நடிகர் டெல்லி கணேஷ் எழுதியுள்ள "பிள்ளையார் சுழி" நூல் வெளியீட்டு விழா!
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தினர் நடத்திய திரைப்பட நடிகர் திரு.டெல்லி கணேஷ் எழுதியுள்ள "பிள்ளையார் சுழி" நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரின் பி.எஸ். மேல்நிலை பள்ளி வளாகத்தில் "டில்லி தர்பார்" காணொலிக்காட்சியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உரத்தசிந்தனையின் பொதுச்செயலாளர் திரு.உதயம் ராம் முக்கிய பிரமுகர்களை சிறப்பாக அறிமுகம் செய்த பின் அவரவருக்கான இடங்களில் அமர்ந்து மேடையை அலங்கரித்தனர்.
ஸ்ரீ சகோதரிகள் மதுவந்தி விஜயகணேஷ், சுமேதா விஜயகணேஷ் ஆகிய இரு சிறுமிகளும் "மைத்ரீம் பஜத அகில ஹருஜ் ஜேத்ரீம்" -நட்பினை விதைப்போம் இதயங்கள் வெல்வோம் என்ற பரமாச்சாரியார் இயற்றிய பாடலை இறைவணக்கமாக இனிய குரலில் இரு மொழிகளிலும் பாடி மகிழ்வித்தனர்.
சாவித்திரி பவுண்டேஷன்ஸ் நிறுவனர் கலைமாமணி ஜெ.பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் இனிதே வரவேற்றார்.
தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் தலைமையில் தமிழ்நாடு Dr.M.G.R. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் திருமதி. சுதா சேஷய்யன் அவர்கள் திரைப்பட நடிகர் கலைமாமணி டெல்லி கணேஷ் எழுதிய "பிள்ளையார் சுழி" நூலை வெளியிட முதல் பிரதியை பிரபல எழுத்தாளர் திருமதி.சிவசங்கரி அதைப்பெற்று சிறப்பித்தார்.
தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் தனது தலைமை உரையில்:
திரைத்துறையில் வெள்ளை/கருப்புப் படத்தில் இருந்து இன்றைய வண்ணப்படத்தில் கூட கோலோச்சியவர் இன்று எழுத்துலக வாழ்க்கைக்கு "பிள்ளையார் சுழி" போட்டிருக்கிறார் என்றார். அவருடைய எழுத்துலக சாதனையை இனிமேல் உலகம் பார்க்கப்போகிறது என்றார்.
பிரபல எழுத்தாளர் திருமதி.சிவசங்கரி தனது சிறப்புரையில்:
இந்த "பிள்ளையார் சுழி" புத்தகத்தின் வாசிப்புத்திறனும் (Readability), நடந்ததை நடந்தபடிகூறும் வெளிப்படைத்தன்மையும் சிறப்பம்ச ங்கள் என்று கூறிச்சிறப்பித்தார்.
திரைப்பட இயக்குனர் திரு.வஸந்த் S.சாயி தனது வாழ்த்துரையில்:
திரைப்பட நடிகர்களில் திரு.டெல்லி கணேஷுக்கு இணையான எளிமை, திறமை, புத்திகூர்மையானவர் எவரும் கிடையாது. என்று கூறினார்.
சாணக்யா வலையொளிக்காட்சியின் ஊடகவியலாளர் திரு.ரங்கராஜ் பாண்டே தனது வாழ்த்துரையில்:
தானும், திரு.டெல்லி கணேஷும் இணைந்து நடித்தபோது ஒரு காட்சியில் கஷ்டப்படும்போது அவர் மூன்று காட்சிகளை ஒரே TAKE-ல் நடித்ததைக்கூறிச்சிறப்பித்தார். இன்றைய நிகழ்ச்சி அவருக்கு வாழ்நாள் சாதனை விருது அவருக்கு வழங்கியதுபோல் இருக்கிறது.
