ஆர்.ஆர்.ஆர். படத்தை மார்ச் 18-ல் வெளியிட முடிவு!

ஆர்.ஆர்.ஆர். படத்தை மார்ச் 18-ல் வெளியிட முடிவு! கொரோனா குறைந்து நிலைமை சீரடைந்தால் மார்ச் 18-ம்தேதி ஆர்.ஆர்.ஆர். படத்தை வெளியிடத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் இறுதி முதற்கொண்டு கட்டுப்பாடுகள் கூடுதலாக்கப்பட்டன. அந்த வகையில், இம்மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஜனவரி 7-ம்தேதி வெளியாக வேண்டிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், ஜனவரி 13-ம்தேதி வெளியாக வேண்டிய வலிமை உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் மாதம் முதல் பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். இதையடுத்து, படங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.


அந்த வகையில் ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரெய்லர், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி. என்டர்டெய்ன்மென்ட், இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கி, அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால், ஆர்.ஆர்.ஆர். படத்தை மார்ச் 18, 2022 அன்று வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம். மற்றபடி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஏப்ரல் 28,2022 அன்று வெளியாகும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மார்ச் 18-ம் தேதிக்கு இன்னும் சுமார் 50 நாட்கள் உள்ளன. அதற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கையில் ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ரசிகர்கள் உள்ளனர்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.