமி சிலையை எப்படியாவது கொண்டு வரும்படி சொல்கிறான்.கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த கிராம மக்கள் முயற்சி செய்கிறார்கள்.
திருவிழா வேளை தீவிரமாக நடைபெறும் போது செங்குட்டுவன் வளர்த்து வந்த சேனாவுக்கு மதம் பிடித்து செங்குட்டுவன் மகள் அல்லியை (இலக்கியா) கொன்று விடுகிறது.அத்துடன் யானையும் திடீரென காட்டுக்குள் ஓடி காணாமல் போகிறது. சித்ரா பௌர்ணமி அன்று அடிவாரம் பகுதி மக்கள், சாமி சிலையை திருட முயலும் போது செங்குட்டுவன் மற்றும் கங்கா தலைமையில் இரு கிராம மக்களும் மோதிக்கொள்கிறார்கள்.
அந்த வேளையில் வனப்பகுதி காவல் அதிகாரி பிரதாப் காவல்துறையின் உதவியுடன் சிலையை திருடும் கிங் ஆஃப் காட் (கபீர் துஹான் சிங்) என்ற பணக்கார கொள்ளையனுடன் கூட்டு சேர்ந்து செங்குட்டுவன் அவரது கிராம மக்கள் மற்றும் கங்கா அவளது கூட்டாளிகளை கொடூரமாக தாக்கி, துன்புறுத்தி சாமி சிலையை நெருங்குகின்றனர். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை......
விமல், வழக்கம் போல் அலட்டிக் கொள்ளாமல் தனது கதாபாத்திரத்தை சாதாரணமாக கையாண்டுள்ளார். நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, பழங்குடியின பெண்ணாகவும், வீரம் மிக்கவராகவும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர், காட்சிகளை படமாக்கிய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் காட்டியிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஆனால்
கதை பெரிய அளவில் இல்லை... யோகிபாபு காமெடி சரியில்லை என்றே சொல்லலாம்.....
மொத்தத்தில் இந்த ‘மகாசேனா’ சுமார்.....
RATING: 3/5

கருத்துரையிடுக