கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டி!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் இணைந்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பல மாத விடா முயற்சிக்கு பிறகு இந்த வார இறுதியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும்.
அரை இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் வழங்கவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்க இருக்கிறார். இது மேலும் உங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். இரண்டு நடுவர்களுடன் இணைந்து "செம்ம போத" பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 3 அணிகளாக பிரிந்து நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்த வரும் இந்த அரையிறுதி போட்டியில் ராய்சன் – மெர்சினா மற்றும் அபிராஜ் – அஞ்சனா அணிக்கும், காவ்யா - மகாலட்சுமி மற்றும் நாவலரசன் – அலிஷா அணிக்கும், கார்த்திக் - தியாகு மற்றும் ஐஷு – அல்ஹேனா அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. எனவே 1 மற்றும் 2 ஜனவரி 2022 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மாலை 7.30 மணிக்கு டியூன் செய்யுங்கள். சிறந்த நடன கலைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.
கருத்துரையிடுக