ஆழ்வார்க்கடியான் திரு. மை பா.நாராயணன் தனது வாழ்த்துரையில்:
திரு.டெல்லி கணேஷ் அவர்களின் வெற்றிக்குக் காரணம் அவருடைய வாழ்க்கைத் துணைவி அமைந்ததுதான் என்றும், திரைப்பட த்தில் வெற்றிகள் பல தந்த இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களின் அடக்கத்தைப் பாராட்டி உணர்வு பூர்வமாகவும், கலகலப்பாகவும் பேசிச் சிறப்பித்தார்.
மத்யமர் முகநூல் குழுமத்தின் நிறுவனத்தலைவர் திரு.ஷங்கர் ராஜரத்னம் வாழ்த்துரையில்:
மத்யமர் முகநூலில் வாரம் மூன்று தடவை தொடராக வந்து பல ரசிகர்களால் நெகிழ்ச்சியுடன் பாராட்டப்பட்டு வெற்றிபெற்றதுதான் இன்று புத்தகவடிவில் மீண்டும் வெற்றி பெறப்போகிறது என்றார். மேலும் தனது சுயசரிதையை எழுத மத்யமர் குழுவைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறினார்
மத்யமர் முகநூல் குழுமத்தின் திரு.எஸ்.ஆர்.சுவாமிநாதன் தனது வாழ்த்துரையில்:
திரு. டெல்லி கணேஷ் அவர்கள் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையின் அரிய தகவல்களை எளிய முறையில் பாசாங்கு இல்லாமல் கூறியுள்ளதுதான் இந்த நூலின் வெற்றிக்குக் காரணம் என்றார்.
Dr.M.G.R. மருத்துவப் துணைவேந்தர் டாக்டர் திருமதி.சுதா சேஷய்யன் தனது சிறப்புரையில்:
அடுத்த தலைமுறை என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ அதையும், நம்மை அண்டிப்பிழைக்கும் விலங்குகளை எப்படி வளர்க்கவேண்டுமோ ஆகியவற்றை நிகழ்ச்சிகளாக திரு.டெல்லி கணேஷ் இந்த நூலில் சிறப்பாகக் கூறியுள்ளார். தன்னுடைய சொந்த ஊரின் தாமிரபரணியின் வெளிப்படைத் தன்மையைப் படித்ததும் தனது தாய் அருகில் இருந்த உணர்வு அவருடைய நூலைப் படிக்கும்போது ஏற்பட்டது என்றார். THIS BOOK IS A WONDERFUL RECORD FOR POSTERITY. இந்த புத்தகம் வருங்கால வாசகர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், தான் ஒரு பிரபலம் ஆக எண்ணாமல் சாதாரணனாக எழுதியுள்ளார் என்றார்.
ஓவியர் திரு.சீதாபதி ஸ்ரீதர், ஓவியர் திருமதி.ரேவதி பாலாஜி, கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த திரு.பத்ரி சேஷாத்ரி, நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய திரு.உதயம்ராம், ஒளிப்படம் எழுதிய திரு.போட்டோ மணி, காணொலிக் காட்சி வழங்கிய அயன் மீடியாவின் திரு.ராஜாராம், உரத்தசிந்தனை தலைவர் திரு.எஸ்.வி.ராஜசேகர், திருமதி.பத்மினி பட்டாபிராமன், திரு. கணேஷ் கிருஷ்ணா ஆகியோர் நூலாசிரியர் திரு.டெல்லி கணேஷ் அவர்களால் மேடையில் சிறப்பிக்கப்பட்டனர்.
நிறைவாக திரைப்பட நடிகர் கலைமாமணி திரு.டெல்லி கணேஷ் ஏற்புரை நிகழ்த்தியதோடு தனது வாழ்க்கையில் சந்தித்ததையும் நடந்தவற்றையும் ஓரங்க நாடகமாக நடித்துக்காட்டிதோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறிச் சிறப்பித்தார்.
VIDEO HERE:
கருத்துரையிடுக