'ராக்கி' திரைப்பட விமர்சனம்

'ராக்கி' திரைப்பட விமர்சனம் 


Cast:

Vasanth Ravi - Rocky

Bharathiraja - Manimaran

Raveena Ravi - Amudha 

Rohini - Malli (mother)

Anisha - Malli ( child artist)

Ravi venkataraman - Saami 

Ashraf Mallisery - Dhanraj

Poo Ramu - Rolex Mahalingam 

Rishikanth - Uday

Jayakumar - Natraj 

Gana Dharanani, Aakash, Jimikili - boys gang

Crew:

Arun Matheswaran - Director

CR Manoj Kumar - Producer

Shreyas Krishnan - Cinematography

Nagooran - Editor

Ramu Thangaraj - Art director

Darbuka Siva - Music director

Sound design - Hariharan, Sachin (sync cinema)

Sound mixing - Raja krishnan MR

Lyrics - kaber vasuki ( kaalam oru drohi, vanma pathai)

Madan karky (aalilalilo)

Vairamuthu (ore oru oorula)

Poster designs - Venky

Pro - Nikil Murukan

ரவுடிசம் செய்து வரும் பாரதிராஜாவுடன் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வசந்த் ரவியின் அம்மா ரோகிணியை கொலை செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் வசந்த் ரவி, பாரதிராஜா மகனை கொல்கிறார்.

ஜெயிலுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து திரும்பும் வசந்த் ரவி, திருந்தி வாழ முயற்சி செய்கிறார். ஆனால், பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்ய துடிக்கிறார். இறுதியில் பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்தாரா? வசந்த் ரவி பாரதிராஜாவின் தொந்தரவை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா ரவி, கோபம், பாசம் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். படம் பார்ப்பவர்களை தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோகிணி.

பாரதிராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வேறொரு பாரதிராஜாவை பார்க்க முடிகிறது. மகனை கொன்றவனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடிப்பது பாசத்தின் உச்சம். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ரவுடிசம், பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். வழக்கமான கதை என்றாலும் அதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். திரைக்கதை நகர்வுக்கு ஏற்றார் போல் ஒரு தலைப்பு வைத்து இயக்கி இருப்பது சிறப்பு.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுபோல் தர்புகா சிவாவின் இசையும் வலு சேர்த்து இருக்கிறது. கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

கதை சொன்ன விதத்தைவிடுத்து சற்று தள்ளி நின்று 'ராக்கி'யை ஆராய்ந்தால், அது வழக்கமானதொரு பழிக்குப் பழி வாங்கல் கதையாக மட்டுமே தன் வெளியைச் சுருக்கிக் கொள்கிறது. மேக்கிங்கிற்காக மெனக்கெட்டவர்கள், கதை சொல்லல் பாணிக்காகச் சிரத்தை எடுத்தவர்கள், கொஞ்சம் கதைக்கருவையும் வித்தியாசமாக யோசித்திருக்கலாம். ஒரு பரபர ஆக்ஷன் கதையில் திருப்பங்களே இல்லாமல் போனதும் மைனஸ்! கடைசியில் வரும் அந்த சின்ன சர்ப்ரைஸ்கூட 'கைதி'யை நினைவுபடுத்திச் செல்கிறது.

தமிழ் சினிமாவின் மற்றுமொரு புதிய முயற்சியாய் தடம் பதிக்கிறான் இந்த 'ராக்கி'


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.