''தேள்'' திரை விமர்சனம்!

''தேள்'' திரை விமர்சனம்! 


நடிகர்பிரபுதேவா
நடிகைசம்யுக்தா ஹெக்டே
இயக்குனர்ஹரிகுமார்
இசைசத்யா
ஓளிப்பதிவுவிக்னேஷ் வாசு

ஹரிஹரன் இயக்கிய ''தேள்'' என்ற படத்தை நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இந்த பொங்கல் தினத்தன்று வெற்றிகரமாக தியேட்டர்களில் வெளிவந்துள்ளது. பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் காமெடி கலாட்டா செய்ய யோகிபாபு என்று படம் நகர்கிறது .

படத்தின் மையப் புள்ளி என்னவென்றால் கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதை அமைந்திருக்கிறது. " தேள் " எப்படி தன் அருகில் வருபவர்களை கொட்டிக்கொண்டே இருக்கும், கோபத்துடன் விஷத்தை கக்கும் என்பதுபோல பிரபுதேவா உடைய கதாபாத்திரம் தன் அருகில் யாரையும் நெருங்க விடாமல் அனைவரையும் விஷம் போல கொட்டிக்கொண்டே இருக்கும் ஒரு புரியாத புதிராக அமைந்துள்ளது படத்தின் முதல் பாதி .

கோயம்பேடு மார்க்கெட், பலவிதமான வியாபாரங்கள், தினமும் கத்தை கத்தையாய் உருளும் பணக்கட்டுகளை தினசரி வியாபாரிகளுக்கு வட்டியாக கொடுத்து மாலைப் பொழுதுக்குள் வசூல் செய்து பணம் சம்பாதிக்கும் ஒரு கும்பல். அன்றாட தேவைக்காக அதிக வட்டிக்கு பணம் வாங்கி கஷ்டப்பட்டு கடைசியில் பணம் கட்ட முடியாமல் மானம் மரியாதை போன்றவற்றை இழந்து அடி உதை வாங்கி ஒரு சிலர் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்டு குடும்பத்தை அனாதையாக விட்டுச் செல்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் வட்டி வாங்கும் நபர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்கும் பொழுது அவர்களை அடித்து உதைத்து தும்சம் பண்ணி பணத்தை வசூல் செய்வது தான் படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம். 


ஈவு இரக்கமின்றி யாராக இருந்தாலும் அவர்களை அடித்து துவைத்து காயப்படுத்துவது மட்டுமல்லாமல் தனி ஒரு மனிதனாக பித்துப் பிடித்தவன் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் தேள் படத்தின் கதாநாயகன் பிரபுதேவா மனநிலை என்ன என்பதை முதல் பாதியில் நாம் புரிந்து கொள்ள முடியாது. 

ஒரு அனாதையாக பிறந்து வளர்ந்து தீய செயல்களில் ஈடுபட்டு அடிதடியில் பணம் சம்பாதிக்கும் ஒரு குணாதிசயம் கொண்ட கதாநாயகன் பல வருடங்களுக்குப் பிறகு திடீரென்று ஒரு நாள் "நான் தான் உன் தாய்" என்று ஒரு பெண் வந்து நிற்கும் பொழுது என்ன நடக்கிறது என்பது படத்தின் இரண்டாம் பாதி. இந்த பொங்கல் 2022 பிரபுதேவா நடிப்பில் வித்தியாசமான ஒரு முயற்சி மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கலாம். இந்தத் தேள் பல மனங்களை கொட்டும். கிளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பாக கண்ணீர் சொட்டும்.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.