முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவிற்கு மணி மண்டபம் மற்றும் முழு திருஉருவ சிலை அமைக்க கோரிக்கை!
அண்மையில் மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா அவர்களுக்கு தமிழகத்தில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்க கோரி தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பினர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அரவிந்தன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அவர்களிடமும் முதல்வரின் நேர்முக உதவியாளரிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அரவிந்தன்:
முதல்வரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து அண்மையில் மறைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யாவிற்கு தமிழகத்தில் திருஉருவ சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக, மறைந்த ரோசய்யா அய்யா பல்வேறு நன்மைகள் தமிழக மக்களுக்கு செய்திருப்பதாகவும் செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
கருத்துரையிடுக