ஊரடங்கு கட்டுபாடுகள் அறிவிப்பு
- மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
- அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை
- அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு
- சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்
- திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி.
- அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
- 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்
- வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்
- உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி
கருத்துரையிடுக