ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் பரிசு!
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்று ரேஷன் அட்டைத்தாரர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் பொங்கல் தொகுப்பு வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக