'தூநேரி' திரை விமர்சனம்
கருவிலேயே நடிக்கத் தெரியும் என்பது போல படத்தில் வெள்ளக்கனியாக வரும் சிறுவன் அபிஜித் அபாரமாக நடித்திருக்கிறான். ஜான் விஜய், கருப்பசாமி கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் இன்னும் கூட முனைப்போடு நடித்திருக்கலாம்.
ஒரு பேய் படத்திற்கான கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் அதற்கான விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்குவதில் கூடுதல் சிரத்தையைச் செலுத்தியிருக்கலாம் அறிமுக இயக்குநர் சுனில் டிக்ஸன். இவர், ஆக்கர் ஸ்டுடியோஸில் VFX இயக்குநராகப் பணியாற்றியவர். படத்தில் இடம்பெறும் சிஜி ஷாட்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மலை பிரதேசத்தில் நிகழும் கதை என்பதால், ஒளிப்பதிவாளர்கள் காலேஷும் ஆலெனும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என தங்கள் கேமராக்களின் வாயிலாக இயற்கையின் அழகை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
'தூநேரி' குழந்தைகள் கொண்டாடும் படம்....
கருத்துரையிடுக