ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு... என்னென்ன இயங்கும்? இயங்காது?!

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு... என்னென்ன இயங்கும்? இயங்காது?!இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதுதொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்  கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் அறிவிக்ப்பட்டுள்ளது. அதன்படி, 

எவையெல்லாம் செயல்படும்:

 1. மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும், பெட்ரோல் பங்குகள் செயல்படும்
 2. உணவகங்கள் செயல்படும். பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி.
 3. அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.
 4. திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம்.
 5. காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும்புறநகர் ரயில் சேவை செயல்படும்
 6. பத்திரிகையாளர்கள் உரிய அடையாள அட்டை வைத்து செய்தி சேகரிக்க செல்லலாம், பத்திரிகைகள் விநியோகம் செயல்படும்.  

 • எவற்றுக்கெல்லாம் தடை:

  • பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.
  • கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை
  • மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட
  • அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் தடை


லேபிள்கள்: ,

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.